my youtube channel Tamilnattu samayal video .subscribe ,support and share your friends.give comments.
மங்கலவாழ்வு தரும் வரலக்ஷ்மி விரதம்
ஆண்டுதோறும் ஆடி மாத வளர்பிறை வெள்ளியன்று வரலட்சுமி விரதம் கொண்டாடப்படுகிறது.வரலக்ஷ்மி என்றாலே வரங்களை தருபவள் .நாம் கேட்கும் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து, வரத்தை கொடுப்பவள் வரலக்ஷ்மி.
பாற்கடலில் உதிர்த்த நன்னாளை,வரலக்ஷ்மி விரத நாளாக அனுஷ்டிக்கிறோம்.லட்சுமி பொறுமைமிக்கவள்.பெண்களுக்கு உரித்தான கருணை உள்ளம்,அழகு,வெட்கம்,புத்தி,அன்பு போன்ற நற்குணங்கள் கொண்டவள்.
செல்வங்களை வாரி வழங்குபவள் அன்னை லக்ஷ்மி.மஞ்சள் பட்டு உடுத்தி மகாவிஷ்ணு திருமாலில் குடியிருப்பவள் லட்சுமி தேவி.எங்கு லட்சுமி இருக்கிறாளோ அந்த இடம் செல்வ செழிப்பு பெறும்.அதர்வண வேதத்தில் அனைவருக்கும் நன்மை தருபவள் லட்சுமி.
பாற்கடலில் உதிர்த்த நன்னாளை,வரலக்ஷ்மி விரத நாளாக அனுஷ்டிக்கிறோம்.லட்சுமி பொறுமைமிக்கவள்.பெண்களுக்கு உரித்தான கருணை உள்ளம்,அழகு,வெட்கம்,புத்தி,அன்பு போன்ற நற்குணங்கள் கொண்டவள்.
செல்வங்களை வாரி வழங்குபவள் அன்னை லக்ஷ்மி.மஞ்சள் பட்டு உடுத்தி மகாவிஷ்ணு திருமாலில் குடியிருப்பவள் லட்சுமி தேவி.எங்கு லட்சுமி இருக்கிறாளோ அந்த இடம் செல்வ செழிப்பு பெறும்.அதர்வண வேதத்தில் அனைவருக்கும் நன்மை தருபவள் லட்சுமி.
எட்டு லட்சுமிகள்
மகாலக்ஷ்மியை தனலட்சுமி,தான்யலக்ஷ்மி,தைரியலட்சுமி,ஜெயலட்சுமி,வீரலட்சுமி,சந்தானலட்சுமி,கஜலட்சுமி,வித்யா லட்சுமி என அஷ்டலட்சுமியாக வழிபடுவர்.இவ்வாறு அஷ்டலக்ஷ்மிகளுடன் வரலக்ஷ்மியையும் சேர்த்து 9லட்சுமிகள் என்கிறது சாஸ்திரங்கள்.எனவே,9நூல் இழைகளால் ஆன,ஒன்பது முடிச்சுகள் போடப்பட்ட நோம்பு கயிற்றை [சரடை]பூஜையில் வைத்து வழிபடவேண்டும்.
வரலட்சுமி விரதத்தின் மேன்மையை சொல்லும் புராணக் கதைகள்
பார்வதியின் சாபத்திற்கு ஆளான சித்ரநேமி என்ற தேவதை வரலக்ஷ்மி விரதம் அனுஷ்ட்டித்து,சாப விமோசனம் பெற்றார்.
சௌராஷ்ட்டிர நாட்டின் ராணியாக இருந்த கரசந்திரிகா செல்வவளத்தின் மமதையால்,ஒருமுறை மகாலட்சுமியை அவமதித்தாள்.கர்வம் கொண்டு லக்ஷ்மியை அவமதித்ததால்,செல்வம் அனைத்தும் இழந்து வறுமையால் வாடினாள்.
ராணி கரசந்திராவின் மகள் சியாம பாலா ,தெய்வாதீனமாக ஒருமுறை வரலட்சுமி விரதத்தைப்பற்றி அறிந்தார்.அதுமுறை, அந்த விரதத்தை கடைபிடிக்க தொடங்கினாள்.
சியாம பாலாவின் விரதத்தால் மகிழ்ந்த அன்னை மகாலட்சுமி,அவளுக்கு நலன்கள் அனைத்தும் அருளினாள் தன் மகளின் நிலையைப் பார்த்து,அவள் கடைபிடித்த வரலட்சுமி விரதத்தை தானும் கடைபிடித்தாள் . இழந்த செல்வங்களை மீண்டும் பெற்றாள் கரசந்திரா.
மகத நாட்டில்,குணதினபுரம் என்ற ஒரு நகரம் இருந்தது.அங்கு சாருமதி என்ற பெண் தன் கணவனுடன் வாழ்ந்து வந்தாள்.அவள் தன் குடும்பத்தின்மீது அக்கறை கொண்டாள்.சிறந்த பக்தி உடைய சாருமதி கனவில் வந்த லட்சுமி தேவி ,தன்னை வரலட்சுமியாக வழிபட்டால் அவளுக்கு அனைத்து செல்வங்களையும் தருவதாக கூறினாள்.அதன்படி,வரலட்சுமி விரதம் இருந்து அனைத்து செல்வங்களையும் பெற்று சிறப்பாக வாழ்ந்தாள்.
சாருமதியின் முன்னேற்றத்தை பார்த்த பெண்கள் ,அவளிடம் வரலட்சுமி விரதத்தைப் பற்றி கேட்டு,தெரிந்து விரதத்தை கடைபிடித்து,பெரும் பயனை அடைந்தனர்.
இவ்விரதம் மேற்கொண்டால் நீண்ட ஆயுள்,செளபாக்கியம் கிட்டும்.
திருமணதோஷம் உள்ள கன்னிபெண்கள் விரைவில் திருமணம் நடக்கும்.
வரலக்ஷ்மி விரதத்தன்று,புண்ணிய நதியில் நீராடுவது ஒரு வருடம் தொடர்ந்து வரலக்ஷ்மி விரதம் இருப்பதற்கு பலனைத்தரும்.ஆகவே,கங்கை,யமுனை,கோதாவரி போன்ற புண்ணிய நதிகளில் நீராடுவது வரலக்ஷ்மி விரதம் இருந்த பலனை பெறலாம்.
வரலக்ஷ்மி விரதத்தன்று,புண்ணிய நதியில் நீராடுவது ஒரு வருடம் தொடர்ந்து வரலக்ஷ்மி விரதம் இருப்பதற்கு பலனைத்தரும்.ஆகவே,கங்கை,யமுனை,கோதாவரி போன்ற புண்ணிய நதிகளில் நீராடுவது வரலக்ஷ்மி விரதம் இருந்த பலனை பெறலாம்.
பூஜைக்கு உதவும் எளிய மந்திரம்
1.சகல சித்தியளிக்கும் ஆதிலட்சுமியே போற்றி!
2.பிள்ளைப்பேறு அளிக்கும் சந்தான லட்சுமியே போற்றி!
3.ராஜ மரியாதை தரும் கஜலக்ஷ்மியே போற்றி!
4.செல்வச்செழிப்பை தரும் தனலட்சுமியே போற்றி!
5.தான்ய விருத்தியளிக்கும் தான்ய லட்சுமியே போற்றி!
6.எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றியைத் தரும் விஜயலட்சுமியை போற்றி!
7.செளபாக்கியம் தரும் மகாலட்சுமியே போற்றி!
8.மனதிலும்,உடலிலும் சோர்வை அகற்றி தைரியத்தையும்,தெம்பையையும்,வீரத்தையும் அருளும் வீரலக்ஷ்மியே போற்றி!
9.அனைத்து நன்மைகளையும் வரமாகத் தரும் வரலக்ஷ்மியே போற்றி!போற்றி!
வரலட்சுமி விரதம் இருந்தால் அஷ்டலட்சுமியும் மகிழ்வதாக ஐதீகம்.வரலக்ஷ்மியை பூஜிக்கும்போது கனகதாரா ஸ்தோத்திரம் , அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம்,லக்ஷ்மி துதி படித்தால், ஸ்ரீ மகாலட்சுமி மகிழ்ந்து வேண்டும் வரத்தை அள்ளித் தருவாள்.
என்றென்றும்,உங்கள் இல்லம் சிறக்க என்னுடைய பிராத்தனைகள் பல.
நன்றி வணக்கம்
நன்றி வணக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக