புதன், 11 அக்டோபர், 2017

ஸ்ரீ சாய் திவ்ய பூஜை

ஸ்ரீ சாய் திவ்ய பூஜை

அன்பார்ந்த ஆன்மீக தோழிகளுக்கு என் இனிய வணக்கம்.இன்று வியாழக்கிழமை என்பதால் ஷீரடி சாய்பாபாவிற்கு விரதம் இருப்பது என முடிவு எடுத்தேன்.பாபா என்னுடைய குரு என்பதை நான் முந்திய பதிவில் எழுதியுள்ளளேன்.நான் 9வார வியாழக்கிழமை விரதம் இருந்திருக்கின்றேன்.அதனால் பாபாவின் அருளும் கிடைத்து இருக்கிறது .பாபாவின் 9வார விரதத்தை போன்று ஸ்ரீசாய் திவ்ய பூஜை ஒன்று உள்ளது என்பதை அறிந்தேன்.எனக்கு இந்த பூஜை மிகவும் பிடித்திருந்தது.ஆதலால் இந்த பூஜையை  முதல் வாரமான இன்று காலை செய்து முடித்தேன். இந்த பூஜையை 9வாரங்கள்  வரை செய்ய தேவையில்லை.5வாரங்கள் செய்தாலே போதும்.நீங்கள் விரும்பினால் 7,11,21வியாழக்கிழமைகளிலும் செய்யலாம்.

 இந்த பூஜையை எப்படி செய்வது? என்று கூறினால் என்னை போன்ற  சாய் பாபா பக்தர்களுக்கு மிகவும் பயனுடையதாக இருக்கும் என எண்ணி உடனே என்  பதிவை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினேன்.வாங்க பூஜையைப்பற்றி பார்ப்போம்.

சந்தோஷம்,மன அமைதி,வளமான வாழ்வு மற்றும் புகழ் கிடைக்க ஓர் சிறந்த பூஜை இது.இந்த பூஜையின்மூலம் நிறைய பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறியுள்ளது.எல்லா மதத்தினரும்,ஆண் ,பெண் யார் வேண்டுமானாலும் பக்தியுடனும்,நம்பிக்கையுடனும் செய்ய வேண்டும்.இந்த பூஜையை செய்யும் போது சாப்பிடாமல் இருக்க கூடாது.யாரும் பசியுடன் இருப்பதை பாபா ஒருபோதும் விரும்புவதில்லை.

திவ்யபூஜையை  செய்யும் முறை 

இந்த பூஜையை சாய்பாபாவிற்கு உகந்த நாளான வியாழக்கிழமைகளில் செய்ய வேண்டும். 
1)பூஜைக்கு முதல் நாள் உள்ளங்கையளவு வெள்ளை புதுத்துணி ஒன்றை எடுத்து மஞ்சளில் நனைத்து உலர வைக்க வேண்டும்.
2)வியாழன் அன்று பூஜையறையில் பாபாவின் படம் அல்லது சிலை ஒன்றை மஞ்சள் நிறத்துணி ஒன்று விரித்து அதன் மீது வைக்க வேண்டும்.பாபாவிற்கு சந்தனம்,குங்குமம்  போட்டு வைத்து வாசனை மிகுந்த மலர்களால் (மல்லிகை,பன்னீர் ரோஜா)அலங்கரிக்க வேண்டும்.பாபாவிற்கு விளக்கு என்றால் மிகவும் பிடிக்கும்.ஆதலால் நெய் விளக்குகள் ஏற்றவும். ஊதுபத்தி,சாம்பிராணி  ஏற்றவும்,விநாயகர் படத்தையும் பூஜையில் வைக்க வேண்டும்.எந்த பூஜை செய்தாலும் முதல் வழிபாடு விநாயகருக்குதான் என்பது அனைவருக்கும் தெரியும்.பூஜை தடையின்றி நடக்க விநாயகரை பிராத்திப்போம்.

3)மஞ்சள் தோய்த்த துணியில் 1அல்லது 2ரூபாய் நாணயத்தை  (விருப்பத்திற்கு ஏற்ப நாணயம்)முதல் வாரம் மட்டும் வைக்க வேண்டும்.
4)பாபாவிடம் உங்களது வேண்டுகோளை கூறி 5,7,11,21 வாரங்கள் பூஜை செய்வதாக சங்கல்பம் செய்ய வேண்டும்.

5)சிறிதளவு  உதிரி பூக்கள் எடுத்து .சாய்பாபாவிற்கு பக்கத்தில் வைக்கவும்.

6)பாபாவிற்கு நமஸ்காரம் செய்ய வேண்டும்.  

7)பிறகு சாய்பாபாவின் 108அஷ்டோத்திரம் படித்து உதிரிப்பூக்களால் பாபாவிற்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.

8)பாபாவின் மகிமையை சொல்லும் திவ்யபூஜை கதைகளை படிக்க வேண்டும்.பாபாவின் பாடல்களை பாட வேண்டும்.
9)பாபாவை நினைத்து தியானம் செய்ய வேண்டும்.ஆரத்தி பாடல்கள் பாடி ஆரத்தி  எடுக்க வேண்டும்.


10)பாபாவிற்கு கிச்சடி பிரசாதம் அர்ப்பணிக்க வேண்டும்.
11)பிராத்தித்தபடி 5,7,11,21 வாரங்கள் வியாழக்கிழமைகளில் செய்தல் வேண்டும்.கடைசி வாரம் பிற பெண்களை அழைத்து பிரசாதம் கொடுத்து,பாபாவின் திவ்ய பூஜை புத்தகத்தை தங்கள் விருப்பப்படி 5,7,11,21அல்லது 101புத்தகங்களை கொடுக்கலாம்.இந்த புத்தகம் சாயி பாபாவின் அற்புத மகிமையை மக்களுக்கு வெளிப்படுத்தும்.

12)இடையில் ஏதாவது காரணத்தினால் ஒரு வியாழக்கிழமை செய்ய முடியாவிட்டால் அடுத்த வியாழக்கிழமைகளில் தொடரலாம்.எண்ணியபடியான வாரங்கள் பூஜையை செய்து முடிக்கவும்.
13)ஒரு தடவை5,7,11 அல்லது 21வாரங்கள் பூஜையை முடித்தபின் நீங்கள் விரும்பினால் மீண்டும் 1 முறை பூஜையை ஆரம்பிக்கலாம்.

இங்கு சொல்லியபடி உங்களால் எதுவெல்லாம் செய்ய முடியுமோ அதை செய்யுங்கள். நாம் பாபா மீது கொண்டுள்ள பக்தி ஒன்றையே பார்க்கிறார்.நாம் செய்யும் பிரசாதம் எதுவாகினும் அன்போடு பாபாவிற்கு கொடுத்தால் அதை ஏற்பவர் நம் கருணை உள்ளம் கொண்ட பாபா.பாபாவிடம் நம் கோரிக்கைகளை வைத்து அவர் அருளை பெறுவோம்.

சாய்பாபாவின் அருளினால்தான் இந்த பதிவை உங்களுடன் பகிர்ந்து கொள்ள முடிந்தது.சாய்பாபாவிற்கு என் நன்றிகள் பல.உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளவும். என்னை மேலும் பதிவுகள் எழுத தூண்டும்படியாக அமையும்.

ஜெய் சாய்ராம் 
உங்கள் அன்பு தோழி 
ஈஸ்வரி சரவணன் 










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக