ஐந்து நாள் பண்டிகையாக தீபாவளி மகோத்சவம்
5 நாள் பண்டிகையாக தீபாவளி ஐந்து நாள் மகோத்சவமாக கொண்டாடப்படுகிறது, அதன் படி,
1. முதல் நாள் திரயோதசி அன்று தனத் திரயோதசி மற்றும் யம தீபம்.
2. இரண்டாம் நாள் சதுர்த்தசி அன்று நரக சதுர்த்தசி தீபாவளி திருநாள்.
3. மூன்றாம் நாள் அமாவாசை அன்று கேதார கௌரி விரதம்
4. நான்காம் நாள் பிரதமை அன்று கார்த்தீக ஸ்நானம்
5. ஐந்தாம் நாள் துவிதியை அன்று யமத் துவிதியை.வட மாநிலங்களில் தீபாவளி பண்டிகை தொடர்ந்து ஐந்து நாள் கொண்டாடப்படுகிறது.
மறுநாள் கொண்டாட்டம் ’சோட்டி தீபாவளி’(சின்ன தீபாவளி) எனப்படுகிறது. இந்த நாளில், (தீபாவளி அன்று )செல்வம் தரும் கடவுளாக இந்துக்கள் கருதும் லஷ்மி மாலையில் தங்கள் வீட்டிற்குள் நுழைவார் என்பது ஐதீகம் ஆகும். இதற்காக லஷ்மியை வரவேற்க அவர்கள் தங்கள் வீடுகளில் தீபங்களை ஏற்றி வைத்திருப்பார்கள். அதே தினத்தில் தம் வீட்டில் உள்ள துர்தேவதைகளும் வெளியேறும் என்பதும் பொதுமக்களின் நம்பிக்கை ஆகும்.
மூன்றாவது நாளான தீபாவளி, தீபாவளி பருவத்தின் முக்கியத் திருநாளாகும். இதில், புத்தாடை உடுத்தி தம் வீட்டிற்கு வந்து விட்டதாகக் கருதும் லஷ்மிக்கு மாலையில் பூஜை செய்வார்கள். பட்டாசுகளையும் வெடிப்பார்கள். பிறகு தம் உறவுகள் மற்றும் நண்பர்கள் வீட்டிற்கு சென்று வாழ்த்து கூறி மகிழ்கிறார்கள்.
மூன்றாவது நாளான தீபாவளி, தீபாவளி பருவத்தின் முக்கியத் திருநாளாகும். இதில், புத்தாடை உடுத்தி தம் வீட்டிற்கு வந்து விட்டதாகக் கருதும் லஷ்மிக்கு மாலையில் பூஜை செய்வார்கள். பட்டாசுகளையும் வெடிப்பார்கள். பிறகு தம் உறவுகள் மற்றும் நண்பர்கள் வீட்டிற்கு சென்று வாழ்த்து கூறி மகிழ்கிறார்கள்.
நான்காவது நாள் ‘கோவர்தன் பூஜை’ செய்ய உகந்த நாளாகும். இதில், அனைவரும் பசு மற்றும் காளை மாடுகளை குளிப்பாட்டி பூஜை செய்து மகிழ்வார்கள். இத்துடன் நிறுவனங்களின் அதிபர்கள் மற்றும் வியாபாரிகளும் தம் அலுவலகங்கள் மற்றும் கடைகளில் பூஜை போட்டு புதுக்கணக்கு துவங்குவார்கள். இந்த நாளை உபி மற்றும் உத்தராஞ்சல் மாநிலங்களில் ராமர் பெயரில் கொண்டாடுவதும் வழக்கம். ராவணனிடம் போரிட்டு வென்ற ராமர் அயோத்திக்கு திரும்பி முடிசூட்டிய நாளாகவும் இது கருதப்படுகிறது. இதற்காக, அவர்கள் ராமருக்கும் பூஜை செய்து வணங்குகிறார்கள்.
lகடைசியாக ஐந்தாவது நாள் ‘பைய்யா தோஜ்’ என்பது ஆகும். தமிழக யமது துவதியையாக கொண்டாடப்படுகிறது.அன்றுதான் யமன் தன்னுடைய சகோதரியான யமுனையை காண பூலோகத்திற்கு வந்தார்.யமுனை அவனை வரவேற்று,பலவித இனிப்பு பலகாரங்கள்,அன்னங்கள் படைத்து அவரை உண்ண செய்தாள் .இதனால் யமன் மனம் மகிழ்ந்து,நீ எனக்கு உபசாரம் செய்த இந்நாளில் எந்த சகோதரி தன்னுடன் பிறந்தவனுக்கு விருந்து வைத்து அவன் மனம் குளிரும்விதம் செய்கிறாளோ அவளுக்கு சர்வ மங்களமும்,தாலி பாக்கியமும் நீடித்து இருக்கும் என்ற வரத்தை அருளினார்.
இன்றும் வடமாநிலத்தில் யம துவதியை அன்று தங்களுடைய சகோதர்களை வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்தும்,பரிசுகள் கொடுத்தும் மகிழ்கின்றன.இதனால் தங்களுக்கு சகல செளபாக்கிமும் உண்டாகும் என்பது அவர்களது நம்பிக்கை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக