தோஷங்கள் விலக நாக சதுர்த்தி
ஆடி மாதம் வளர்பிறை சதுர்த்தியில் பெண்கள் விரதமிருந்து நாக தெய்வத்தை வழிபடுவது நாக சதுர்த்தி விரதமாகும்.
சிவபெருமானின் கழுத்தை அலங்கரிக்கும் ஆபரணமாகவும்,மகா கணபதியின் திருவயிற்றை சுற்றியும்,மஹா விஷ்ணுவிற்கு படுக்கையாகவும் பாம்பே இருக்கிறது.
கருடனை வாகனமாக கொண்ட விஷ்ணுவுக்கு நின்றால் குடையாகவும், அமர்ந்தால் சிம்மாசனமாகவும்,படுத்தால் படுக்கையாகவும் இருப்பது நாகம்தான்.
மாரியம்மனிடம் பாம்பு வந்து அருள்புரிவதாகவும்,புற்றை உறைவிடமாக கொண்டு பக்தர்களுக்கு அருள்புரிவதாக நம்பப்படுகிறது.சக்தியின் வடிவமாக நாகங்கள் போற்றப்படுகின்றன.தெரிந்தோ,தெரியாமலோ இப்பிறவியிலோ அல்லது முப்பிறவியிலோ நாகத்திற்கு தீங்கு விளைவித்திருந்தால் அது நாகதோஷமாக நம் பரம்பரையையே ஆட்டி வைக்கும். நாக தோஷம் உள்ளவர்களுக்கு குழந்தை இல்லாமை,குடும்ப ஒற்றுமையின்மை,ஊனமான குழந்தை,அடிக்கடி நோயின் தாக்கம்,குடும்பத்தில் பிரிவு போன்ற பலவும் ஏற்படுகிறது.
நாக பாம்பு கடித்து இறந்துபோன சகோதரர்களுக்காக சகோதரியானவள்,நாகராஜனுக்குப் பூஜை செய்து சகோதரர்களை உயிர்பெற்று எழச் செய்தாள் என்று புராணங்களில் கூறப்படுகிறது.
நாகதோஷம் நீங்க செய்ய வேண்டியவை
செய்வாய்,வெள்ளி ,ஞாயிற்றுக் கிழமைகளில் பாம்பு புற்றுக்கு பால் ஊற்றுவது,நாக பூஜை செய்வது,நாகம் பிரதிஷ்டை செய்யப்பட்ட இடத்தில் நாகசிலைகளுக்கு அபிஷேக ஆராதனை செய்வது நாக தோஷத்தை குறைக்கும்.
அரசமரம் அல்லது வேப்பமரம் மரத்திற்கு அடியில் வைத்து வணங்கப்படும் நாகங்களுக்கு எண்ணெய் தடவி பால் அபிஷேகம் செய்து மஞ்சள் பூசி,குங்குமம் ,சந்தனம் இட்டு வெற்றிலை,பாக்கு ,சர்க்கரை பொங்கல் போன்றவை நைவேதியமாக வைத்து கற்பூர ஆரத்தி காட்டி வழிபடுதல் வேண்டும்.
ராகு,கேது நாகதோஷம்
நாகத்தின் வடிவமான ராகு,கேது கிரகங்களுக்கு செவ்வாய்,சனி கிழமைகளில் பச்சரிசி மாவால் கோலம் போட்டு விளக்கேற்றி ,ராகு கேது உரிய நாமாவளிகளை சொல்லி மலரால் அர்ச்சித்து வழிபட நாகதோஷம் விலகும்.விருப்பம் ஈடேறும்.
திருமணமாகாதவர்கள் ஞாயிற்றுக் கிழமை ராகு காலத்தில் துர்க்கைக்கு தீபம் ஏற்றி ,11வாரங்கள் தொடர்ந்து வழிபாடு செய்தால் 12வது வாரம் குங்குமத்தால் அர்ச்சனை செய்தால் தோஷங்கள் நீங்கி திருமணம் நடக்கும்.
ஆடி வெள்ளிக்கிழமைகளில் நாகப்புற்றில் பால் ஊற்றுவது நலம் பயக்கும்.
ராகு,கேது தலங்களான காளஹஸ்தி ,திருநாகேஸ்வரம் போன்றவைகளுக்கு சென்று வழிபடுவது
தோஷங்கள் விலகி பெருவாழ்வு வாழ வழிவகுக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக