திவ்ய பூஜை கதை
என்னுடைய பதிவில் ஷீரடி சாய் பாபாவின் திவ்யபூஜை கதை எப்படி செய்வதுயென போட்டு இருந்தேன்.அதை செய்து பலன் பெற்றவர்களது கதை இது.
குடிப்பழக்கத்தை விட பாபாவின் அருள்
சகுந்தலா பாய் எனும் பெண்மணி சில வீடுகளில் வீடு வேலை செய்து வந்தாள்.அவளுடைய 18வயது மகளும் சில வீடுகளில் வேலை செய்து தாய்க்கு உதவினாள்.அவளுடைய கணவன் ஒரு மிகச் சிறந்த எலக்ட்ரீஷியன்.ஆனால் குடிப்பழக்கத்திற்கு அடிமையாய் இருந்தான்.எனவே,அவன் சம்பாத்தியம் எல்லாம் குடியிலேயே கரைந்தது. பக்கத்து வீட்டு மாதவி அவளிடம், தன் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை சாயி பாபா பஜனையும்,பூஜையும் நடக்க இருப்பதாகவும்,அதில் அவள் கணவனுடன் கலந்து கொள்ளுமாறும் கூறினாள்.அவளும் கணவருடன் பூஜையில் கலந்து,பிரசாதம்,விபூதியை பெற்றுச் சென்றாள்.சில நாட்களில்,அவள் கணவன் குடிப்பதை நிறுத்தி விட்டார்.மேலும்,வேலையில் மிக கவனமாக செய்து,முழு சம்பளத்தையும் சகுந்தலாவிடம் கொடுத்தார்.அவளும் நல்ல வரனுடன் மகளின் thiruman ஹத்தை நடத்தினாள்.இப்பொழுது சகுந்தலா பாய் பாபாவின் மிக சிரத்தையான பக்தையாகி விட்டார்.
பாபாவின் அருளால் வேலை கிடைத்தது
என் பெயர் சுமன்.நான் இந்தூரில் உள்ள அஸ்டனாகஜ் என்னும் இடத்தில் வசிக்கிறேன்.எனது மகன் கவுரவ் உஜ்ஜயினில் எம்.பி.ஏ படித்தான்.அவனுடைய கேம்பஸ் இண்டர்வியூவில் ஐசிஐசிஐ வங்கியில் வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டான்.அவனுடன் மொத்தம் 8பேர் தேர்ச்சி பெற்றனர்.நாங்கள் மிக மகிழ்ந்தோம்.ஆனால் 5மாதங்களுக்கு அவனுக்கு வேலைக்கான உத்தரவு வரவில்லை.மற்ற 7பேரும் வேலையில் சேர்ந்தனர்.நான் கவுரவிடம் நம்பிக்கையுடன் பாபாவை பிராத்தனை செய்யும்படி,கூறினேன்.ஒருநாள் திவ்ய பூஜையை பற்றி அவனிடம் கூறினேன்.நான் 5வாரங்களுக்கு சங்கல்பம் செய்து பூஜையை ஆரம்பித்தேன்.கவுரவும் சங்கல்பம் செய்து பூஜையில் கலந்து கொண்டான்.4வாரங்கள் பூஜை முடிந்து கவுரவுக்கு வேலைக்கான உத்தரவு வந்தது.அவனும் வேலையில் சேர்ந்தான்.
என் பெயர் ஸ்ரீமதி பூஜாரி.நான் இந்தூரில் உள்ள மால்வா விஜய நகரத்தில் வசிக்கிறேன்.நான் எனது சகோதரனின் வேலைக்காக 11வாரம் சங்கல்பம் எடுத்து பாபா திவ்யபூஜை செய்தேன்.10ஆவது வாரத்தில் எனது சகோதரனுக்கு ஒரு நல்ல வேலை கிடைத்தது.
எனது பெயர் ஸ்ரீமதிராவ்.நான் இந்தூரில் உள்ள வைபவ் நகரில் வசிக்கிறேன்.நான் திவ்ய பூஜையைப்பற்றி கேள்விப்பட்டு 5வாரங்கள் சங்கல்பம் செய்து பூஜை ஆரம்பித்தேன். எனக்கு 2வது வாரத்திலேயே பலன் கிடைத்தது.எனது வேண்டுதல் நிறைவேறியது.
சொந்த வீடு வாங்க உதவிய பாபா
என் பெயர் வந்தனா ராவ்.நான் பால்கந்த் மென்சூர் என்னும் ஊரில் வாடகை வீட்டில் வசிக்கிறேன்.எல்லோரும் போல் எனக்கும் சொந்தவீடு வாங்க ஆசையிருந்தது .அதிலும் நாங்கள் வசிக்கும் வீட்டை வாங்க ஆசைப்பட்டேன்.மென்சூரில் உள்ள பாரஸ்ட் காலனியில் உள்ள பாபா கோவிலுக்கு நான் அடிக்கடி செல்வேன்.அங்கு ஸ்ரீ அனில் திவாரி என்பவரை சந்தித்து உரையாடிக் கொண்டிருக்கும் போது என்னுடைய நிதி நிலைமையால் சொந்த வீடு வாங்க முடியாமையை கூறி வருத்தப்பட்டேன்.அவர் எனக்கு ஷிரடியில் வாங்கி வந்த சாயிபாபா விக்கிரகம் கொடுத்து திவ்ய பூஜை புத்தகமும்,கொடுத்தார்.நானும் அதில் உள்ளபடி 7வாரங்கள் பூஜை செய்ய சங்கல்பம் எடுத்தேன்.
3வாரத்திற்கு பின் நான் திவாரி அவர்களை பாபா கோவிலில் மீண்டும் சந்தித்த போது,பூஜையை தொடங்கினேனா என்றும்,புத்தகத்தில் உள்ளபடியே செய்கிறேனா என்றும் விசாரித்தார்.நானும் பூஜை துவங்கியதை கூறி,அஷ்டோத்திரம் படிக்கவில்லை என்றும் கூறினேன்.அவரும் அஷ்டோத்திரம் படித்து பூஜை செய்தால் பாபா நிச்சயம் உதவுவாரென்று கூறினார்.நானும் அவர் கூறியபடியே 7வாரத்திற்கு சங்கல்பம் செய்து பூஜையை மீண்டும் துவங்கி 7ஆவது வாரம் எங்களுக்கு பணம் கிடைத்து,நாங்கள் குடியிருந்த வீட்டையே வாங்கி விட்டோம்.
அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயக சத்குரு சாய் மகராஜீக்கு ஜெய்!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக