வெற்றிலை
வெற்றிலையை நாம் பூஜைக்குரிய பொருளாகவும்,மங்கள பொருளாகவும் பயன்படுத்தி வருகிறோம். வெற்றிலை ஜீரண தன்மை கொண்டதால் அது மருத்துவ குணம் கொண்டுள்ளது எனலாம்.
கடவுளுக்கு அளிக்கும் நெய்வேத்தியத்துடன் வெற்றிலையும் சேர்த்து அளிக்கப்பட வேண்டும்.வெற்றிலை பாக்கு இல்லாமல் செய்யப்படும் பூஜை நிறைவு அடைவது இல்லை.வெற்றிலையில் முப்பெரும் தேவிகளான துர்க்கா,லக்ஷ்மி ,சரஸ்வதி இருப்பதாக நம் சாஸ்திரத்தில் சொல்லப்படுகிறது.
ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை
ஒவ்வொரு ராசிக்காரர்களும் வெற்றிலையுடன் பழங்கள் வைத்து வழிபட்டு வந்தால் அவர்கள் துன்பங்கள் அகன்று இன்பங்கள் கிடைக்கும் என்பது திண்ணம்.
வெற்றிலை பரிகாரம்
மேஷம்------ வெற்றிலையில் மாம்பழம் வைத்து செவ்வாய் கிழமை முருகனை வழிபட்டு சாப்பிட்டால் துன்பம் அகலும்.
கடகம் ------வெற்றிலையில் மாதுளம்பழம் வைத்து வெள்ளிக்கிழமை காளி தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கஷ்டம் விலகும்.
சிம்மம் -----வெற்றிலையில் வாழைப்பழம் வைத்து வியாழக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் துன்பம் விலகும்.
கன்னி -----வெற்றிலையில் மிளகு வைத்து வியாழக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் துன்பம் தீரும்.
துலாம் ----வெற்றிலையில் கிராம்பு வைத்து வெள்ளிக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் துன்பம் தீரும்.
விருச்சிகம்-----வெற்றிலையில் பேரிச்சம் பழம் வைத்து செவ்வாய்க்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் துயரம் தீரும்.
தனுசு ----வெற்றிலையில் கற்கண்டு வைத்து வியாழக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் துயரம் தீரும்.
மகரம் ----வெற்றிலையில் அச்சு வெல்லம் வைத்து சனிக்கிழமை காளி தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கவலை தீரும்.
கும்பம் ----வெற்றிலையில் நெய் வைத்து சனிக்கிழமை காளி தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கவலை தீரும்.
என் பதிவுகளைப் படித்து உங்கள் கருத்துக்களை எழுதவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக