ஸ்ரீதேவியும், ஜேஷ்டாதேவியும்
தேவர்களும் அசுரர்களும் ஒன்று சேர்ந்து பாற்கடலைக் கடைந்த பொழுது பல்வேறு பொருட்கள் வெளியே வந்தன.சந்திரன்,காமதேனு,கற்பக விருக்ஷம் போன்ற பல பொருட்கள் வந்த பின் "மூத்த லக்ஷ்மி " என்று பெயர் கொண்ட ஜேஷ்டாதேவி பாற்கடலில் இருந்து தோன்றினாள்.
ஜேஷ்டாதேவிக்கு பின் தேன்றியவளே ஸ்ரீ மஹாலஷ்மி.மஹாலக்ஷ்மிதேவியே வாழ்வின் சகல ஐஸ்வரியங்களுக்கும்,மேன்மைகளுக்கும் காரணமாவாள்.ஜேஷ்டாதேவி வசிக்கும் இடங்களில் ஸ்ரீ லக்ஷ்மிதேவி திரும்பிக் கூட பார்க்க மாட்டாள்.அதுபோலவே ஸ்ரீ லக்ஷ்மிதேவி வசிக்கும் இடத்தில் ஜேஷ்டாதேவிக்கு அனுமதி இல்லை.
ஜேஷ்டாதேவி வாசம் செய்யும் இடங்களான சூது விளையாடும் இடங்கள்,மது அருந்துபவர்கள் இருக்கும் இடங்கள் , ஒழுக்கம் அற்ற ஆண்கள்,பெண்கள் இருக்கும் இடங்கள்,எல்லா நேரங்களிலும் சண்டை,சச்சரவு போடும் இல்லங்கள், விளக்கேற்றி இறைவனை கும்பிடும் நேரத்தில் உறங்கி கொண்டு இருக்கும் இல்லங்கள் ஆகிய இடங்களில் திருமகள் தனது திருப்பாதத்தை வைக்க மாட்டாள்.ஆனால் இத்தகைய இடங்களையே தேர்ந்து எடுத்து மிகுந்த விருப்பமுடன் வாழ்வாள் ஜேஷ்டாதேவி.
அஜயன்,விஜயன் என்ற இருநண்பர்கள் ஒரு கிராமத்தில் வசித்து வந்தனர்.இவருடைய வீடுகளும் அருகருகே இருந்தனர்.இருவரும் நெருங்கிய நண்பர்கள்.ஆரம்ப காலத்தில் அவர்களது கிராமம் மிகவும் செழிப்பாக நீர்,நில வளம் நிறைந்ததாக அமைந்து இருந்தது.மிகுந்த செல்வ செழிப்பு மிக்கதாக இருந்ததால் அங்குள்ள மக்கள் சூது,மது,ஒழுக்கம் தவறியும் வாழ்ந்து வந்தனர்.வில்வம்,நெல்லி,துளசி போன்ற புனித விருஷங்களை சிறந்த முறையில் பராமரிக்க தவறினார்கள்.சிறிது சிறிதாக லக்ஷ்மி கடாக்ஷம் அந்த கிராமத்தை விட்டு விலக ஆரம்பித்து,பின்னர் பஞ்சம்,பட்டினி குடி புகுந்தது.அந்த கிராமத்தை மீண்டும் செழுமையடைய செய்ய ,ஆலயங்களில் பூஜையும்,விழாக்களும் எடுத்து மக்கள் மனதில் ஆன்மீக சிந்தனைகளை புகுத்தி மீண்டும் தங்கள் ஊரை செழிப்புடையதாக மாற்றினர்.
லக்ஷ்மி தேவி நம் இல்லம் தேடி வருவதற்கு இல்லத்தலைவி அதிகாலையில் எழுந்து,குளித்து நெற்றியில் குங்குமம் இட்டு நல்ல ஆடைகளை உடுத்தி வீட்டு வாசலில் கோலமிட்டு,துளசி மாடம் இருந்தால் அங்கும் கோலம் இட்டு ஒரு சிறு அகல்விளக்கை வைத்து பூஜை செய்ய வேண்டும்.அதேபோல் பூஜையறையில் அஷ்ட ஐஸ்வரிய கோலங்களான சங்கு,சக்கரம்,இருதய கமலம்.காரிய சித்தி கோலம் போன்ற கோலங்களை இட்டு வழிபட வேண்டும்.லக்ஷ்மி தேவி வந்து விட்டாலே பெருமாளும் நம் இல்லம் தேடி வந்து விடுவார்.இனிமேல் சொல்ல வா வேண்டும்?நம் வீட்டின் செழிப்பை .நாமும் இதைப்பின்பற்றி நம் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் எல்லா வளமும் பெற வழிவகுப்போம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக