இரட்டை பிள்ளையார்
பிள்ளையார் மிகவும் எளிமையான கடவுள்.மஞ்சள் ,சந்தனம் போன்றவற்றை கூம்பு வடிவில் பிடித்து பிள்ளையாரை வழிபடலாம்.எந்த காரியத்தை தொடங்கினாலும் பிள்ளையாரது அருள் இல்லாமல் அந்த காரியம் வெற்றி அடைவது இல்லை.சிவ பெருமான் கூட,பிள்ளையாரை வணங்கி விட்டுதான் காரியத்தை செய்ய தொடங்குவார் என்று புராணங்கள் கூறுகின்றன.விநாயகரே முழுமுதல் கடவுளாக கருதப்படுகிறார்.
ஒரு பிள்ளையாரை வணங்கினாலே நமக்கு பலன் கிடைக்கிறது என்றால் இரட்டை பிள்ளையாரை வணங்கினால் இருமடங்கு பலன்கள் கிடைக்கும்.
விநாயகர் மட்டுமே இரட்டையாக இருப்பார்.ஒருவர் விக்னராஜர்.மற்றொருவர் விநாயகர்.விநாயக ஷோடச நாமங்களில் விக்னராஜோ விநாயக என்று இப்பெயர் உள்ளன.
விக்னராஜா தடைகளை உண்டாக்குவதில் கெட்டிக்காரர்.விநாயகர் தடைகளை போக்குவதில் வல்லவர்.இந்த இருவரின் நோக்கமும் பக்தர்களுக்கு அருள்புரிய வேண்டும் என்பதற்காக தான் என்கிறார் காஞ்சி பெரியவர். அதாவது,தடையும் நானே,அதை போக்குவதும் நானே என்கிறார்கள் இரட்டை பிள்ளையார்கள்.
இரட்டை பிள்ளையார் திருவண்ணாமலையில் மிக பழமையான கோவில்களில் உள்ளது.மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலிலும் இரட்டை பிள்ளையாரை காணலாம்.
பரிகாரங்கள்
திருகோண நட்சத்திரத்தில் இரட்டை பிளளையாருக்கு மாம்பழங்கள் நிவேதனம் செய்து ஏழை தம்பதிகளுக்கு அளித்தால் கணவன் மனைவி உறவு மேம்படும்.
திருவாதிரையன்று ,வில்வ மாலை தொடுத்து இவரை வழிபட்டால் நோய் நொடிகள் குணமாகும்.
பஞ்சமி திதியில் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து வழிபட்டால் கடன் பிரச்சினை தீரும்.
ஒவ்வொரு மாத ரோகிணி நட்சத்திரத்தின் போது சந்தனத்தை தங்கள் கைகளாலேயே அரைத்து இரட்டை பிள்ளையார் செய்து வணங்கினால் கடன் தொல்லை நீங்கும்.
சங்கட ஹர சதுர்த்தியன்று ,விரதமிருந்து இரட்டை பிள்ளையாரை வழிபடுவதால் லக்ஷ்மியின் அருளும் கிடைக்கும்.
திருமணத்தடையை போக்குவதில் இரட்டை பிள்ளையார் சிறப்பு வாய்ந்தவர்.திருமணத் தடை நீங்க திங்கள்தோறும் 16 வாரங்கள் எண்ணெய் விளக்குயேற்றி இரட்டை பிள்ளையாரை வழிபட வேண்டும்.குறிப்பிட்ட நாளுக்குள் நல்ல சேதி வரும்.
செவ்வாய் கிழமை நாக தோஷம் உள்ளவர்கள் வணங்க தோஷம் விலகும்.
சனிக்கிழமை பழம் வைத்து இரட்டை பிள்ளையாரை வழிபட்டு வந்தால் சனி தாக்கம் குறையும்.
பிள்ளையாரே தன்னை வணங்குதல்
ஒரு சமயம், சிவபெருமானை பிரிந்து பார்வதிதேவி தனியாக தவம் செய்ய நேரிட்டது.அப்போது விநாயகர் தன்னை போலவே ஒரு வடிவத்தை தன்னருகே உருவாக்கி,அந்த திருவுருவத்தையே --அதாவது,தன்னையே சங்கல்பம் செய்து கொண்டு,பிரிந்த தன் பெற்றோர்கள் விரைவில் ஒன்று சேரப் பிராத்தித்தார் என்று புராணங்கள் சொல்கின்றன .இரட்டை பிள்ளையார் உருவான கதை
விக்கினன் என்ற அசுரன் இருந்தான்.பொதுவாக,அசுரர்கள் அரக்க குணம் உடையவர்கள்.அவர்கள்தான் எல்லாவற்றிலும் முதலில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள்.ஆதலால் அவர்கள் தேவர்களையும்,முனிவர்களையும் தொல்லை கொடுத்து வருவதே வேலையாக இருப்பர்.
அசுரர் குலத்தில் பிறந்த விக்கினன் மட்டும் மாறுபட்டவனா ?அவனும் தேவர்களை துன்புறுத்தி வந்தான்.அவன் தொல்லையை பொறுக்க முடியாத முனிவர்களும்,தேவர்களும் விநாய பெருமானிடம் சென்று அவனிடமிருந்து தங்களை காக்கவேண்டி சரணடைந்தனர்.
விநாயகரும் அவனை அழிக்க புறப்பட்டார்.முதலில் விநாயகர் சிறு பிள்ளைதானே !அவரால் என்ன செய்து விடமுடியும்?என ஏளனமாக இருந்த விக்கினன் பிறகு விநாயகரிடம் மன வலிமையிலும் ,உடல் வலிமையிலும் தோற்று போய்,கடைசியில் தன்னை மன்னித்து அருள்புரியுமாறு சரணடைந்தான் .
விநாயகர் அவனை மன்னித்தார்.அவன் விநாயகரிடம்,'நீங்கள் என் பெயரை முதலில் சூட்டி கொள்ள வேண்டும்.அதுதான் என் ஆசை' என்று வேண்டுகோள் விடுத்தான்.விக்கினன் கேட்டுக் கொண்டபடி ,அன்று முதல் விநாயகர் 'விக்னேஸ்வரன்' என்று அழைக்கப்பட்டார்.
விக்கினன் தடைகளை செய்பவன்.ஆனால் விநாயகர் வரவிருக்கும் தடைகளை நீக்குபவர்.அதன்படி விநாயகரை வணங்காமல் எந்த செயலை யார் செய்தாலும் ,என்ன யாகம் ,பூஜை நடத்தினாலும் விக்கினன் தடையாக இருப்பான்.
விநாயகரே விக்கினனிடம் ,என்னை முதலில் வணங்குபவருக்கு நீ எந்த தடையும் செய்யக்கூடாது என்று கூறியுள்ளார்.
முருகன் சூரபத்மனை அழித்து,அவன் வேண்டுகோளின் பொருட்டு ,உடலின் ஒரு பகுதியை சேவலாகவும்,மற்றொரு பகுதியை மயிலாகவும் தன்னிடம் வைத்து கொண்டார்.
விநாயகரும் விக்கினனை தன் கட்டுப்பாட்டில் வைத்து கொண்டார்.பக்தர்கள் விநாயகரை வழிபடும்போது எல்லாம் விக்கினனையும் வழிபட வேண்டும் என்று விநாயகர் கூறுகிறார்.விநாயகரும்,விக்கினனுமே இரட்டை பிள்ளையாராக உருவானார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக