உருத்திராட்சம்
சிவபெருமானின் கண்களில் இருந்து தோன்றியது உருத்திராட்சம் ஆகும்.இதை நாம் அணிந்து கொண்டு சிவபெருமானை முழுமனதோடு வழிபட்டால் நம்மை கண்போல் காப்பார்.
எவ்வித மந்திரங்களை உச்சரிக்காதவனும்,எவ்வித யாகங்களை செய்யாதவனும் கூட உருத்திராட்ச மணியை வெறுமனே தொடுவதன்மூலம் தான் பாவங்கள் அனைத்திலிருந்து விடுபட்டு மறுபிறவியில் உருத்ரனாகவேஅவதரிப்பர்.
கையில்வைத்திருந்தாலே சாஸ்திரங்களையும்,18புராணங்களையும்,பன்னிரு திருமுறைகளையும் கற்றறிந்தவனைவிட,சிறப்பு பெறுவான்.
உருத்ராட்ச மாலை அணிந்த ஒருவனுக்கு உணவு அளித்தால்,உணவு அளிப்பவனுடைய 21 தலைமுறையினர் பாவங்களிலிருந்து விடுபட்டு உருத்ரலோகத்தை அடைவார்கள்.
குடிப்பவனும்,மாமிசம் உண்பவனுடைய பாவிகளின் தலையில் உருத்திராட்சம் படுமானால் அவனது பாவங்கள் அனைத்தும் விலகும்.
அனைத்து கல்வி கேள்விகளிலும் அவன் வசமாகி பல புண்ணிய தீர்த்தத்தில் நீராடிய பலனைவிட அதிக பலனை பெறுகிறான்.
ஒருவன் மரணம் அடையும் தருவாயில் உருத்திராட்சத்தை தரித்து கொண்டிருப்பானாயில்,அவன் இறந்தபின் உருத்ர லோகத்தை அடைகிறான்.
உருத்திராட்சத்தை எங்கு அணிந்தால் என்ன பயன்?
உருத்ராட்சத்தை தலையில் தரித்தால் கோடி புண்ணியம் பெறுவான்.
காதுகளில் அணிபவன் பத்துகோடி புண்ணியத்தை பெறுகிறான்.
கழுத்தில் அணிபவன் நூறுகோடி புண்ணியத்தை அடைகிறான்.
கைகளில் அணிபவன் லட்சம் கோடி புண்ணியம் பெறுகிறான்.
பூணூலில் அணிபவன் ஆயிரம் கோடி புண்ணியம் பெறுகிறான்.
இடுப்பில் அணிபவன் மோட்சத்தை அடைகிறான்.
உருத்திராட்சத்தை அணிந்தவாறு வேத நியமனங்களை ஒருவன் கடைபிடிப்பானாகில், அவன் பெரும் பலன்களை அளவிட முடியாது.அணியாவிட்டாலும் அதை பூஜிப்பவர்களும் சிவலோகம் சென்றடைவர்.உருத்ராட்சம் அணிந்தவன் சிவனை போல முப்பத்துமுக்கோடி தேவர்களாலும் வணங்குகிறான்.
மனிதன் மட்டுமல்ல.பல்வேறு யுகங்கள் நாயும்,கழுதையும் ,கோழியும் உருத்ராட்சத்தோடு தொடர்பு பெற்றதால் அவை சிவலோகம் சென்றடைந்தன.மறுஜென்மத்தில் சிறந்த பக்தனாக பிறந்தன.
நாமும் உருத்திராட்சம் அணிந்து,திருநீறு தரித்து,ஐந்தெழுத்து மந்திரமான "ஓம் சிவாய நம" என சொல்லி தியானம் செய்து,சிவபெருமான் திருவடி பற்றுவோம்.
தென்னாடுடைய சிவனே போற்றி
திருச்சிற்றம்பலம்
மனிதன் மட்டுமல்ல.பல்வேறு யுகங்கள் நாயும்,கழுதையும் ,கோழியும் உருத்ராட்சத்தோடு தொடர்பு பெற்றதால் அவை சிவலோகம் சென்றடைந்தன.மறுஜென்மத்தில் சிறந்த பக்தனாக பிறந்தன.
நாமும் உருத்திராட்சம் அணிந்து,திருநீறு தரித்து,ஐந்தெழுத்து மந்திரமான "ஓம் சிவாய நம" என சொல்லி தியானம் செய்து,சிவபெருமான் திருவடி பற்றுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக