மகா பெரியவாளின் சமையல் விளக்கம்
குழம்புக்கும் ,ரசத்திற்கும் என்ன வித்தியாசம்?
இரண்டிலுமே பருப்பு ,புளி ,உப்பு,சாம்பார் பொடி,பெருங்காயம் தானே சேர்க்கிறார்கள்.
என்ற விவாதம் ஒரு சமயம் பெரியவாளின் முன் வைக்கப்பட்டது.அதற்கு நம் குருநாதராகிய மகா பெரியவா அருமையான பதிலை கொடுத்தது மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
அங்கிருந்த பக்தர்கள் "சாம்பாரை முதலிலும்,ரசத்தை பிறகும் சாப்பிடுவதாக தங்கள் கருத்தை தெரிவித்தனர்.
இதைக் கேட்டு மகான் பெரிதாக சிரித்தார்.
இது இல்லையென்றால் மனம் தெளிவாக இருக்கும் ரசம் போல.இவைகளை மறக்கக்கூடாது என்பதற்காகதான் தினமும் குழம்பு,ரசம் வைக்கிறோம்.
விருந்தில் முதலில் குழம்பு,ரசம்,பாயசம்,மோர் என வரிசைப்படி சாப்பிடுகிறோம் இல்லையா?இந்த உணவு கலாச்சாரம் வேறு எங்கேயும் இல்லை.மனிதன் பிறக்கும்போதே அவன் மனதில் "தான்" என்ற அகங்காரம் இடம் பிடித்து வருகிறது.அவன் பலவிதமான குழப்பத்தில் ஆள்வதால் அவன் மனம் குழம்புகிறது.
இதைத்தான் முதலில் நாம் சாப்பிடும் குழம்பு எடுத்து காட்டுகிறது.அது தெளிந்து விட்டால் ரசம் போல் ஆகி விடுகிறது.
இவற்றை தொடர்வது இனிமை,ஆனந்தம்.அவைதான் பாயசம்,மோர் ,பட்சணம்.
இதைப்போல் மனிதனின் வாழ்க்கைக்கும்,சாப்பிடும் சாப்பாட்டிற்கும் பலவித ஒற்றுமை உண்டு.மோர் தனித்தன்மை வாய்ந்தது.பிரம்மானந்தத்துடன் நம் மனம் லயிக்க இது உதவுகிறது.
பாலிலிருந்து தயிர்,வெண்ணெய்,நெய்,மோர் என்று தொடராக பொருட்கள் நமக்கு கிடைக்கின்றன.மோர்தான் கடைசி நிலை.அதிலிருந்து எதையும் பிரித்து எடுக்க முடியாது.அதனால்தான் பரமாத்மாவைக் கலந்தபின்,மேலே தொட ஏதும் இல்லை என்பதை மோர் தெளிவாக்குகிறது.
நாம் தினமும் சாப்பிடும் சாப்பாட்டை இதுபோல் யாரும் சொன்னதே இல்லை.

ஜெய ஜெய சங்கர காஞ்சி சங்கரா
நடமாடும் தெய்வம் பாதம் சரணம்
நடமாடும் தெய்வம் பாதம் சரணம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக