செவ்வாய், 31 அக்டோபர், 2017

கந்தபுராணம் – யுத்தகாண்டம் – கதைச் சுருக்கம்:

தொடர்புடைய படம்














கந்தபுராணம் – 
யுத்தகாண்டம் – கதைச் சுருக்கம்:

முருகப்பெருமான்  அசுரர்களான சூரபத்மனாதியோரை வதம் செய்த திருவிளையாடலையே நாம் கந்தசஷ்டி  விரத விழாவாகக் கொண்டாடுகின்றோம். சூரபத்மனின்; ஒருபாதி “நான்”என்கின்ற  அகங்காரமும், மற்றொருபாதி “எனது” என்கின்ற மமகாரமாகவும் அமையப்பெற்றவன்.
சூரபன்மன்  ஆணவ மலம் கொண்டவன். தாரகாசுரன் மாயா மலம் உடையவன். சிங்கமுகன் கன்ம  மலத்தின் வடிவம். இவர்களை ஞானம் என்கின்ற முருகனது வேல் வெல்கிறது. அதாவது எம்மைப் பிடித்துள்ள ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களில் இருந்து  வீடுபேறடைய ஞானம் என்ற இறை சக்தியால் மட்டுமே முடியும் என்பதையே இந்நிகழ்வு அறிவுறுத்துகின்றது.


சூரபத்மனின் வரலாறு:

பிரமதேவனுக்கு தக்கன், காசிபன் என்னும் இரு புதல்வர்கள் இருந்தார்கள். அவர்களுள் தக்கன் சிவனை  நோக்கித் கடுந்தவம் புரிந்து பல வரங்களைப் பெற்றிருந்தான். ஆனால் வரத்தின் வலிமையைச் சிரத்தில் கொண்டு சிவனை மதியாது யாகம் செய்ததினால் சிவனால் தோற்றுவிக்கப் பெற்ற வீரபத்திர கடவுளால் கொல்லப்பட்டான்.
காசிபனும் கடுந்தவம்  புரிந்து சிவனிடம் இருந்து மேலான சக்தியைப் பெற்றான். ஒருநாள் அசுரர்களின்  குருவான சுக்கிரனால் (நவக்கிரகங்களுள் வெள்ளியாக கணிக்கப் பெறுபவர்) ஏவப்பட்ட “மாயை” என்னும் அரக்கப் பெண்ணில் மயங்கி தான் பெற்ற தவ வலிமை எல்லாவற்றையும் இழந்தான்.
இதனைத் தொடந்து காசிபனும் மாயை என்னும் அசுரப் பெண்ணும் இணைந்து மனித தலையுடன் கூடிய சூரபத்மனும், சிங்க முகம் கொண்ட சிங்காசுரனும், யானைமுகம் கொண்ட தாரகாசுரனும், ஆட்டின் முகம் கொண்ட அசமுகி என்ற அசுர குணம் கொண்ட பிள்ளைகளைப் பெற்றனர்.
இவர்களுள்  சூரபதுமன் சர்வலோகங்களையும் அரசாளும் சர்வ வல்லமைகளைப் பெற எண்ணி சுக்கிலாச்சாரியாரிடம் உபதேசம் பெற்று சிவபெருமானை நோக்கி கடுந்தவம்  புரிந்து 108 யுகங்கள் உயிர் வாழவும், 1008 அண்டங்களையும் அரசாளும் வரத்தையும், இந்திரஞாலம் எனும்  தேரையும், சிவசக்தியால் அன்றி வேரு ஒரு சக்தியாலும் அவனை அழிக்க முடியாது என்னும் வரத்தையும் பெற்றான். இவ்வரத்தின் பயனாக சூரன் தம்மைப்போல் பலரை  உருவாக்கி அண்ட சராசங்களை எல்லாம் ஆண்டு வந்தான்.
சூரபதுமன் பதுமகோமளை என்னும் பெண்ணை மணந்து வீரமகேந்திரபுரியை இராசதானியாகக் கொண்டு ஆண்டுவரும் காலத்தில் அவனுக்கு பதுமகோமளை மூலம் பானுகோபன், அக்கினிமுராசுரன், இரணியன், 10 தலைகளைக் கொண்ட-வச்சிரவாகு ஆகிய நான்கு புதல்வர்களும், வேறு மனைவியர் மூலம் மூவாயிரவரும் (3000-மூவாயிரம் பேரும்) பிறந்தனர். இவர்களுடன் இன்னும் 120 பிள்ளைகள் இருந்ததாகவும் கூறப்படுகின்றது.

சூரபத்மன் தான் பெற்ற வரத்தின் வலிமையினால் ஆணவம் மிகுந்து கர்வம் கொண்டு இந்திரன் மகனான சயந்தன் முதலான தேவர்களை சிறையிலிட்டு சித்திரவதை செய்து அதர்ம வழியில் ஆட்சி  செய்யலானான்.



6face murugan birth க்கான பட முடிவுஅசுரர்களின்  இக்கொடுமைகளைத் தாங்க முடியாத தேவர்கள் சிவனிடம் சென்று முறையிட்டனர்.  இறைவன் அவர்களைக் காப்பாற்ற திருவுளம் கொண்டு சூரபத்மன் முதலானபலம் மிக்க  அசுரர்களைகளை அழிக்கும் சக்தி படைத்த ஆறுமுகன் அவதரித்தார்.































ஆறுமுகன் அவதாரம்:

தேவர்களை  துன்பத்தில் இருந்து காப்பாற்றும் நோக்குடன் சிவன் தனது நெற்றிக் கண்ணைத் திறக்க (சிவனுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம், ஆகிய  ஐந்து முகங்களும், இவை தவிர ஞானிகளுக்கு மட்டுமே தெரியக்கூடிய “அதோமுகம்”  (மனம்) என்னும் ஆறாவது முகமும் உண்டு.) அவைகளில் இருந்து ஆறு தீப்பொறிகள்  வெளிப்பட்டன. அவற்றை வாயு பகவான் ஏந்திச் சென்று வண்ண மீனினம் துள்ளி  விளையாடும் தண்மலர் நிரம்பிய சரவணப் பொய்கையில் மலர்ந்திருந்த தாமரை  மலர்களின் மீது சேர்த்தான்.

6face murugan birth க்கான பட முடிவு

அந்த  தீப்பொறிகள் ஆறும் உலகின் பொன்னெல்லாம் உருக்கி வார்த்ததென ஆறு குழந்தைகளாக  தோன்றின. அந்த ஆறு குழந்தைகளையும் ஆறு கார்த்திகைப் பெண்கள் சீராட்டி,  பாலூட்டி வளர்த்து வரும் வேளை அகிலலோக நாயகி பார்வதி தன் மைந்தர்கள் அறுவரையும் ஒன்றாக அன்புடன் கட்டி அணைத்திட அவையாவும் ஒரு திருமேனியாக  வடிவங்கொண்டு ஆறுமுகங்களும் பன்னிரு கரங்களும் உடைய ஒரு திருமுருகனாக  தோன்றினன் உலகமுய்ய.
ஆறுமுகங்களும் பன்னிரு திருக்கரங்களும் உடைய திருவுருவை பெற்றமையால்“ஆறுமுகசுவாமி” எனப் பெயர் பெற்றார். இந்த ஆறு திருமுகங்களும் ஞாலம், ஐஸ்வர்யம், அழகு, வீர்யம், வைராக்கியம், புகழ் என்னும் ஆறு குணங்களைக் குறிக்கும்.
பிரணவ  சொரூபியான முருகப் பெருமானிடம் காக்கும் கடவுளான முகுந்தன், அழிக்கும் கடவுளான ருத்திரன், படைக்கும் கடவுளான கமலோற்பவன் ஆகிய மும்மூர்த்திகளும் அடக்கம். ஆறுமுகன் சிவாக்கினியில் தோன்றியவன். அதனால் “ஆறுமுகமே சிவம்,  சிவமே ஆறுமுகம்” எனப்பெறுகின்றது.

வீரவாகுதேவர் முதலான இலட்சத்து  ஒன்பதின்மர் தோன்றல்:

சிவபெருமானின்  நெற்றிக் கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகள் புறப்படும் போது அதில் இருந்து  வெளிப்பட்ட வெப்பத்தை தாங்க முடியாது சிவனருகில் இருந்த பார்வதிதேவி  பாய்ந்து ஓடலானார். அப்போது பார்வதி தேவியின் பாதச் சிலம்புகளில் இருந்த  நவரத்தினங்கள் சிதறி விழுந்தன. அந்த நவமணிகள் மீது இறைவனின் பார்வை  பட்டதும் அவைகள் நவசக்திகளாக தோன்றினர். அந்த நவசக்திகளின் வயிற்றில்  வீரவாகுதேவர் முதலான இலட்சத்து ஒன்பதுமர் (100009) தோன்றினர். இவர்கள்  அனைவரும் பின்பு முருகனின் படைவீரர்களாயினர்.


அன்னை வழங்கிய சக்திவேல்:தொடர்புடைய படம்

அம்மையும்  தன்னைப்போன்ற ஒரு சக்தியை உருவாக்கி அதனை தனது சக்திகள் யாவும் கொண்ட ஓர்  வீரவேலாக உருமாற்றினார். அம்மையப்பன் வெற்றி தரும் வீரவேலை முருகனிடம்  வழங்கினர். ஈசனும் தன் அம்சமாகிய பதினொரு உருத்திரர்களைப் படைக்கலமாக்கி  முருகனிடம் தந்தார்.
அம்மையப்பனிடம்  வேல் வாங்கிய முருகன், தேரேறி தெற்கெ இருந்த வீரமகேந்திரபுரியை நோக்கி  செல்கையில் விந்தியமலை அடிவாரத்து மாயா புரத்தை ஆண்ட சூரனின் தம்பி தாரகாசுரன் (ஆனைமுகம்  கொண்டவன்) கிரௌஞ்சம் என்னும் பெரிய மலையாய் உருமாறி வழிமறிக்க  வீரவாகுதேவர் அவனுடன் போர் புரிகின்றார். ஆனால் தாரகன் தன் மாயையால் வீரவாகுதேவர் முதலான முருகனின் சேனையை அழுத்தி சிறைப்படுத்துகின்றான்  அப்போது முருகனின் கூர்வேல் மாயை மலையை பிளக்க தாருகன் அழிகின்றான்.  வீரவாகுதேவர் முதலானோர் மலைச் சிறையிலிருந்து விடுபடுகின்றனர். (தாரகாசுரன்  ஒரு சிவபக்தன். கூடுவிட்டு கூடுபாயும் வரத்தை சிவனிடமிருந்து பெற்றவன்.  தாரகனின் நண்பனான கிரௌஞ்சம் என்னும் பறவை அகத்தியரின் சாபம் பெற்று  மலையுருவானது. அந்த மலையாக தனது மாயை சக்தியால் வீராவாகுதேவர் உள்ளிட்ட  முருகனின் சேனையை சிறைப்பிடித்தான்.) சூரபத்மன் இச் செய்தி கேட்டு  துடிதுடித்து வீராவேசம் கொண்டான்.

தந்தையிடம் இருந்து முருகன் பாசுபத அஸ்திரம் பெறுதல்:

மன்னி  ஆற்றங்கரையில் சிவபிரானுக்கு ஆலயம் எழுப்பச் சொல்லி முருகன் தேவதச்சனைப் பணிக்கிறார். ஈசனும் முருகனுக்கு முன்னே தோன்றி பாசுபதம் என்னும் அஸ்திரம் வழங்குகின்றார். பின்னர் அந்த ஆற்றங்கரையான திருச்செந்தூர் நோக்கி மொத்தப்  படையும் கிளப்புகின்றது. முருகன் அம்மையப்பர் ஆசியுடனும் தன் படைகளோடும்  திருச்செந்தூர் வந்து தங்கினர். அங்கு பராசர முனிவரின் புதல்வர்களும்  (சனகர், சனாதனர், சனந்தனர், சனற்குமாரர்) முருகனை வரவேற்று வீழ்ந்து  வணங்குகின்றனர்.

வீரவாகுதேவர் தூது செல்லல்:

முருகப்  பெருமான் புதிதாக கட்டப்பெற்ற ஆலயத்தில் அமர்ந்து, தேவகுருவான குருபகவானிடம் சூரபத்மனின் முழுக் கதையையும் சொல்லுமாறு கேட்கின்றார். அதன் பின்னரே வீரவாகுதேவரை மட்டும் சூரபதுமன் ஆட்சிசெய்யும்  வீரமகேந்திரபுரத்திற்கு தூது அனுப்ப முடிவாகின்றது.

முருகப்  பெருமான் வீரவாகுதேவரை சூரனிடம் தூதனுப்பிச் சிறை வைத்த தேவர்களை விடுதலை  செய்யுமாறு செய்தி அனுப்பினார். தூதின்போது, வீரவாகு சிறைப்பட்ட அமரர்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு சூரனிடம் தூது உரைக்கின்றான். முருகன்  என்ற பாலகனுக்கு அடிபணிந்து நான் தேவர்களை விடுதலை செய்ய வேண்டுமா? அது  நடக்காத காரியம் என்று கூறி முழங்கலானான்.
சூரனின்  ஆணவத்தால் தூது முறிகின்றது. அது மாத்திரமன்றி தூது சென்ற  வீரவாகுதேவரையும் சிறையிலடையுங்கள் என உத்தரவிடுகின்றான். வீரவாகுதேவரை  சிறைப்பிடிக்க சென்ற அவுணப் படையுடன் வீரவாகுதேவர் போர் புரிகின்றார்.  அப்போது நடந்த போரில் சூரனின் புத்திரனான வச்சிரவாகுவும் அசுரர் தலைவனான சகத்திரவாகு, ஆகிய இருவரும் வீரவாகுதேவரினால் கொலை செய்யப்படுகின்றனர்.
திருச்செந்தூரில்  ஆறுமுகக்கடவுள், திருமால், பிரமன், இந்திரன் முதலிய தேவர்கள் போற்ற சிங்காசனத்தில் எழுந்தருளி வீற்றிருக்கும் போது வீரவாகுதேவர்  திருச்செந்தூர் திரும்பி வந்து முருகனிடம் தூது நிகழ்வுகளை முன்  வைக்கிறார்.
முருகனும் இனியும் தாமதிக்கலாகாது என்று திருச்செந்தூரில் இருந்து இலங்கை சென்று அங்கிருந்து சூரனின் இராசதானியாகிய வீரமகேந்திரபுரிசெல்ல தீர்மானிக்கின்றார்.
கந்தப்பெருமான்  வீரபாகு தேவரை நோக்கி “பாவங்களை அளவில்லாமல் புரிந்துகொண்டிருக்கும்  சூரபத்மன் முதலான அசுரர்களை அழித்து, தேவர்கள் துன்பம் நீங்கி, உலகம் நலம்  பெறுவதற்காக இப்பொழுதே படையெடுத்து வீரமகேந்திரபுரிக்குச்  செல்ல வேண்டும்.”நம் தேரைக் கொண்டுவா” என்று கட்டளையிட்டார்.
தங்கள்  துயரம் எல்லாம் நீங்கியது என்று கருதிய தேவர்கள் கந்தப்பெருமானின் கழலிணைகளை வணங்கித் துதித்தனர். முருகவேளின் கட்டளைப்படி வீரவாகு தேவர் மனோவேகத் தேருடன் பாகனையும் அழைத்து வந்தார். சிங்காசனத்தில் இருந்து  இறங்கிய எம்பெருமான், ” நாம் சூரபன்மனை அழிக்க வீரமகேந்திரபுரி செல்கிறோம்.  நீங்களும்அவரவரது வாகனங்களில் புறப்பட்டு வாருங்கள்” என்று தேவர்களுக்கு  உத்தரவிட்டார்.
பிரம்ம தேவர்  அன்னப்பறவை மீதும், திருமால் கருடன் மீதும், இந்திரனும், வீரபாகு தேவரும் லட்சத்து எண்மரான தெய்வ வீரர்களும் மற்றைய தேவர்களும் தத்தம் வாகனங்கள்  மீதும் ஏறிக் கந்தவேளைச் சூழ்ந்து சென்றார்கள்.
நினைத்த  மாத்திரத்திலேயே எல்லாப் புவனங்களையும் அழிக்கும் ஆற்றல் பெற்ற படைத்தலைவர்கள் நூற்றியெட்டுப் பேரும் தொடர்ந்தார்கள். அதனை அடுத்து  இரண்டாயிரம் வெள்ளம் பூதப்படைகளும் ஆரவாரத்துடன் புறப்பட்டன. வானவர்கள் பூ  மழை பொழிந்தார்கள்.
பேரிகை, காளம்,  கரடிகை பல வாத்தியங்கள் முழங்கின. முருகப்பெருமானுடன் சென்ற பூதப்படைகளின்  பேரொலி எங்கும் ஒலித்தது. அவர்கள் சென்றபோது ஏற்பட்ட புழுதி சூரிய சந்திரர்களுடைய ஒளியையும் மறைத்து விட்டதாம். கடலில் பூத சேனைகள்  இறங்கினார்கள். அவர்களுக்கு கடலே கணுக்கால் அளவுதான் இருந்தது. கடலில்  இருந்து பெரிய பெரிய மீன்களும் திமிங்கிலங்களும் சிறு புழுக்கள் போன்று  இருந்தன. பூதப்படை இறங்கி கலக்கியதால் அது சேறானது. அந்த சேறு உலர்ந்தபின்  புழுதியாகி எங்கும் பறந்தது.
வீரமகேந்திரபுரி  (சூரனின் இராசதானி) தென்கடலில் இருந்த ஒரு தீவு (தற்பொழுது அது நீரில் மூழ்கி உள்ளது). அதற்கு வடக்கே உள்ள தீவு இலங்கை. இலங்கை வழியாகப்   எம்பெருமான் வீரமகேந்திரபுரியை நோக்கிச் சென்றபோது பிரமன், திருமால்,  இந்திரன் ஆகிய மூவரும் சுவாமியை வணங்கி, “மகா பாவியாக உள்ள சூரபன்மன்  இருக்கும் மகேந்திரபுரி தங்கள் திருப்பாதம் பதியத் தகுதி பெற்றதல்ல.  அந்நகருக்கு அடுத்த எல்லையாகிய இங்கேயே தங்கியிருந்து போர் செய்வதற்குப்  பாசறை அமைத்துக் கொள்ளலாம்” என்று வேண்டிக் கொண்டார்கள். சுவாமி அந்த  வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார்கள்.
தேவதச்சனை  அழைத்து “உடனே விரைந்து இங்கு ஒரு பாசறை ஏற்படுத்து” என்று எம்பெருமான்  ஆணையிட்டார். தேவதச்சன் உடனே மாட கூடங்களும் மண்டபங்களும் சோலைகளும்,  வாவிகளும் கொண்ட பாசறை ஒன்றை மனத்தால் நிர்மாணம் செய்து அப்படியே அதை ஸ்தூல  வடிவிலும் கட்டினான். அந்தப் பாசறைக்கு ஏமகூடம்” என்று பெயர் வைத்தார்கள்.
எம்பெருமானின் தேர்  கீழே இறங்கியது. சுவாமி ஏம கூடத்தின் வீதிகளில் பூத சேனைகளை நிறுத்தினார்.  இலட்சத்து ஒன்பதினர்  வீரர்களோடும், தேவர்களோடும் திருக்கோயிலினுள் சென்று அமர்ந்தார் முருகப் பெருமான். அந்த ஏமகூடமே கதிர்காமம் என்பது ஐதீகம்.
[கதிர்காமம்  என்றால் ஒளிமயமான விருப்பத்தை எல்லாம் நிறைவேற்றித் தருவது என்றுபொருள்.  அங்கே சுவாமி ஒளிமயமாக விளங்குகிறார். எனவே அவரை நேரே தரிசிக்கக் கூடாதென்று திரை போடப்பட்டுள்ளது. அங்கே உள்ள கற்பூர தீப ஒளியைத் தரிசனம் செய்யவேண்டும்.] ஏமகூடத்தில் இருந்து (கதிகாமத்தில்) போர் துவங்குகிறது.

பானுகோபன் வதைப் படலம்:


தாரகனையும் அவனுக்குத் துணை நின்ற கிரௌஞ்சத்தையும் பிளந்து அழித்துப் பின், தருமகோபன் (சூரனின் மந்திரி), சூரனின் மகன் அக்கினிமுகாசுரன் உள்ளிட்ட மூவாயிரவர்(3000)ம் இறந்தபின் சூரனின் மகனான பானுகோபன் போருக்குச் செல்கின்றான்.
பானூகோபன்  மாயயால வித்தைகள் செய்து போர் செய்யும் வல்லமை படைத்தவன். சிறந்த சிவ  பக்தன். நீதியாக நடப்பவன். சிவனே முருகனாக அவதரித்து போருக்கு வந்துள்ளார், தேவர்களை விடுவித்தால் நாமும் நெடுநாட்கள் வாழலாம் என தந்தையாகிய  சூரனுக்குக்கூறியும் அவன் ஆணவம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் சூரன்  தானே போருக்குச்சென்று முருகனையும் அவன் சேனையையும் அழிக்கப் போவதாக  வீராவேசம் கொண்டு போருக்குச் செல்ல ஆயத்தமானான். தான் மூத்தமகன் இருக்க  தந்தை போருக்கு செல்வது சரியில்லை என கூறிய பானுகோபன் தான் போருக்குச்  செல்ல அனுமதி தரும்படி சூரனிடம் வேண்டினான். சூரனும் மகனான பானுகோபனை  ஆசீர்வதித்து போருக்கு அனுப்பி வைக்கின்றான். பானுகோபன்  நன்நீர்க் கடலில்  முருகன் சேனையயை ஆழ்த்தமுருகன் அதையும் முறியடித்து விடுகிறார். அதன் போது  பானுகோபனும் முருகன் வேலுக்கு பலியாகிறான்.

சிங்கமுகன் வதை:

பானுகோபன்  பலியாக சூரனின் தம்பி சிங்காசுரன் போருக்குச் செல்கின்றான். சிங்கமுகன் ஒரு பெரும் ஞானி. மாபெரும் வீரன். முருகனாக வந்திருப்பவர் சிவனே. சிவனுடன்  போர்புரிய எம்மால் முடியாது. தேவர்களை விடுதலை செய்தால் நாம் உயிர் வாழலாம்  என சூரனுக்கு புத்திமதி கூறியும் அவன் கேட்காமையால் செஞ்சோற்றூக்  கடனுக்காக போர்புரியச் செல்கின்றான். இவன் பல மாய வித்தைகள் செய்தும், பல  விதமாக முருகவேளுடன் போர் புரிகின்றான். இவனது சிரம் விழுந்தால் உடனே  அதற்குப் பதிலாக புதிய சிரம் தோன்றும் வரம்பெற்றவன். அதனால் அவனை முருகப்  பெருமான் வேல்கொண்டு கொல்லாது குஞ்ச படையால் நெஞ்சைப் பிளந்து சங்காரம்  செய்கின்றான்.

சூரன் சங்காரம்:

சூரன்  அண்டம் விட்டு அண்டம் பாயும் வரம் பெற்றவன். சிறந்த சிவபக்தன்.  ஆணவ மலத்தால் பீடிக்கப் பட்டு அதர்ம வழியில் சென்று அழிகின்றான். தன்  சொந்த பந்தங்களையும், துணை நின்ற படைச் சேனைகளையும் இழந்து செய்வதறியாது  நின்ற சூரனின் ஆணவம் அப்போதும் அடங்கவில்லை. தானே போருக்கு செல்வதாக முடிவு  செய்து முருகப் பெரூமான் முன் தோன்றி சரமாரியாக அம்புக்கணை தொடுத்தான்.  அவை யாவும் முருகவேளின் கடைக்கண் பார்வையால் அழிந்தன. சூரன்  தனது மாயா யாலங்களினால் பலவாறாக தோன்றி போர் செய்தான். அப்போது முருகன் சூரனை  நோக்கி இப்போதும் நீ உயிர் வாழலாம் தேவர்களை சிறையில் இருந்து விடுவித்து  விடு என்று அறிவுறுத்தினார். அப்போதும் அவனின்ஆணவம் அடங்கவில்லை. அதனால்  போர் செய்யவே விருப்புக் கொண்டவனாய் போர் செய்யலானான்.
வீரமகேந்திரபுரத்தில்  பலப்பல மாயங்கள் செய்து போர் புரிகிறான் சூரன். கடலாய், இருளாய் மாறி  மாறிச் செய்யும் போர் எதுவும் உதவாமல் போனதினால், உதவி செய்ய இருந்த  உற்றமும் சுற்றமும் அழிந்து உறவும் அற்றுப் போனதினால் சூரனும் மயங்கித்  தத்தளித்தான். தன்னுடன் போர் செய்ய வந்தது இறைவனே என அறிந்தும், அடிபணிய  ஆணவம் விடவில்லை.

முருகன் சூரனின் ஆணவத்தை அடக்கும் பொருட்டு தன்  திருப்பெரு வடிவம் (விஸ்வரூபம்)காட்டியும், எல்லாம் வல்ல பரம்பொருள் தாமே  என பரமேசுர வடிவம் காட்டியும், சிவனும் அவன் மகனும் மணியும் ஒலியும் போல  ஒருவரே என்றுணர்த்தியும், தன் தன்மை மாறாது போர் செயலானான்.
சூரன் போர் செய்த ஒவ்வொரு தினமும் தனது ஆயுதங்களை ஒவ்வொன்றாக இழந்தான். அவன் தனக்கு சிவனால் வழங்கப் பெற்ற இந்திரஞாலம்” என்னும் தேரை அழைத்து முருகனின் படைச்சேனையையும் துூக்கிச் சென்று பிரபஞ்ச  உச்சியில் வைக்கும்படி கட்டளை இட்டான். இந்திரஞாலம் என்றதேரும் அவன்  கட்டளையை நிறைவேற்ற முருகனின் படையை தூக்கி பிரபஞ்ச உச்சிக்கு கொண்டு சென்றது.  முகனின் வேலானது சீறிப்பாய்ந்து தேரைத் தடுத்து நிறுத்தி முருகனிடம்  கொண்டு வந்து சேர்த்தது. முருகன் அத்தேரை தம் வசப்படுதி தன் உடைமையாக்கிக்  கொண்டார். இது கண்ட சூரபத்மன் செய்வதறியாது திகைத்தான். அதனால் சிவனால்  அவனுக்கு வழங்கப்பெற்ற சூலப்படையை முருகனை அழிக்கும்படி ஏவினான்.
சூலப்படையும் முருகனை நோக்கி வந்தபோது  முருகனின் வேல் அதனை மழுங்கச்  செய்து செயலற்றதாக்கி திரும்பிச் செல்ல வைத்தது. கடைசியாக சூரன் தனது  அம்புப் படையை முருகனை அழிக்க அனுப்பினான். முருகனின் வேல் அதை  பொடிப் பொடியாக்கி செயலிழக்கச் செய்தது. முருகனால் இறப்பது நிச்சயம் என  உறுதியாக தெரிந்திருந்தும் தேவர்களை விடுதலை செய்வது மானக் குறைவு என  எண்ணிய சூரன் ஆணவ மிகுதியால் தொடர்ந்து போராட துணிது சக்கரவானபக்ஷியாக  உருமாறி வானில் பறந்து பல அழிவுகளை ஏற்படுத்தியதுடன்  முருகனின் சேனையையும் சீண்டத் தொடங்கினான். இது  கண்ட முருகப்பெருமான் நிராயுதபாணியாக இருக்கும் எதிரியுடன் ஆயுதம் தாங்கி போர் புரிவது யுத்ததர்மத்திற்கு விரோதமானது என எண்ணி, இந்திரனை மயிலாக உருமாறும்படி கூறி அதன் மீது பறந்து சூரனை தாக்கலானார். சூரனும் தனது மாயாயால வித்தைகளினால் மறைந்து  தாக்கி மறைந்தான்.
தனது  படையினரையும்,  படைக் கலங்களையும் இழந்த  சூரன் அண்டங்கள் எல்லாம் மறைந்து ஒழிக்கலானான்.  கடைசியாக முருகப் பெருமான் எய்திய வேலானது அவன் சென்ற இடமெல்லாம் துரத்திச்  சென்று கடைசியாக நடுக்கடலடியில் மாமரமாய் மாறுவேடத்தில் நின்ற சூரனை  நீரினுள் சென்று மாமரத்தை இருகூறாக்கி சூரனை சங்காரம் செய்தது.
ஆணவம்  அழியப் பெற்ற சூரன் தம் தவறை உணர்ந்து தன்னை மன்னித்து, ஏற்றுக்கொள்ளும்படி மன்றாடி முருகனை வேண்டி நிற்க; அவன்மேல் இரக்கம்  கொண்டு பிளவுபட்ட மாமர பாதிகள் இரண்டையும் முருகன் தன் அருளால்  சேவலாகவும், மயிலாகவும் மாற்றி, மயிலை வாகனமாகவும் சேவலைக் கொடியிலும்  தன்னுடன் பிணைத்துக் கொண்டார்.
கந்த  புராணக் கதையைச் “சங்கரன் மகன் சட்டியில் மாவறுத்தான்” என்ற சொற்றொடர்  மூலம்நகைச் சுவையாக பயன் கூறுவார்கள். சங்கரன் புதல்வராகிய முருகப்  பெருமான் சஷ்டித்திதியிலே மாமரமாக வந்த சூரனை இரண்டாக அரிந்தார் என்பது  இதன் பொருள்.
முருகனின் ஆணைப்படி, வருணன் வீர மகேந்திரபுரியைக் கடலுக்கு அடியில் மூழ்கடிக்க, போர்முடிகிறது.
வெற்றி  வீரத் திருமகனாய், முருகப் பெருமான் திருச்செந்தூர் திரும்புகின்றான். 

சூரனுடன் முருகப் பெருமான் போர் புரிந்து அவனது ஆணவத்தினை அடக்கி ஆட்கொண்ட  நாளே இறுதிநாளாகிய சஷ்டி எனப்படும். சஷ்டி என்பது திதியாகும். இவர்கள்  இருவருக்கும் இடையில் போர் நடந்த இடம் முருகப் பெரமான் குடிகொண்டுள்ள  ஆறுபடை வீடுகளில் ஒன்றாகியதும், கடலும், கடல் சார்ந்த பிரதேசமாகிய நெய்தல்  நிலமாகிய திருச்செந்தூர் என்னும் தலமென கூறுவாருமுளர்.

சூரனை  அழித்த மனக்கேதம் தீர, செந்தூரில் போருக்கு முன்னரே கட்டப்பட்ட ஈசனின் ஆலயத்தில், கைகளில் ஜபமாலையோடு, சிவ பூசை செய்கிறான் முருகன். இந்தக் கோலமே நாம் இன்றும் திருச்செந்தூர் கருவறையில் காண்பது. கைகளில் ஜப மாலையுடன்  செந்தூர் மூலத்தானத்து முதல்வன் நிற்க, சற்று எட்டிப் பார்த்தால்,  கருவறைக்குள் சிவலிங்கமும் தெரியும்.
இங்கே  முருகப் பெருமான் அபயம்/வரம் தரும் கோலத்தில் இல்லாமல், ஜபம் செய்யும் கோலத்தில் உள்ளான்.
 கையில் வேல் கிடையாது. அலங்காரத்துக்காக மட்டும்  வேலையோ/யோக தண்டத்தையோ தோள் மீது சார்த்தி வைத்திருப்பார்கள்; பின் கரம்  சத்திப்படை ஏந்தி, இன்னொரு கரம் ஜபமாலை தாங்கி நிற்க, தியானத்தில்  முழந்தாளில் கைவைத்து, ஈசனைமலர்களால் அர்ச்சிக்கும் இன்னொரு கரம்.
முருகனுக்கு இடப்பக்கத்தில் உலகீசர் (ஜகன்னாதர்) என்னும் சிவலிங்கம்! அவருக்கே முதல்பூசைகள் செய்யப்படுகின்றன!
மூலவரின்  காலடியில் இரு மருங்கிலும் அவரைப் போலவே சின்னஞ் சிறு சிலைகள்! வெள்ளியில்  ஒன்று; தங்கத்தில் ஒன்று! திருவெளி (ஸ்ரீவேளி/சீவேளி என்று திரிந்து  விட்டது). கருவறையைக் காலையிலும் மாலையிலும் வெளி-வலம் வரும் மூர்த்திகளாக  அவற்றைப்பயன்படுத்துகிறார்கள்.
ஆலயத்தில்  சிறு சிவப்புக் குன்று-செம்பாறைகளை குடைந்தே கருவறை அமைந்துள்ளது அதனால்தான் செந்து+இல்=செந்தில் என பெயர் ஆனது. பின்னாளில் பிரகாரங்கள்  (வீதிகள்)என்று பெருகிப் பாறைக் குன்றுகள் மறைந்தாலும், இன்றும் இந்தச்  செந்திலில் உள்ளவனேமூலத்தானத்து முதல்வன்.
கிழக்கே  கடலைப் பார்த்த திருமுகம். ஒருமுகம்.  சிரிமுகம். பாலமுகம். சிறு பாலகன் ஆதலால், அதே உயரம் தான் ஆளுயரம். இல்லை! தலைமுடி மாலை சூடி, மணி முடி  தரித்து, வங்கார மார்பில் அணிப் பதக்கமும் தரித்து, வெற்றிப் பீடத்தில் ஏறி  நிற்கும் காட்சி!
சூரசம்ஹாரம்  நடைபெறும் தினத்தில் திருச்செந்தூர் ஆலயக் கடல் நீரானது சம்ஹாரம் நடைபெறுவதற்கு வசதியாக செந்தில் ஆண்டவனின் அருள் கருணையால் உள் முகமாகச் சென்று சூரசம்ஹாரம் முடிந்து செந்தில் ஆண்டவர் இருப்பிடம் திரும்பும் போது  கடலானது பழைய நிலைக்கு வருவதை காண முடிவதுடன் கருவறையில் உள்ள மூலவரின்  முகத்தில்சூரசம்ஹார களைப்பினால் ஏற்பட்ட வியர்வைத் துளிகளையும்  காணக்கூடியதாகஇருக்கின்றது.
முருகப்  பெருமான் சூரபத்மனோடும் அவனது படையினருடனும். பத்து தினங்கள் நடந்தபோரில்  அசுரர்களை வென்று சூரபத்மனை மயிலாகவும், சேவலாகவும் மாற்றினார். மயில் முருகனுக்கு வாகனம் ஆகியது. சேவல் முருகனின் வெற்றிக்கொடி ஆகியது.murugan deivanai marriage க்கான பட முடிவு
சூரசங்காரங்கள்  முடிந்த பின்னர், அமரேந்திரன் (இந்திரன்) தெய்வானையை முருகப்பெருமானிடமே  ஒப்படைக்க விழைகிறான். முருகனும் சரவணப் பொய்கையில் முன்னர் தாம்அருளிய  வாக்கின் படியே, தெய்வானை அம்மையைப் திருப்பரங்குன்றில் மணக்கிறார். பின்னர், அவ்வண்ணமே வள்ளி அம்மையையும், திருத்தணிகையில் மணம் புரிகிறார்.

ஐயப்ப விரத முறைகள்!

ஐயப்ப விரத முறைகள்!

கார்த்திகை மாதம் துவங்கியதும், இந்தியாவில் உள்ள ஐயப்ப பக்தர்கள் அனைவரும் ஐயப்ப பக்தியில் மூழ்கிப் போகின்றனர். இவர்கள் ஐயப்பனுக்காக மாலை அணிந்து பக்திச் செறிவுடன் ஐயப்பன் நாமத்தைச் சொல்லி விரதம் அனுசரிக்கிறார்கள். ஐயப்பன் கலியுக வரதன்; கலிகால தோஷத்தை அகற்ற ஐயப்பனைத் தரிசித்தால் போதும் என்கிற உணர்வு மேலிடுகிறது. ஆண்டுதோறும் இருமுடி ஏந்தி, சபரிமலைக்குப் புனித யாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே போகிறது. கடுமையான முறையில் அனைத்து விதமான விரதங்களையும் கடைப் பிடிக்கும் மாலையிட்ட ஐயப்ப பக்தன், சுவாமி ஐயப்பனின் பரிபூரண அனுக்கிரகம் பெற்றிருப்பதால், பக்தனையே ஐயப்பனின் அவதாரமாக மற்றவர்கள் மதிக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.

மாலை அணிந்து விரதமிருந்து சபரிமலை செல்வோர் மேற்கொள்ள வேண்டிய விரத முறைகள் :

1. சபரிமலை செல்ல விரும்புபவர்கள் கார்த்திகை மாதம் முதல் நாளோ அல்லது 19ஆம் தேதிக்குள்ளோ ஒரு நாளில் மாலை அணிய வேண்டும். கார்த்திகை மாதம் முதல் நாள், மாலை அணிந்தால் நாள் பார்க்க வேண்டாம். அதற்குப் பின் அணிபவர்கள் நல்ல நாள் பார்த்து மாலை அணிய வேண்டும். எப்படி இருந்தாலும் குறைந்தது 41 நாட்கள் விரதமிருக்க வேண்டும்.

2. மாலை, துளசி மணி 108 கொண்டதாகவோ, உருத்திராட்ச மணி 54 உள்ளதாகவோ வாங்கி, அதில் ஐயப்பன் திருவுருவம் பதித்த டாலர் ஒன்றையும் இணைத்து அணிய வேண்டும்.
3. தாய் தந்தையின் நல்லாசியுடன், குருசாமி ஒருவரின் கையால் ஆலயத்தில் பூஜை செய்து மாலை அணிய வேண்டும். குருசாமி கிடைக்காவிட்டால் கோயில் சென்று, கடவுள் பாதத்தில் மாலையை வைத்து, அர்ச்சகரிடம் தட்சணை கொடுத்து, அர்ச்சனை செய்து ஐயப்பனையே குருவாக நினைத்து மாலையை தரிசித்துக் கொள்ளலாம். இது எதுவுமே முடியாவிட்டால் கடவுளின் பிரதிநிதியான தமது தாயிடம் ஆசிர்வாதம் வாங்கி அவர்களது கையால் மாலையை அணிந்து கொள்ளலாம்.
4. இவ்வாறு மாலை அணிந்த பின்பு  கோபதாபம், குரோதம், விரோதம் கொள்ளக்கூடாது.   அண்டை, அயலாருடன் விரோதம் மறந்து, சிநேகம் பாராட்டி, பணிவுடன் பழகவேண்டும். இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையுமே இறைவனின் சொரூபமாகப் பார்க்க வேண்டும்.
5. காலையில் சூரிய உதயத்துக்கு முன்பும், மாலையிலும் குளிர்ந்த நீரில் நீராடி  கோவில்களிலோ, வீடுகளிலோ ஐயப்பனை மனதார நினைத்து சரணங்கள் கூறி வணங்க வேண்டும்.
6. கருப்பு, நீலம், காவி, பச்சை நிற வேட்டி, சட்டை அணியவேண்டும்.
7. பிரம்மச்சரிய விரதத்தை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.
8. மாலையை எக்காரணம் கொண்டும் கழற்றக்கூடாது.
9. ரத்த சம்பந்தமுள்ளவர்களின் மரணம் ஏற்பட்டால் குருசாமியிடம் சென்று மாலையை கழற்றிய பிறகே, துக்கத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
10. ஏதாவது ஒரு காரணத்தால் மாலையை கழற்ற நேர்ந்தால் அந்த ஆண்டு சபரிமலை செல்லக்கூடாது.
11. பெண்களின் சடங்கு வைபவத்துக்கோ, குழந்தை பிறந்த வீட்டிற்கோ செல்லக்கூடாது.
12. மது, மாமிசம், புகைபிடித்தலை விட்டுவிட வேண்டும்.
13. மாலை அணிந்த பக்தர்களின் வீட்டில் சாப்பிடலாம். மற்றவர்கள் வீட்டில் பால், பழம் சாப்பிடலாம்.
14. வீட்டுப்பெண்களுக்கு மாலை அணிந்த காலத்தில் மாதவிடாய் ஏற்பட்டால், ஏழுநாட்கள் கழித்த பின்னர் தான் அவர்கள் சமைத்த உணவை உண்ணவேண்டும்.
15. காலணிகள் பயன்படுத்தக்கூடாது.
16. கன்னிச் சாமிகள் தங்களின் வசதிக்கேற்ப வீடுகளில் பூஜைகள் நடத்தி ஐயப்பன்மார்களுக்கும் ஏழைகளுக்கும் அன்னதானம் செய்விக்கலாம்.
17. எதிர்ப்படும் ஐயப்ப பக்தர்களை ஐயப்பனாகவும், பெண்களை மாளிகைப் புறத்தம்பிகையாகவும் கருதிப் பழக வேண்டும்.
18. மற்றவர்களிடம் பேசும் பொழுது சாமி சரணம் எனத் தொடங்கி, விடைபெறும் பொழுது சாமி சரணம் எனக் கூற வேண்டும்.
19. இருமுடிக்கட்டு பூஜையை வீட்டிலோ, குருசாமி இடத்திலோ, கோவில்களிலோ வைத்து நடத்த வேண்டும்.
20. சபரிமலைப் பயணம் புறப்படுகையில் யாரிடமும் போய் வருகிறேன் எனக் கூறக்கூடாது.
21. பம்பை நதியில் நீராடும் பொழுது மறைந்த தமது முன்னோர்களை நினைத்து அவர்களுக்கு ஈமக்கடன்களைச் செய்து நீராட வேண்டும்.
22. யாத்திரை முடிந்து வீடு திரும்பியதும், ஐயப்பனின் அருள் பிரசாதக் கட்டினைத் தலையில் ஏந்திய படியே வீட்டு வாயில்படியில் விடலைத் தேங்காய் அடித்து வீட்டினுள் நுழைய வேண்டும்.
23. வீட்டில் பூஜை அறையில் பூஜை செய்து, கட்டினைப் பிரித்து, பிரசாதங்களை விநியோகம் செய்ய வேண்டும்.
24. யாத்திரை இனிய முறையில் நிறைவுற்றபின் குருநாதர் அல்லது தாயார் மூலம் மாலை கழற்றும் போது சொல்லும் மந்திரத்தை கூறி மாலையைக் கழற்றி,சந்தனத்தில் நனைத்து  ஐயப்பன்  திருவுருவப் படத்திற்கு முன்னால் வைத்து விட்டு தீபாராதனை காட்டி விரதம் முடிக்க வேண்டும்.

தெரிந்து கொள்ள வேண்டியவை:
1. மாலை போட்ட நாளிலிருந்து விரதத்தை முடிக்கும்வரை - முடிவெட்டுதல், சவரம் செய்துகொள்ளுதல் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.
2. மெத்தை, தலையணை போன்றவற்றை உபயோகிக்காமல், தரையில் ஜமுக்காளம் ஒன்றை விரித்துப் படுக்கவேண்டும்.
3. பேச்சைக் குறைத்து மவுனத்தைக் கடைப்பிடித்தலே உத்தமம்.
4. மற்றவர்களிடம் சாந்தமாகப் பழகவேண்டும். பிறர் மனம் புண்படும்படி பேசக் கூடாது.
5. விரத நாட்களில் பெண்களை - சகோதரிகளாகவும் தாயாராகவும் கருத வேண்டும்.
6. வீட்டிலிருக்கும் பெண்கள் மாதவிலக்கானால், அவர்கள் தனி அறையில் ஒதுக்குப்புறமாக பார்வையில் படாதபடி இருத்தல் வேண்டும். அப்படி வசதி இல்லாவிடில், மாலை அணிந்தவர்கள் வெளியில் எங்காவது தங்கியிருத்தல் நல்லது.
7. விரத சமயத்தில் மாலை அணிந்தவர்களுக்கு மிகவும் துன்பங்கள் ஏற்படும் என்பதும், சோதனைகளுக்கு உள்ளாவார்கள் என்பதும் தவறான கருத்துகளாகும்.
8. ஒருவேளை, அணிந்திருக்கின்ற ஒரே மாலை தவறுதலாக அறுந்துபோக நேரிட்டால், அதைச் செப்பனிட்டு அணிந்துகொள்ளலாம். இதில் தவறு ஏதுமில்லை. எந்தவிதமான தவறும் செய்யாமல் விரதத்தைக் கடைப்பிடிக்கும் பட்சத்தில், இப்படி மாலை அறுந்துவிட்டதே என்ற வீண் மன சஞ்சலமும் அடைய வேண்டியதில்லை.
9. மாலை போடும் சமயத்தில் எந்தவிதமான பயமோ, சந்தேகமோ, குற்ற உணர்ச்சியோ இருத்தல் கூடாது. அப்படி மனசஞ்சலம் ஏதாவது இருந்தால், மாலை போடுவதை தள்ளிப்போடுதல் நல்லது.
10. ஐயப்ப விரதத்தில் வீட்டிலிருக்கும் மனைவி மற்றும் பிற பெண்களின் தொண்டும் அப்பழுக்கற்ற பக்தியும், மிகவும் உயர்வானதும் போற்றத்தக்கதும் ஆகும்.
11. இருமுடி கட்டும் வைபவத்தை, தனது வீட்டிலேயே வைத்துக் கொள்ளுதல் நல்லது. வீடு சுபிட்சமாக இருக்கும். மங்கலமாகவும் இருக்கும்.
12. மாலையணிந்து சபரிமலைக்குச் செல்லும் நோக்கங்கள் மூன்று: தன்னையே புனிதப்படுத்தி சத்தியமான பதினெட்டாம் படியில் ஏறி பகவான் ஐயப்பனைத் தரிசித்தல்; தன் புலன்களை எல்லாவகையிலும் கட்டுப்படுத்தி நெறியான வாழ்க்கை வாழ்ந்து மனம், உடல் இவற்றைத் தூய்மைப்படுத்துதல், தான் சுத்தமாக இருப்பதோடு அல்லாமல், வீட்டையும் வீட்டில் உள்ளவர்களையும் சுத்தமாக இருக்கவைத்து அவர்களையும் பக்தி நெறிக்கு உட்படுத்துதல்.
13. மாலைக்கு மதிப்பளித்து ஒரு மண்டல காலம் விரத முறைகளை நெறியாகவும் முறையாகவும் கடைப்பிடித்து, தான் என்னும் அகங்காரத்தை விட்டொழித்து, இறைவனிடம் முழு நம்பிக்கை வைத்து, முழு சரணாகதி அடைந்து, ஒருமுகமாக வழிபட்டால், இறைவனின் அருட்கடாட்சம் குறைவில்லாமல் கிடைக்கும். படிகள் ஏற ஏற, அவர்கள் தன் வாழ்வில் உயர்ந்துகொண்டே இருப்பார்கள் என்பதும் சத்தியம்!

சீரடி சாய்பாபாவின் 9 வார விரதம்

சீரடி சாய்பாபாவின் 9 வார விரதம்


சீரடி சாய் பாபா பக்தர்கள் தாங்கள் நினைத்த காரியம் நிறைவேற பாபாவை வேண்டிக் கொண்டு ஒன்பது வியாழக்கிழமை சாயி விரதம் இருப்பார்கள். சாயின் 9 வியாழக்கிழமை விரதம் குறித்த விதி முறைகள். 

விரதத்தை எந்த ஒரு வியாழக்கிழமையானாலும் சாயி நாமத்தை எண்ணி ஆரம்பிக்கலாம். இந்த விரதம் ஆண்,பெண்,குழந்தைகள் யார் வேண்டுமானாலும் இருக்கலாம். 

எந்த காரியத்திற்காக ஆரம்பிக்கிறோமோ,அதை தூய மனதில் சாயி பாபாவை எண்ணி பிராத்தித்து  கொள்ள வேண்டும். காலை அல்லது மாலை சாயி பாபாவின் போட்டோவிற்கு பூஜை செய்ய வேண்டும். 

இந்த விரதத்தை திரவியஆகாரங்கள்(பால்,டீ,காபி,பழங்கள்,இனிப்புகள்) உட்கொண்டு செய்யவும். அப்படி நாள் முழுவதும் செய்யமுடியாதவர்கள்
 ஒரு வேளை(மதியமோ,இரவோ) உணவு அருந்தலாம்.  நாள் முழுவதும் பட்டினியாக இந்த விரதம் செய்யவே கூடாது. 

மேற்கூறிய விதிமுறைகளின்படி விரதமும்,விரத நிறைவும் செய்தால் நிச்சயமாக எண்ணிய காரியம் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
தொடர்புடைய படம்


ஓரு தூய ஆசனத்தில் அல்லது பலகையில் மஞ்சள்  துணியை விரித்து சாயி பாபா படத்தை வைத்து தூய நீரால் துடைத்து சந்தனம் குங்குமம் வைத்து திலகம் இட வேண்டும். 
காலை அல்லது மாலை வேளையில் அவரவருக்கு எந்த நேரம் செய்ய முடியுமோ அந்த நேரம் செய்யலாம்.
மஞ்சள் நிறமலர்கள்  சாயிபாபா படத்திற்கு அணிவித்து, தீபம், ஊதுபத்தி ஏற்றி , பிரசாதம் (பழங்கள், இனிப்புகள், கற்கண்டு எதுவானாலும்) நிவேத்தியம் வைத்து படைத்து, சாயி பாபாவை ஸ்மரணை செய்யவும். 

முடிந்தால் சாயிபாபாவின் கோவிலுக்குச் செல்லலாம். வீட்டிலேயே சாயி பாபாவுக்கு 9 வாரங்கள் பூஜை செய்யவும். சாயி விரத கதை, சாயி பாமாலை, சாயி பவானி இவற்றை பக்தியுடன் படிக்கவும். வெளியூர் செல்வதானாலும் இந்த விரதம் கடைபிடிக்கலாம். 

விரதத்தின் ஒன்பது வாரங்களில் பெண்களுக்கு மாத விலக்கு அல்லது இன்ன பிற காரணங்களாலே விரதம் செய்ய முடியவில்லை எனில், அந்த வியாழக்கிழமை கணக்கில் எடுத்து கொள்ளாமல் இன்னொருவியாழக்கிழமை விரதம் இருந்து 9 வியாழக்கிழமைகள் நிறைவு செய்யவும் 
விரத நிறைவு விதிமுறைகள் 

ஒன்பதாவது வியாழக் கிழமை ஐந்து ஏழைகளுக்கு உணவு அளிக்கவும். நேராக உணவு அளிக்க முடியாதவர்கள் யார் மூலமாகவும் பணமோ,உணவுப் பொருளோ கொடுத்து ஏற்பாடு செய்யவும். 

சாயிபாபாவின் மஹிமை மற்றும் விரதத்தை பரப்புவதற்காக 9ஆவது வியாழக் கிழமை இந்த சாயி விரத புத்தகங்களை வாங்கி நம்முடைய வீட்டிற்கு அருகில் வசிப்பவர்,சொந்த பந்தம் தெரிந்தவர் என்று இலவசமாக விநியோகிக்கவும்(5 
அல்லது11அல்லது 21 என்ற எண்ணிக்கையில்) விநியோகிக்கும் அன்று பூஜையில் வைத்த பிறகு விநியோகிக்கவும்.இதனால் புத்தகத்தை பெறும் பக்தர்களின் விருப்பங்களும் நிறைவேறும் 

மீனாட்சிக்கு மூன்று மார்புகள் ஏன்?

மீனாட்சிக்கு மூன்று மார்புகள் ஏன்?



மலையத்துவஜன் மகளாகப் பிறந்து பட்டத்தரசியான மீனாட்சி, ஒரே குடையின் கீழ்உலகத்தைக் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டாள். சாதாரண அரசர்களே தங்களைச் சுற்றியுள்ள நாடுகளை தங்கள் கைக்குள் கொண்டு வந்து விடும் போது, சர்வலோக நாயகியான மீனாட்சி, மூவுலகங்களையும் தனது ஆளுகைக்குள் கொண்டு வர முயற்சித்ததில் வியப்பேதும் இல்லையே! அவள் என்ன சாதாரண ராஜாக்களைப் போல் நாடுபிடித்து, தான் சம்பாதிக்கவா போருக்கு சென்றாள்? உலக உயிர்கள் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைப்பதன் மூலம்
அவர்களின் ஆணவத்தை அடக்கி நெறிப்படுத்தவே திக்விஜயம் சென்றாள். இந்த உலகம் தன்னுடையது என்பது போல் ஆட்டம் போடும் ஆணவக்காரர்களின் கொட்டத்தையும் அடக்க சென்றாள்.

மீனாட்சியம்மை பிறந்தபோது அவளுக்கு மூன்று மார்புகள் இருந்தன. பெற்றவர்கள் வருத்தம் அடைந்தனர். இயல்புக்கு மாறாக பிறந்துள்ள இவளை யார் திருமணம் செய்வார்கள் என்று யோசித்தார்கள். ஆனால் அம்பிகையோ காரிய காரணத்துடன் தனக்கு மூன்று தனங்களை வருவித்துக் கொண்டாள். சிவனுக்கு மூன்று கண்களாயிற்றே! அது ஒரு காரணம். அவர் வழக்கமான கண்களுடன் 
நெற்றியிலுள்ள கண்ணாலும் ஜீவன்களை கண்காணிக்கிறார். கோபம் வரும் போது வெப்பத்தை உமிழ்கிறார். இதனால் ஜீவன்கள் நடுங்குகின்றன. தந்தை கண்டிப்புக்காரராக இருந்தாலும், தாயார் அனுசரணையாக இருப்பாள் அல்லவா? அப்படி தந்தையின் கண்டிப்பில் தவிக்கும் உயிர்களை அம்பிகை முப்பால் ஊட்டி தாலாட்டுகிறாள்.


உலகின் முதல் இன்ஜினியர்:

ஒரு கட்டடமோ, வீடோ அமைக்க வேண்டுமெனில் அவை எப்படி அமைய வேண்டுமென இன்ஜினியர் வரைபடம் போட்டுத் தருவார். மதுரை நகரம் உருவாவதற்கு வரைபடம் போட்டுக் கொடுத்தவர் யார் தெரியுமா?

சொக்கநாதரே தான்! அவரே உலகின் முதல் இன்ஜினியர். குலசேகர பாண்டிய மன்னன், சொக்கநாதர் கோவிலைச் சுற்றி நகரம் அமைக்க எண்ணியபோது, எப்படி அமைப்பது எனத் தெரியவில்லை. குழம்பிய மன்னன் தீர்வு வேண்டி சொக்கநாதரை வேண்டினான். அப்போது சித்தர் வடிவில் மன்னரிடம் வந்த சொக்கநாதர், கோவிலை தாமரை மொட்டாகவும், அதைச் சுற்றி அமையும் வீதிகளை இதழ்களாகவும் கருதி நகர் அமைக்கும்படி கூறினார். இவ்வாறு மதுரை நகரம் எவ்வாறு அமைய வேண்டுமென்று வரைபடம் போட்ட சொக்கநாதர் நம் வாழ்க்கைப் பாதைக்கும் வரைபடம் போட்டுத் தருவார் என்பதில் சந்தேகமில்லை.

கிளி ரகசியம்:
meenakshi amman க்கான பட முடிவு

மீனாட்சியம்மன் என்றதுமே கிளி நினைவிற்கு வரும். தன்னை வேண்டும் பக்தர்களின் கோரிக்கைகளை அம்பிகைக்கு, கிளி திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்குமாம். மீனாட்சியிடம் கிளி இருப்பதற்கான இன்னொரு காரணத்தையும் தெரிந்து கொள்ளுங்கள். இந்திரன் சாப விமோசனத்திற்காக பூலோகம் வந்தபோது இத்தலத்திற்கு வந்தான். அப்போது சொக்கநாதர் லிங்கமாக எழுந்தருளியிருந்த இடத்தின் மேலே பல கிளிகள் வட்டமிட்டபடி அவரது திருநாமத்தைச் சொல்லிக்கொண்டு பறந்து கொண்டிருந்தன. இதைக்கண்டு ஆச்சரியமடைந்த இந்திரன், சொக்கநாதரை வணங்கி விமோசனம் பெற்றான். இவ்வாறு இந்திரன் இங்கு சிவவழிபாடு செய்வதற்கு 
கிளிகள் வழிகாட்டியதன் அடிப்படையில் மதுரை தலத்தில் கிளி முக்கியத்துவம் பெற்று விட்டது


சனி, 28 அக்டோபர், 2017

பழி அனைத்தும் ஸ்ரீ நாராயணரைச் சேரட்டும்!

பழி அனைத்தும் ஸ்ரீ நாராயணரைச் சேரட்டும்!

 
ஒரு முறை கேரளாவில் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளுக்கு இரவு உணவு இல்லை. ஆனால் அன்று எனப்பார்த்து அளவிலாப் பசி எடுக்க என்ன செய்வது என்று எண்ணி “யான் இவ்வாறு வருந்துவதாலுண்டாகும் பழி எல்லா உயிர்களுக்கும் படியளந்து காக்கின்ற ஸ்ரீ நாராயணரைச் சேரட்டும்” எனக்கூறி படுத்துக் கொண்டார். இப்படி ஒரு பக்தர் பசியில் வாடுவதைக் கண்டும் தனக்கே பழி அனைத்தும் என்று உரைத்தது கண்டும் ஸ்ரீ நாராயணப் பெருமாள் ஒரு அதிசயம் நடத்தினார். ஸ்ரீ நாராயணர் ஒரு வைணவ அந்தணராக வந்து இங்கு பசியால் பட்டிணியாகப் படுத்திருக்கும் பக்தன் யார்? என்று பலமுறை உரக்கக்  கூற சுவாமிகள் வெளியே வந்து அடியேன் தான் என்றார்கள். அவர் அன்னமளிக்க சுவாமிகள் அதை உண்டு பசி தீர்த்தார்கள். தன்னுடன் இருந்த ஒருவருக்கும் உணவு கொடுத்தார்கள். பசி ஆறிய பின் ஆமாம் உங்கள் பெயர் என்ன? என்று உணவு கொடுத்த அந்தணரைக் கேட்க எமது பெயர் சீனிவாசன் என்று பதில் உரைத்தார். நீ சொன்ன ஒரு வார்த்தை எனது மனதை உறுத்தியதால் இந்த உணவு கொண்டு வந்தேன். சரி வருகின்றேன் என்று சொல்லி மறைந்தார். வந்தது அந்த ஸ்ரீஹரி நாராயணே என்று உணர்ந்த சுவாமிகள் ஒரு வெண்பா எழுதினார்கள்.
                                            
 ”குருவனப்புக் கண்டறியார் கொச்சிவள நாட்டின்
பெருவனத்தி லென்னை யன்பிற்பேணி – யருமையுட
நன்னங் கொடுக்கவந்த வந்தணனே யந்தவண்ணஞ்
சொன்னங் கொடுக்க வொண்ணா தோ”

பக்தர்களுக்கு சோதனை வரும் போது இறைவன் உடனே ஓடோடி வந்து காப்பான் எனும் வாக்கு இதன் மூலம் மெய்யாகின்றது. நாராயணா சோறு கொடு என்று சுவாமிகள் கேட்கவில்லை. இப்படி ஒரு உயிர் பட்டினியால் வாடினால் அதைக் காக்கும் பொறுப்பு ஸ்ரீஹரி நாராயணனுடையதாகும். படைத்தல் ,காத்தல், அழித்தலில் விஷ்ணுவுக்கு காக்கும் தொழில். ஒரு உயிர் நடுக்காட்டில் உணவில்லாமல் தவிக்கும் போது அந்த உயிரைக் காக்கும்கடமை ஸ்ரீஹரியையே சார்வதால் நம் சுவாமிகள் நீ காக்காமல் விட்டாய் எனும் பழி உனக்குதான் சேரும் என்று கூற பெருமாள் உடனே வந்து உணவிட்டார். அந்த அளவு சுவாமிகளின் பக்திக்கும், வைராக்கியத்திற்கும் வலிமை உண்டு. இல்லாத பாவங்களைச் செய்துவிட்டு ஒரு ரூபாய்க்கு கற்பூரம் வாங்கி கொழுத்தி கடவுளே என்னைக் காப்பது உன் கடமை உடனே வா என்றால் கடவுள் வருவாரா? எனவே குரு நாதர்களின் வழியில் சென்று நாமும் உண்மை பக்தியில் இருந்தால் நாம் ஒரு அடி எடுத்து வைக்க கடவுள் நம்மை நோக்கி  நூறு அடி எடுத்து வைப்பார். 

தமிழ் கடவுள் முருகனின் வேறு பெயர்கள்

தமிழ் கடவுள் முருகனின் வேறு பெயர்கள் 

ஒரு கடவுளைப் பல பெயர்களால் பூஜிப்பது இந்து மதத்தில் வழக்கமான ஒன்று. ஒவ்வொரு பெயரும், அந்தக் கடவுள் அவதாரக் காரணம், அற்புத சக்தி, உடல் தோற்றம், ஏந்திய ஆயுதம் என இன்னும் பல காரணங்களின் அடிப்படையில் அமைந்திருக்கும்.
முருகன்
‘முருகன்’ என்றால் அழகுடையவன் என்று ஒரு பொருள். சிவபெருமானின் நெற்றிக்கண் பொறிகள், பார்வதியின் சரீரமான சரவணப் பொய்கையில் சேர்ந்தவுடன் முருகன் தோன்றியதால், சிவபெருமானின் என்றும் மாறா இளமையையும், தேவியின் அழகையும் சேர்த்துப் பெற்றார் முருகப் பெருமான்.
ஆக்கல், காத்தல், அழித்தல் என முத்தொழிலை முறையே புரியும் பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவனின் அம்சமாகக் கருதப்பட்டு, ‘முருகன்’ என அழைக்கப்படுவதாகவும் நம்பப்படுகிறது. அதாவது முருகாவிலுள்ள ‘மு’ முகுந்தனையும் (விஷ்ணு), ‘ரு’ ருத்திரனையும் (சிவன்), ‘க’ கமலனையும் (பிரம்மா) குறிப்பதாக ஒரு கருத்து உள்ளது.
கார்த்திகேயன்
பரமேசுவரனின் கண்களிலிருந்து ஆறு பொறிகள் வெளிவந்து, அவை சரவணப் பொய்கையில் தங்கி ஆறுமுகனாக உருக்கொண்டன. அப்போது கார்த்திகைப் பெண்கள் (கிருத்திகா நட்சத்திரங்களின் அதிதேவதைகள்) என்னும் அறுவர் அவரை எடுத்துப் பாலூட்டினார்கள். கார்த்திகைப் பெண்கள் பாலூட்டி வளர்த்ததால் ‘கார்த்திகேயன்’ என்று பெயர் வந்தது.
ஆறுமுகன் (அ) ஷண்முகன்
சிவபெருமானின் கண்களிலிருந்து வெளிவந்த ஆறு பொறிகள் ஆறுமுகங்களாக மாறியதால் ‘ஆறுமுகன்’ எனப் பெயர் பெற்றார். முதல் ஐந்து முகங்கள் பஞ்ச பூதங்களைக் குறிக்கின்றன. ஆறாவது முகம் உயிருள்ள அனைத்து ஜீவன்களுக்குள் இருக்கும் ஆன்மாவைக் குறிக்கிறது. முருகன் அம்மையும் அப்பனுமாக இருப்பவன். ஆகையால், அம்மையின் ஒரு முகமும் அப்பனின் ஐந்து முகமும் சேர்ந்து ஆறுமுகமானான் என்று ஒரு விளக்கம் உள்ளது.
ஏறு மயிலேறி விளையாடும் முகம் ஒன்று, ஈசனுடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்று, கோரும் அடியார்கள் வினை தீர்த்த முகம் ஒன்று, குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்று, மாறுபட சூரரை வதைத்த முகம் ஒன்று, மற்றும் வள்ளியை மணம் புரிய வந்த முகம் ஒன்று என்று முருகப் பெருமானே மொழிந்ததாக ஒரு விளக்கம் உள்ளது.
பக்தர்களின் ஆசைகளைப் பூர்த்திசெய்ய ஒரு முகம், பக்தர்களின் அறியாமையை ஒழித்து அறிவை நிலைநிறுத்த ஒரு முகம், பக்தர்களின் ஆழ்மனதில் புதைந்துள்ள எண்ணங்களை வெளிக்கொண்டுவர ஒரு முகம், யாக யக்யங்களைச் செய்யத் துணை புரிய ஒரு முகம், நல்லவர்களைக் காத்துத் தீயவர்களைத் தண்டிக்க ஒரு முகம், மற்றும் பக்தர்களிடம் அன்பு என்ற சுடரை ஏற்றி இன்பத்தை நிலைநிறுத்த ஒரு முகம் என ஆறுமுகங்களுக்கும் தனித்தனியான முக்கியத்துவம் உள்ளன.
வேலாயுதன் (அ) வேலவன்
கிரவுஞ்ச மலையாக நின்ற தாரகாசுரனை அழிக்கவும், சூரபத்மனை அழிக்கவும், தாய் பார்வதி தேவியிடமிருந்து ‘வேல்’ எனும் ஆயுதத்தைப் பெற்றார். ஆயுதமாக வேல் வைத்திருப்பதால் ‘வேலாயுதன்’ என அழைக்கப்படுகிறார். வேல் மூலம் பக்தர்களின் அறியாமையை அழித்து அறிவை நிலைநாட்டுவதாக நம்பிக்கை உள்ளது.
கந்தன் 
ஸ்கந்த’ என்னும் வார்த்தைக்கு, சம்ஸ்கிருதத்தில் ‘வெளிப்படுவது’ என்று அர்த்தம். மேகத்திலிருந்து மின்னல் வெளிப்படுவதுபோல், சிவ ஜோதியிலிருந்து ஆறு பொறிகளாக வெளிப்பட்டுத் தெறித்ததால், ‘ஸ்கந்தன்’ என்ற பெயர் உண்டாயிற்று. ‘ஸ்கந்தன்’ தமிழில் ‘கந்தன்’ என மருவியுள்ளது.
குகன் 
மலைக்குகைக்குள் வசிப்பவன் குகன் என்று அழைக்கப்படுவான். முருகப் பெருமான் பக்தர்களின் இதய குகைக்குள் என்றும் வசிப்பதால் ‘குகன்’ என்று அழைக்கப்படுகிறார். பக்தர்களின் இதயத்தில் வசித்து, எண்ணங்களை மேம்படுத்தி, பக்தர்களை நல்வழியில் நடத்திவைப்பதாக ஒரு நம்பிக்கை உள்ளது.
காங்கேயன்
சிவபெருமானின் கண்களிலிருந்து வெளிவந்த ஆறு பொறிகள் கங்கையிலுள்ள சரவணப் பொய்கையைச் சேர்ந்த பிறகே முருகனாக தோன்றியதால், முருகருக்குக் கங்கை நேர் தாயார் ஆகிறாள். அதனால் முருகன் ‘காங்கேயன்’ என்று அழைக்கப்படுகிறார். மேலே விவரித்துள்ள பெயர்களைத் தவிர முருகனுக்கு, ‘சுப்ரமண்யர்’, ‘தண்டாயுதபாணி’, ‘சரவணபவ’, ‘சுவாமிநாதன்’, ‘குமாரஸ்வாமி’, ‘ஞானஸ்கந்தன்’ என இன்னும் பல பெயர்கள் உண்டு.

புதன், 25 அக்டோபர், 2017

தீபாவளி கங்கா ஸ்நானம்- புனித நீராட நல்ல நேரம்

தீபாவளி கங்கா ஸ்நானம்- புனித நீராட நல்ல நேரம்

 நல்ல எண்ணெயில் லட்சுமி தேவியும், வெந்நீரில் கங்கா தேவியும் எழுந்தருள்வதாக ஐதீகம். எனவேதான் தீபாவளி நாளில் கங்கா ஸ்நானம் ஆகிவிட்டதா என்று கேட்கின்றனர்.
இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் முக்கியமானதாக தீபாவளி பண்டிகை அமைந்துள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. அன்றைய தினம் அதிகாலையிலேயே எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு வித, விதமான புத்தாடை அணிந்து, வகை, வகையான இனிப்புகளுடன், பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
ஐப்பசி 1, 18.10.2017, புதன்கிழமை சதுர்த்தசி. தீபாவளி பண்டிகை. 
ஐப்பசி 2, 19.10.2017, வியாழக்கிழமையன்று ஸர்வ அமாவாசை. 
கேதார கெளரி விரதம். லக்ஷ்மி குபேர பூஜை செய்யலாம். 
ஐப்பசி 3, 20.10.2017, வெள்ளிக்கிழமையன்று பிரதமை கோவர்த்தன பூஜை செய்யலாம். 
ஐப்பசி 4, 21.10.2017, சனிக்கிழமை யம துவிதியை சகோதரர்களுக்கு விருந்து அளிக்கும் நாள்.
தீபஒளி ஏற்றி வழிபடும் நாள்

தீபஒளி ஏற்றி வழிபடும் நாள் தீபாவளி  பண்டிகை புதன்கிழமை 18ஆம் தேதியன்று கொண்டாடப்படுகிறது. தீபாவளி தினத்தில் எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை அணிந்து, வீடுகளில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இது நரகாசுரனுக்கு கிருஷ்ணபகவான் அளித்த வரமாகும். இன்று எண்ணெய் தேய்த்து குளிக்காதவர்கள் நரகத்தை அடைவார்கள் என்று கூறுகின்றனர்.

எண்ணெய் குளியல்

எண்ணெய் குளியல்

தீபாவளியன்று நீராடுவதை "புனித நீராடல்" என்று அழைப்பார்கள். அதற்கு காரணம், அன்றைய தினம், அதிகாலையில் "சந்திர தரிசனம்" காலத்தில் எல்லா இடங்களிலும், கிடைக்கும் தண்ணீரில் (நதிகள், ஏரிகள், குளங்கள், கிணறுகள், நீர்நிலைகள்) "கங்கா தேவி" (கங்கை நீர்) வியாபித்து இருப்பதாக ஐதீகம். தீபாவளி தினம் அதிகாலை 3 மணியில் இருந்து 5மணிவரை உள்ள காலம் (இலங்கை, இந்தியாவில்) எண்ணெய்க் குளியலுக்கு உகந்த காலம் என கணிக்கப் பெற்றுள்ளது.
சூரிய உதயத்திற்கு முன் நீராடல்

சூரிய உதயத்திற்கு முன் நீராடல்

ஐப்பசி மாதத்தில் தேய்ப்பிறை பதினான்காம் நாளாகிய சதுர்த்தசியன்று கிழக்கு அடிவானத்தில் சூரிய உதயத்திற்கு சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பாக தேய் பிறைச் சந்திரன் மெல்லியதொரு கீற்றாகத் தோன்றும். சூரியன் உதயமாகிவரும் நேரத்தில் சூரிய ஒளியில் அது மங்கிப்போய் கண்ணுக்குப் புலப்பட மாட்டாது. ஆனாலும் கூட சூரிய உதயத்திற்கு முன்பு கவனமாகத் தேடிப்பார்த்தால் சுமார் 20 நிமிடங்களுக்கு சந்திரனைக் காண முடியும்.

தெய்வங்களின் தரிசனம்
 இந்த நேரத்தில் பூமியில் உள்ள அனைத்து நீர் நிலைகளிலும் ஆகாச கங்கை ஆர்ப்பரிக்கும் என்பது ஐதீகம். ஆகவே அந்த நேரத்தில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். அதனால்தான் தீபாவளியன்று விடியுமுன் குளிப்பதை "கங்கா ஸ்நானம்" என்று கூறுகிறார்கள். அத்துடன் அன்று நீராடும் போது அணியும், எண்ணெயில்-லட்சுமியும், அரப்பில்-சரஸ்வதியும், குங்குமத்தில்-கௌரியும், சந்தனத்தில்-பூமாதேவியும், புத்தாடைகளில்-மஹாவிஷ்ணுவும் வசிப்பதாக கருதப்படுவதேயாகும்.

பட்டாசு வெடிப்பது அவசியம்

பட்டாசு வெடிப்பது அவசியம்தீபாவளி நாளில் நண்லெண்ணையை கண்டிப்பாக தலையில் தேய்த்து குளிக்க வேண்டும். இதனால் சனிஸ்வர பகவானின் பிடியில் இருந்தும் தப்பிப்போம். தரித்திரமும் நீங்கும். துஷ்ட சக்தியை விரட்டும் பட்டாசு வெடிப்பதால் துஷ்டசக்திகள் விலகும். தொடர்புடைய படம்தோஷத்தை நீக்கும் மஞ்சள் புது உடை உடுத்தும்போது கண்டிப்பாக மிகச் சிறிய அளவில் மஞ்சள் வைத்த பிறகே அந்த புத்தாடையை உடுத்த வேண்டும். இதனால் தோஷங்கள் நீங்கும்.
'கங்காஸ்நானம்' க்கான பட முடிவு

சாஸ்திரங்களை கடைபிடிப்போம்

தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கு எந்த தோஷமும் கிடையாது. அன்றைய தினம் எண்ணெய் குளியலை 'கங்காஸ்நானம்' என்று புனிதமாக கூறுகின்றனர். தீபாவளி அன்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்த சாஸ்திர பரிகாரங்களை கடைபிடித்தால் நம்மை வாட்டி வதைக்கும் தரித்திரங்கள் விலகி, வாழ்க்கையே ஏறுமுகமாக இருக்கும் என்பது நிச்சயம்.