ஸ்ரீ சுதர்ஸன சக்கரத்தாழ்வாரின் மகிமை
திருமாலின் வலக்கையில் இருக்கும் சக்கரமே ஸ்ரீ சுதர்ஸன சக்கரம் எனப்படும்.ஸ்ரீ சுதர்ஸனரை சக்கரத்தாழ்வார் என்றும் அழைப்பார்கள்.இது பக்தர்களைக் காக்கவும்,துஷ்டர்களை அழிக்கவும் செய்கிறது.
ஸ்ரீ அனந்தன் என்ற நாகம்,கருடன்,ஸ்ரீ சுதர்ஸனம் போன்றவைகள் பகவானை விட்டு, ஒரு நொடி கூட பிரியாது ,அவரைத் தொழும் நித்ய சூரிகள்.
அனந்தன் யார்?
ஸ்ரீ வைகுண்டத்தில் ஸ்ரீ மகாவிஷ்ணு இருக்கையாகவும்,பாற் கடலில் பாம்பு படுக்கையாகவும்,ஆதிசேஷனாகவும் ,நடக்கையில் பாதுகையாகவும் இருப்பவர் அனந்தன்.
கருடன் யார்?
பகவான் மனதால் நினைத்தவுடன்,நினைத்த இடத்திற்கு செல்லும் வாகனமாகவும்,அவரது தாஸனாகவும் இருப்பவர் கருடன்.
ஸ்ரீ சுதர்ஸனாழ்வார்,ஸ்ரீ கருடாழ்வார்,ஸ்ரீ அனந்தாழ்வார் என 'ஆழ்வார் 'என்ற அடைமொழி இவர்கள் மூவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.ஸ்ரீ பகவானை ஆட்கொண்டவர்கள் என்பதால் ஏற்பட்ட சிறப்பேயாகும்.
ஸ்ரீ மகாவிஷ்ணுவின் பஞ்சாயுதங்களிலும் ஸ்ரீ சுதர்ஸனரே முதன்மையானவர்.இந்த சக்ராயுதத்தின் பெருமை வேதங்களால் (சுக்ல யஜுர் வேதம்)புலப்படுகிறது.இந்த்ராதி தேவர்களாலும்,பூஜிக்கப்பட்டு பகைவர்களை அழித்தவர்.
பெருமாளின் அம்சமாக ஸ்ரீ சக்கரத்தாழ்வார் விளங்குகிறார்.
'புனரபி ஜனனம்--புனரபி மரணம் '[மீண்டும்,மீண்டும் பிறந்து மரித்தல்]என்ற உலக நியதியான இயற்கை ,ஸ்ரீ சுதர்ஸனரை ஆதாரமாக கொண்டே நிகழ்கிறது.
இவர் ராமாவதாரத்தில் பரதனாக அவதரித்து ஸ்ரீ ராமருக்கு சேவை செய்ததால்தான் "பரதாழ்வான்"எனப்பட்டார்.
ஜீவாலா கேசமும்,திரிநேத்ரமும்,16 கரங்களும் பதினாறு வித ஆயுதங்களும் உடைய இவரை வழிபடுவதால் முப்பிறவியும்,இந்த பிறவியிலும் உண்டான பாவங்கள்,மற்றவர்களால் ஏற்படும் தீங்குகள்,தீவினைகள்,தோஷங்களால் கெடுதிகள் யாவும் நீங்கும்.
மதுரை அழகர் கோவில்,திருமோகூர்,ஸ்ரீரங்கம்,ஸ்ரீவில்லிபுத்தூர்,காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில்,கும்பகோணம் ஸ்ரீ சக்ரபாணி கோவில் போன்ற திருத்தலங்களில் ஸ்ரீசக்கரத்தாழ்வார் விசேஷமானவர்.
முன்புறத்தில்ஸ்ரீ சக்கரத்தாழ்வாரையும் , அதன் பின்புறத்தில் ஸ்ரீ நரசிம்மரையும் வணங்கி சுற்றி பிரதட்சிணம் செய்தால் நான்கு வேதங்களையும்,பஞ்ச பூதங்களையும்,அஷ்ட லக்ஷ்மிகளையும் ,எட்டு திக்கு பாலர்களையும் வணங்கிய பலன் கிடைக்கும்.
ஸ்ரீ சுதர்ஸன காயத்ரி மந்திரம்
"ஓம் சுதர்சனாய வித்மஹே
மஹா ஜ்வாலாய தீமஹி
தந்நச் சக்ர ப்ரசோதயாத் "
ஸ்ரீ சக்கரத்தாழ்வாரை புதனும்,சனியும் சேவிப்பது விசேஷம்.முடிந்தால் தினமும்,இயன்ற நிவேதனம் வைத்து பூஜிப்பது நல்லது.
இந்த ஸ்லோகத்தை சொல்லி வந்தால் கேட்ட வரம் பெறலாம்.நிச்சயம் நினைத்தது நிறைவேறும்.
தன்னை நாடிவந்து வணங்குவோருக்கு சகல ஐஸ்வரியங்களையும் தந்தருளுகிறார்.
ஸ்ரீ சக்கரத்தாழ்வார் சந்நிதியில் நெய் விளக்கேற்றி,"ஓம் நமோ பகவதே மகா சுதர்ஸனாய நம "என்று கூறி வழிபடுதல் கூடுதல் பலனைத் தரும் என்பது திண்ணம்.
திருமணமாகாத கன்னிப்பெண்களுக்கு திருமணம் நடக்கும்.
16 வகையான செல்வங்களும் பெற்று,கிரகதோஷம் நீங்கி வாழலாம்.
வியாழக்கிழமை ஸ்ரீ சக்கரத்தாழ்வாருக்கு சிவப்பு மலர்களால் மாலை சூட்டி வழிபட்டால், நினைத்த காரியங்களில் வெற்றி கிட்டும்.
திருமால் பக்தர்களுக்கு சங்கடங்கள்,துன்பங்கள் வந்தால் அவற்றை தனக்கு வந்த இடையூறாகக் கருதி ,தன் பக்தர்களை காப்பாற்ற முதலில் வருபவர் ஸ்ரீ சக்கரத்தாழ்வார்.
ஸ்ரீ சுதர்சனம் என்ற சக்கரத்தாழ்வாரை நாமும் வணங்கி பயன் பெறுவோம்.
உங்கள் கருத்தை தெரிவித்தால் அது எனக்கு மேலும் மேலும் பல ஆன்மீகத்தைப் பற்றி எழுத உற்சாகமாக இருக்கும்.
உங்கள் அன்பு சகோதரி
ஈஸ்வரி
மதுரை அழகர் கோவில்,திருமோகூர்,ஸ்ரீரங்கம்,ஸ்ரீவில்லிபுத்தூர்,காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில்,கும்பகோணம் ஸ்ரீ சக்ரபாணி கோவில் போன்ற திருத்தலங்களில் ஸ்ரீசக்கரத்தாழ்வார் விசேஷமானவர்.
"ஓம் சுதர்சனாய வித்மஹே
மஹா ஜ்வாலாய தீமஹி
தந்நச் சக்ர ப்ரசோதயாத் "
உங்கள் கருத்தை தெரிவித்தால் அது எனக்கு மேலும் மேலும் பல ஆன்மீகத்தைப் பற்றி எழுத உற்சாகமாக இருக்கும்.
ஈஸ்வரி
சக்கரத்தாழ்வாரை பற்றி அறிந்து கொண்டேன்.. நன்றிங்க
பதிலளிநீக்குநன்றி.
பதிலளிநீக்கு