தீபாவளி அன்று லக்ஷ்மி விநாயகர்
பூஜை செய்வதற்கான வழிமுறைகள்
தீபாவளி நெருங்கி கொண்டிருக்கிறது. இந்த பண்டிகையை கொண்டாட நாம் அனைவரும் தயாராகிக் கொண்டிருக்கிறோம். தீபாவளி கொண்டாட்டங்களில் முக்கியமானதாக இருப்பது லட்சுமி விநாயகர் பூஜையாகும். அதனை தீபாவளி தினத்தன்று செய்வது வழக்கம். லட்சுமி தேவி மற்றும் விநாயகரை நம் வீட்டிற்கு வரவேற்பதற்காக நடத்தப்படும் விசேஷ சடங்கு இது. நம் வீட்டிற்கு வந்து அறிவு, செல்வம் மற்றும் அனைத்து வளத்தையும் அவர்கள் வாரி வழங்குவார்கள் என நம்பப்படுகிறது. லட்சுமி தேவி மற்றும் விநாயகருக்காக வீட்டில் செய்யப்படும் இந்த பூஜை சற்று இன்றியமையாத சடங்காகும். தீபாவளியன்று நம் அனைவரின் வீட்டிற்கும் லட்சுமி தேவி வந்து பொன்னையும் பொருளையும் அள்ளி கொடுப்பார் என்று நம்பப்படுகிறது.
அதற்காக தான் தீபாவளிக்கு முன்பு வீட்டை நன்றாக சுத்தம் செய்து விளக்குகள் ஏற்றி அலங்கரிக்கின்றோம்.
பூஜைக்கு தேவையான பொருட்கள்
கலசம், மாவிலைகள், லட்சுமி தேவி மற்றும் விநாயகரின் சிலைகள், பால், தயிர், தேன், நெய், அரிசி பொறி, இனிப்பு வகைகள், மல்லி விதைகள், வெற்றிலை பாக்கு போன்றவைகள் தேவை. இதுப்போக எப்போதும் பூஜைக்கு பயன்படுத்தும் விளக்குகள், பத்தி, குங்குமம், பூக்கள், மஞ்சள், அரிசி போன்ற பொருட்களும் தேவைப்படும்.
பூஜைக்கான வழிமுறைகள்
முதலில் வீட்டை சுத்தப்படுத்துங்கள். சுத்தமும், சுகாதாரமும் நிறைந்த இடத்தில் மட்டுமே லட்சுமி தேவி தங்குவதாலேயே இந்த ஏற்பாடு. அதன் பின் கங்கா தீர்த்தம் கொண்டு வீட்டை தூய்மைப்படுத்துங்கள். இப்போதெல்லாம் பாட்டிலில் அடைக்கப்பட்ட கங்கா தீர்த்தங்கள் சந்தையில் விற்கப்படுகின்றன.
மஞ்சளையும், குங்குமத்தையும் சிலைகளின் மீது தடவி பூஜையை தொடங்கவும். பிறகு விளக்கை ஏற்றவும். அதுமட்டுமின்றி, புத்தகங்கள் அல்லது அலுவலக ஆவணங்களை சிலைகளுக்கு அருகில் வைக்கவும். மஞ்சளையும், குங்குமத்தையும் சிலைகளின் மீது தடவி பூஜையை தொடங்கவும். பிறகு விளக்கை ஏற்றவும். அதுமட்டுமின்றி, புத்தகங்கள் அல்லது அலுவலக ஆவணங்களை சிலைகளுக்கு அருகில் வைக்கவும்.
அதன்பின் மஞ்சள், குங்குமம், மல்லி விதைகள், சீரகம், அரிசி பொறி மற்றும் அரிசியை ஒரு தட்டில் வைக்கவும். மஞ்சள், குங்குமம் மற்றும் அரிசியை கலசத்தின் மீது தடவும். பிறகு பூக்களை கடவுளுக்கு அர்ப்பணிக்கவும். அதன் பின் கொஞ்சம் பூக்களையும், அரிசியையும் கையில் எடுத்துக் கொண்டு, இந்த மந்திரங்களை கூறவும்:
வக்ர துண்ட மஹாகாய சூர்யகோடி சமபிரபா
நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே
சங்க சக்ர கதாஹஸ்தே மகாலக்ஷ்மி நமோஸ்துதே
மந்திரத்தை கூறிய பின், சிறிது நேரத்திற்கு தியானம் செய்யுங்கள். அதன்பின் பூக்களையும், அரிசியையும் லட்சுமி தேவி மற்றும் விநாயகரின் சிலைகளின் மேல் தூவவும். பின் லட்சுமி தேவியின் சிலையை எடுத்து ,சுத்தமான ஒரு தட்டின் மீது வைக்கவும். அடுத்து புனித நீரை கொண்டு சிலையை கழுவுங்கள். தேன், தயிர், பால் மற்றும் நெய்யை ஒன்றாக கலந்து கொள்ளுங்கள். இதனை கொண்டு சிலைக்கு அபிஷேகம் செய்யுங்கள். மீண்டும் ஒரு முறை புனித நீரை கொண்டு சிலையை கழுவுங்கள். சுத்தமான துணியை கொண்டு அதனை நன்றாக துடைத்து, கலசத்தின் மீதே அதை மீண்டும் வையுங்கள். இதையே விநாயகர் சிலைக்கும் செய்ய வேண்டும். இப்போது லட்சுமி தேவி மற்றும் விநாயகர் சிலைகளுக்கு மாலைகள் அணிவியுங்கள். சிறிது மஞ்சளையும், குங்குமத்தையும் சிலைகளின் மீது பூசுங்கள். பிறகு இனிப்பு வகைகளை படைத்து, நெருப்பு ஆரத்தி காட்ட வேண்டும். ஆரத்தி எடுக்கும் போது, அதற்கான பாடலை வேண்டுமானாலும் பாடலாம். ஆரத்தி எடுத்தப் பின் கடவுளுக்கு படைத்த இனிப்புகளை பிரசாதமாக எடுத்து உண்ணுங்கள்.
இப்பூஜையை சிறப்பாக செய்து லட்சுமி தேவி மற்றும் விநாயகரின் அருளைப் பெற்றிடுங்கள்.

நிர்விக்னம் குரு மே தேவ ஸர்வ கார்யேஷு ஸர்வதா!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக