புண்ணியம் தரும் பூஜைகள்
வெள்ளிக்கிழமை மற்றும் கார்த்திகை தீப திருநாள் அன்று செய்ய வேண்டிய பூஜைகள்
on புண்ணியம் தரும் பூஜைகள் பகுதி 41
1. கங்கா கெளரி பூஜை,
2. தச தீப பூஜை
நதி தெய்வமான கங்கா தேவிக்கான பூஜை,
மலைமகளாக பார்வதி தேவியைக் குறிக்கும் பூஜை,
ஒரு வெள்ளி அல்லது பித்தளை செம்பில் சுத்தமான
நீர் ஊற்றி பச்சை கற்பூரம், ஏலக்காய், கிராம்பு போட்டு
அதன்மேல் தேங்காய்க்கு மஞ்சள் பூசி கலசமாக
ஆவாஹனம் செய்யலாம். இல்லாவிட்டால் வித்தியாசமாக
செம்பின் மீது ஒரு தட்டில் தீபம் ஏற்றி
கங்கா மாதாவை ஆவாஹனம் செய்யலாம்.
அருகில் கெளரி தேவி முகம் வைத்து அல்லது
மஞ்சளால் முகம் செய்து வைக்கலாம். கங்கா
அஷ்டோத்திர சத நாமாவளி தெரிந்தால்
சொல்லலாம். இல்லாவிட்டால் கங்கேசயமுனேச
மந்திரத்தை 36 முறை சொல்லி பூக்களால் பூஜை
செய்யலாம். கெளரி அஷ்டோத்திர சத நாமாவளி
சொல்லி, மஞ்சள் தூள், குங்குமம், சந்தனத்தூள்,
காசுகளால் அர்ச்சனை செய்து, எலுமிச்சம்பழ
ஜூஸ், பாசிப்பருப்பு பாயாசம் நிவேதிக்கலாம்.
பூஜை நிறையவடைந்தபின் ஆரத்தி பாடல் பாடலாம்.
பூஜா பலன் :
கங்கை நீருக்கு பூஜை செய்வதால்
பூர்வ ஜென்ம பாவம் தீரும். இந்த
பிறவியில் செய்யும் பாவங்கள் நீங்கும்,
அடுத்த பிறவி நல்ல பிறவியாக கங்கா
மாதா ஆசிதருவார். அந்த
தீர்த்தத்தை குடிக்கலாம், தலையில்
தெளித்துக்கொள்ளலாம். செடிகளுக்கு
ஊற்றலாம். கெளரி அருளால் கல்யாண,
சந்தான தீர்க்க சுமங்கலி பாக்யங்கள்
கிடைக்கும், வியாபாரம் பெருகும்.
இந்த பூஜையை அமாவாசை, நிறைந்த
பெளர்ணமி நாட்களிலும் செய்யலாம்.
பத்து விதமான தீபங்களை தீபத்திருநாள் அன்று
காலை நேரம் வைத்து செய்யும் பூஜை,
1. வெள்ளி,
2. பித்தளை,
3. கார்த்திகை தீபம் (புதியது),
4. 5 முகம் உள்ள கார்த்திகை தீபம்,
5. குபேர தீபம் (கண்ணாடி தீபம்)
6. கர தீபம் (ஒயிட் மெட்டல் 2 கைகளுக்கு நடுவில் உள்ள தீபம்),
7. துளசி மாடம் (டெரகோட்டா தீபம்),
8. நெல்லி தீபம் – பெரிய நெல்லிக் காயை நடுவில் பள்ளமாக செய்து தீபம் ஏற்றவும், 9. புஷ்ப தீபம்---ஒரு தட்டில் பலவித பூக்கள் வைத்து நடுவில் தீபம் வைக்கலாம்.
10. ஜல தீபம் – ஒரு கிண்ணத்தில் நீர் ஊற்றி மிதக்கும் தீபம் ஏற்றலாம். இந்த தீபங்களை ஓம் என்று எழுதி அதற்குள் வைக்கலாம் அல்லது தீபம் போல் வரைந்து அதன் மேல் ஏற்றலாம்.
வித்தியாசமாக, அழகாக, அற்புதமாக, ஆனந்தமாக, இருக்கும்.
திருவிளக்கு போற்றி மந்திரம் சொல்லி, உலர்ந்த
திராட்சை பழத்தால் அர்ச்சனை செய்து இனிப்பு
அவுல் பொரி செய்து நிவேதிக்கலாம். ஆரத்தி பாடல்
பாடி பூஜையை நிறைவு செய்யலாம்.
பூஜா பலன் :
தீபத்திருநாள் அன்று தீப
பூஜை செய்யும் பாக்யம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை.
அனைத்து சகோதரிகளும் இந்த பூஜையை அவசியம்
அவரவர் வீட்டில் கட்டாயம் செய்ய வேண்டும். வீட்டில்
சந்தோசம், ஆனந்தம் பெருகும். வீட்டில் சுப
விஷேசங்கள் நடக்கும். நாட்டில் நல்லதே
நடக்கும். குபேர தீபத்திற்கு பூஜை செய்வதால் வீட்டில்,
நாட்டில் செல்வம் பெருகும்.
ஜலதீபம் (நீர் தீபம்) ஏற்றுவதால் நாட்டில், வீட்டில் தண்ணீர் கஷ்டம் தீரும். துளசி மாட தீப பூஜை செய்ய, துன்பம், பாவம் தீரும்.நெல்லி தீப பூஜையால் மோட்ச வாழ்வும், சிவன் ஆசியும் கிடைக்கும்.
இதை காண வந்த அனைத்து கண்களுக்கும் என்னுடைய நன்றிகள் பல.உங்கள் கருத்துக்களை தெரிவித்தால் நான் மேலும் எழுத ஒரு தூண்டுகோலாய் அமையும்.
உங்கள் அன்பு தோழி
ஈஸ்வரி சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக