புதன், 25 அக்டோபர், 2017

தீபாவளிக்கு முந்தைய நாள் அன்று யம தீபம் ஏற்றுங்கள் !

தீபாவளிக்கு முந்தைய நாள் அன்று யம தீபம் ஏற்றுங்கள் !yama deepam diwali க்கான பட முடிவு


யம தீபம் 


தீபாவளிக்கு முந்தைய தினத்தன்று யம தீபம் ஏற்றுவது நம் மரபு.
யம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். தொழில் முன்னேறும். திருமணத் தடைகள் விலகும், சொத்துகள் சேரும். அனைத்துவிதத் தடைகளும் நீங்கி, வாய்ப்புகள் தானாகவே வரும்.

இந்த யமதீபத்தை தீபாவளியில் ஒரு திருவிளக்காக ஏற்றி வழிபடவேண்டும். தீபாவளிக்கு முன்பு வருகின்ற ‘மகாளய பட்ச’ நாட்களில் நமது மூதாதையர்கள் பூலோகம் வந்து நம்முடன் இருந்து விட்டு மஹாளய அமாவாசையில் மீண்டும் திரும்பி மேலுலகம் செல்கின்றனர். அப்படி அவர்கள் செல்லும் போது இந்த ‘யமதீபம்’ அவர்களுக்கு வழிகாட்டுகிறது.
 இந்த வெளிச்சத்தில் அவர்கள் சுகமான பயணம் மேற்கொள்ளும்போது இப்படி அவர்களுக்கு வெளிச்சம் காட்டிய நம்மை ஆசீர்வதித்துச் செல்கின்றனர். அந்த ஆசீர்வாதம் நமக்கு பல நன்மைகளை வாரி வழங்கக்கூடியது. அப்படிப்பட்ட ஆசீர்வாதத்தை நாம் பெற ‘இந்த யமதீபத்தை’ ஏற்றி வழிபட வேண்டும்.


இது எப்போதும் தீபாவளிக்கு முதல் நாள் அன்று வரும்.
யம தீபம் ஏற்றி ஹிந்து பலிதானிகளுக்கும், முன்னோர்களுக்கும் வழிகாட்டி உதவுவது அந்த வருடம் முழுவதும் நல்ல பலன்களைத் தரும்.


யம தீபமானது துர்மரணம் அடைந்தவர்களுக்கு முக்கியமானது. அவர்கள் பிரச்சினைகள் ஏற்படுத்துவதை நிறுத்திவிட்டு, உங்களுக்கு நலன்களைச் செய்வார்கள்.
என்றாலும் எவரேனும் இறந்தால் மட்டுமே யம தீபம் ஏற்ற வேண்டும் என்று எண்ணக் கூடாது. 

Diwali 2016 Dates Calendar Deepavali

யம தீப வழிபாடாக, எட்டு அகல் விளக்குகளை ஆலயத்திலும், இல்லத்திலும், எட்டுத் திக்குகளிலும் தாமரைத் தண்டுத் திரிகளை வைத்து ஏற்றி, ஒவ்வொரு திக்காகப் பார்த்து, எட்டுத் திக்குகளில் நின்று, அந்தந்த திக்குகளை தேவமூர்த்தி, தேவதைகளை வணங்கிப் பிரார்த்திக்க வேண்டும். இவ்வாறு எட்டுத் திக்குகளிலும் நின்று பூஜித்து, யம தீப தேவதா மூர்த்திகளை உலக ஜீவன்களுக்கு உள்ள எமபயம், மரண பயம், மிருத்யு தோஷங்கள் அகலத் துணைபுரிவீர்களாக என்று வேண்டிட வேண்டும்.

ஜோதிடத்தில் யமனுக்கு உள்ள தொடர்பு: 

சூரிய பகவான் த்விஷ்டா என்பவரின் மகள் சுவர்ச்சலாதேவியை திருமணம் செய்தார். அவர்களுக்கு வைவஸ்தமனு, எமன் என்ற 2 மகன்களும் யமுனை என்ற மகளும் பிறந்தனர். சூரியனின் வெப்பத்தை தாங்க முடியாத சுவர்ச்சலாதேவி தன் நிழலை ஒரு பெண்ணாக மாற்றினாள். அந்த பெண்ணுக்கு சாயாதேவி என்ற பெயரிட்டாள். பிறகு அவள் இனி நீ சூரியனுடன் குடும்பம் நடத்து என்று கூறி விட்டுத் தன் தந்தை வீட்டுக்கு சென்று விட்டாள். இதையடுத்து சாயாதேவிக்கு சூரியன் மூலம் தபதீ என்ற மகளும் ச்ருதச்ரவசி, ச்ருதசர்மா என்ற 2 மகன்களும் பிறந்தனர். இவர்களில் ச்ருதசர்மா உன்னத பலன்கள் பெற்று சனிபகவான் என்ற அந்தஸ்தை பெற்றார். சிவனை வழிபட்டு ஈஸ்வர பட்டமும் பெற்றார். ஓரு ஆத்மாவை உருவாக்குவதில் ஆத்மகாரகனான சூரியனும் அந்த ஆத்மாவின் ஆயுளை தீர்மானிப்பதில் சூரியனின் புத்திரர்கள் மற்றும்ஆயுள் காரகனான சனீஸ்வர பகவானும், அவருடைய அதிதேவதையான யமனுதான் என பாரம்பரிய ஜோதிடம் கூறுகிறது. 



யம தீபம் எங்கு ஏற்றலாம்? 

1. மயிலாடுதுறை அருகில் ஸ்ரீ வாஞ்சியத்தில் க்ஷேத்ரபாலகராக அமைந்து தனி சன்னதி பெற்ற யமதர்மராஜன் சன்னதி 
2. தனது பக்தனான மார்கண்டேயனுக்கு அருள யமனை அழித்த திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் சன்னதி 
3. திருச்சி மண்ணச்சநல்லூர் அருகில் திருபைஞ்சிலி எனும் ஞீலிவனநாதர் ஆலயத்தில் உலகில் அழிக்கும் தொழில் தடையின்றி நடைபெற சாம்பலில் இருந்து யமனை மீண்டும் குழந்தையாக உருவாக்கிய யமன் சன்னதியில். 
4. அனைத்து சனி பரிகார ஸ்தலங்களில்.
 5. அனைத்து சிவாலய சனீஸ்வரர் சன்னதிகளில் 
6. யமனின் சகோதரியான யமுனை நதிக்கரையில்
 7. அனைத்து காலபைரவர் சன்னதிகளில்.


சாத்திரப்படியான யம தீபம் ஏற்றும் முறை:

1. உங்கள் வீட்டின் வெளிப்புறம் உயரமான பகுதியில் யம தீபம் ஏற்றப்பட வேண்டும். 

 வசதி இல்லை எனில் வீட்டிற்குள்ளும் ஏற்றலாம்.

2. தெற்கு திசை நோக்கி விளக்கு எரிய வேண்டும்.
3. விளக்கேற்றிய பின்னர், இந்து பலிதானிகளையும் உங்கள் முன்னோரையும் மனதில் ஓரிரு நிமிடங்கள் சிந்திக்க வேண்டும்.
4. பின்னர்க் கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச் சொல்ல வேண்டும்.

யம தீபம் ஏற்றவேண்டிய காலம் தீபாவளியின் முதல் நாளான இன்று மாலை 5.55 முதல் 7.11 வரை. 

யமதீபம் ஏற்றும்போது கூறவேண்டிய ஸ்லோகம்: 
ஸ்ரீ யமாய நம: யமாய தர்ம ராஜாய 
ம்ருத்யவே சாந்த காயச| 
வைவஸ்தாய காலாய ஸர்வ பூத க்ஷயாயச|| 
ஓளதும்பராய தத்னாய நீலாய பரமேஷ்டினே| 
வ்ருகோதராய சித்ராய சித்ரகுப்தாய வை நம:
 சித்ரகுப்தாய வை ஓம் நம இதி:||


‘அனைத்தையும் அடக்கி ஆள்பவராகவும், தர்ம மூர்த்தியாகவும் தீவினையை அழிப்பவராகவும், விவஸ்வானுடைய புத்திரனாகவும் காலத்தின் வடிவாகவும், அனைத்து ஜீவன்கட்கும் நல்லதோர் முடிவை அளிப்பவராகவும், பலவித பிறப்பு, இறப்பு ரகசியங்களைத் தன்னுள் கொண்டவருமான அனைவராலும் பூஜிக்கப்படுபவருமான ஸ்ரீயமதர்மராஜமூர்த்தியை வணங்குகிறேன். பெரும் வயிறு படைத்தவனும் சித்திரத்திலிருந்து தோன்றியவனுமான சித்ரகுப்தனுக்கு மீண்டும் மீண்டும் நமஸ்காரங்கள்’ என்று பொருள்.யம தீபம் க்கான பட முடிவு


‘யமதீபம்’ என்பது யமலோகத்தில் மட்டும் காணப்படுகின்ற அற்புத ஒளி விளக்காகும்.  கூடு விட்டு ஆவி போனபின்பு எல்லோரும் கூடும் இடம் யமலோகம்! அந்த லோகத்தின் அதிபதி யமனை வழிபட்டு நற்கதி அடைய யமதீபத்தை ஏற்றி வழிபட வேண்டும்.

எம தீபத்தை வீட்டின் உயரமான இடத்தில் ஏற்றுவது வழக்கம். இதற்கு வசதி இல்லாதவர்கள். வழக்கமாக ஸ்வாமிக்கு விளக்கேற்றும்போது, தனியே ஓர் அகல் ஏற்றி வழி படலாம். இதனால், முன்னோர்கள் மட்டுமின்றி எமதர்மனும் மகிழ்ச்சி அடைவானாம்; விபத்துகள், திடீர் மரணம் போன்றவை சம்பவிக்காது. நோய் நொடி இன்றி ஆரோக்கியமாக வாழலாம்!





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக