ஞாயிறு, 15 அக்டோபர், 2017

தித்திக்கும் தீப ஒளி திருநாள் பரிகாரங்கள்

தொடர்புடைய படம்
தித்திக்கும் தீப ஒளி திருநாள் பரிகாரங்கள்

தீப ஒளி திருநாள் மஹாலக்ஷ்மி தாயாரின் நாள் என்றே கூறலாம்.மகா லக்ஷ்மிக்கு பூஜையை செய்ய உகந்த நாள். இந்த நாளில் தீபங்கள் ஏற்றி தாயாரை வழிபட்டு பசுக்களுக்கு மஞ்சள் நிற லட்டு மற்றும் மஞ்சள் வாழை பழம் கொடுத்து வர நம் குடும்பம் செல்வ செழிப்போடு இருக்கும்.கோமாதாவிற்கு சந்தானம் குங்குமம் வைத்து மாலை சூட்டி,தேவாதி தேவர்களும் ,தெய்வங்களும் இருக்கும் உடலை தொட்டு வணங்க வேண்டும்.பசு மாட்டிற்கு கோதுமை தவிடில் தண்ணீருடன் வெல்லம் கலந்து கொடுப்பதும்,அகத்திக்கீரை கொடுப்பதும் நல்ல பலனை தரும்.

மகாலக்ஷ்மியுடன் மகாவிஷ்ணு இருக்கும் படத்தை வைத்து வீட்டில் பூஜை செய்தல் வேண்டும்.இதனால் லட்சுமியுடன் மகாவிஷ்ணு அருளும் ஆசிர்வாதமும் நமக்கு கிடைக்கும்.பூஜையில் ஏற்றும் விளக்கில் சிறிது சர்க்கரை அல்லது கல்கண்டு போட்டு ஏற்றவும்.வட இந்தியாவில் இந்த நாளில் பூஜை செய்து ,புதுக்கணக்கு துவங்குவர்.

அதிகாலை ஸ்நானம் (குளியல்) நீரில் சிறிது பால் கலந்து குளிக்கவும்.மஞ்சள் தூள்,ஏலக்காய் போட்டும் குளிக்கலாம்.

தீப ஒளி திருநாளில் புதியதுடைப்பத்தில் வீட்டை பெருக்கி சுத்தம் செய்வது மிகுந்த நன்மை தரும்-வறுமையை நீக்கும். மஹாலக்ஷ்மி / பெருமாள் கோவிலுக்கு புதிய துடைப்பம் மற்றும் வாசனை ஊதுவத்திகள் இந்நாளில் தானம் செய்யவும். கொட்டை பாக்கு ஒன்றை சிகப்பு நூலால் கட்டி லக்ஷ்மி தேவியின் படத்தில் மாலையாக இட்டு வழிபட்டு பின் அடுத்த நாள் (அமாவாசைக்கு மறுநாள்)அதை எடுத்து பணம் வைக்கும் இடத்தில் வைத்து வர, செல்வ நிலை ஓங்கும். வியாபாரத்தில் உள்ளோர் / தொழில் செய்வோர் கண்டிப்பாக இந்நாளில் தொழில் செய்யும் இடத்திற்கு பூஜைகள் செய்து வழிபட வேண்டும். தொடர்புடைய படம் இந்நாளில் அனுமனை வழிபடுவது சிறப்பு- அனுமனுக்கு ஒரு மண் அகலில் நல்லெண்ணெய் விளக்கேற்றி அதில் ஒரு கிராம்பு இட்டு வழிபடுவது நன்மை தரும்.அனுமன் சாலீஸாவை படிக்க வேண்டும்.
no non veg க்கான பட முடிவு தீபாவளி தினத்தன்று,அசைவம் சாப்பிடக்கூடாது.அசைவம் இருக்கும் இடத்தில் எந்தவொரு பரிகாரமும் பலன் தராது.இறந்த ஜீவன்கள் இருக்கும் இடத்தில் தெய்வசக்தி நுழையாது.
அசோக மரத்து இலைகளால் வீட்டின் முன் வாசலை அலங்கரிக்கவும்-மாமரத்து இலைகளையும் சேர்த்து கொள்ளலாம். கோமதி சக்கரத்தை கண்டிப்பாக தீப ஒளி நாள் வழிபாட்டில் சேர்த்து கொள்ளவும்.லக்ஷ்மி சோழி வைத்து வணங்கவும்.

மகாலட்சுமி பூஜைக்குரிய நான்கு வர்ண 'லக்ஷ்மி சோழிகள்'

முன்பே கொடுக்கப்பட்ட குபேர மந்திரத்தை 108 முறை கூறி வழிபட்டு வரவும். பொதுவாக அரசமரத்தை காலை தொட்டு வணங்க வேண்டும்.சனிக்கிழமை தவிர மற்ற நாட்களில் தொட்டு வணங்க வேண்டும்.பரிகாரத்திற்கு மட்டும் தீப ஒளி நாள் இரவு அரச மரத்திற்கு அடியில் விளக்கேற்றி வைத்து பின்பு திரும்பி பார்க்காமல் வீடு வந்து சேரவும். தீப ஒளி நாள் பூஜையில் அரிசியின் மேல் கலசம் வைத்து மாவிலை , தேங்காய் வைத்து அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து வழிபடவும்.லக்ஷ்மி குபேர பூஜை செய்வதற்கு உகந்த நாளும் இந்நாளே.குபேரனின் 108போற்றியை 108காசுகளை போட்டு சொல்ல வேண்டும்.
kubera kolam magic square க்கான பட முடிவுஎளிமையான குபேர மந்திரமான
ஓம் யக்க்ஷ ராஜாய வித்ம ஹே
வைஸ்ரவணாய தீமஹி
தன்னோ குபேர ப்ரசோதயாத் என்று சொல்லி,
குபேரனுக்குரிய கோலத்தில் பூ போட்டு வணங்க வேண்டும்.














thambulam க்கான பட முடிவு

திருமணமான பெண்களுக்கு இந்நாளில் வெற்றிலை,பாக்கு,மஞ்சள்,குங்குமம்,தாலி கயிறு வளையல்,பூ,பழம் ,ஒரு ரூபாய் நாணயம் முதலியவை வைத்து தாம்பூலம் கொடுக்க வேண்டும். இதனால் லக்ஷ்மியின் பரிபூரண ஆசிர்வாதம் கிடைக்கும்.

கோவிலுக்கு சென்று அங்கு வரும் 10வயதுக்கு உட்பட்ட 6குழந்தைகளுக்கு வெற்றிலை,பாக்கு,பூ,பழம் ,வளையல் போன்றவற்றை கொடுக்க வேண்டும்.















உங்களால் என்னென்ன பரிகாரங்கள் எல்லாம் செய்ய முடியுமோ அதை செய்து பயன்பெறுங்கள்.இந்த வருட தீபாவளியை தித்திக்கும் தீபாவளியாக உங்கள் குடும்பத்துடன் சேர்ந்து கொண்டாடுங்கள்.இல்லாத பேர்களுக்கு நம்மால் முடிந்ததை கொடுத்து அவர்களின் சந்தோஷமான முகத்தில் இறைவனை காணுங்கள்.அனைவருக்கு என்னுடைய இனிய happy deepavali 2017 க்கான பட முடிவு

நல்வாழ்த்துக்கள்.நீங்களும் சந்தோஷமாக இருங்கள் .மற்றவர்களையும் சந்தோஷப்படுத்துங்கள்.

இந்த பதிவை காண வந்த அத்தனை நெஞ்சங்களுக்கும் என் நன்றியை தெரிவிக்கிறேன்.தொடர்புடைய படம்

உங்கள் கருத்துக்களையும் பகிரவும்.







1 கருத்து: