ஆனித் திருமஞ்சனம்
ஆனி மாதம் பெளர்ணமி தினத்தன்று உத்திர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும்பொழுது,ஆனித் திருமஞ்சனம் கொண்டாடப்படுகிறது.
அபிஷேக பிரியரான சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, ஆடல் நாயகனை அலங்காரத்துடன் அவருடைய நடனத்தை காணும் திருநாள்.
சிவலிங்கத்திற்கு அன்றாடம் அபிஷேகம் உண்டு.ஆனால் இந்த திருமஞ்சனம் விசேஷமானது.
சிவபெருமானின் நடனம் காண தேவர்களும்,முனிவர்களும் தவம் இருந்தார்கள்.விஷ்ணு பகவானும்,சிவபெருமானின் நடனத்தை காண விரும்பினார்.
"சிவ-சக்தி ஒன்றே" என்று பிருங்கிமுனிவருக்கு சிவபெருமான் சொன்னார்.அதை கேளாமல் இருந்த பிருங்கி முனிவர்,பராசக்தியின் கோபத்திற்கு ஆளாகி தன் சக்தியை இழந்தார்.
சிவலிங்கத்தை தரிசித்தால் அம்பிகையையும் தரிசிக்க வேண்டும்.ஆனால் நடராஜரை தரிசித்தால் அம்பிகையையும் தரிசித்தது போன்றது என்கிறது சாஸ்திரம்.காரணம்,நடராஜரின் இடதுபாகம் சக்திதேவியின் பாகம்.அதனால் நடராஜரை தரிசிக்கும் போது,அவரது இடதுகாலையும் தரிசித்து வணங்கினால் சிவ-சக்தியின் அருளாசி முழுமையாக கிடைக்கும்.
மார்க்கண்டேயரை காப்பாற்ற எமனை அந்த இடது கால்தான் உதைத்தது என்கிறது புராணம்.
நடராஜரின் வலதுபாகம் பக்தர்களின் வாழ்வில் வளங்களை சேர்க்கும்.இடதுபாகம் சக்திதேவியின் பாகமானதால் பக்தர்கள் வாழ்வில் மகிழ்ச்சியை பொங்க செய்யும்.
சிவபெருமானின் நடனத்தை காண கண் கோடி வேண்டும்.அத்தனை சிறப்புமிக்க நடனம் அது.ஆனி திருமஞ்சனத்தில் சிவபெருமானின் அபிஷேகத்தையும்,நடனத்தையும் தரிசித்து வழிபடுவது சிறந்தது.ஆனி திருமஞ்சனத்தில் நடராஜரைக் கண்டு தரிசித்தல் பல நன்மைகளைக் கொடுக்கும்.
சிவ-சக்தியின் பேரருள் கிடைத்து,கஷடங்கள் அனைத்தும் நீங்கி,ஏற்றங்களையும்,நல்ல மாற்றங்களையும் பெற்று வளமோடும்,நலமோடும் வாழ்வாங்கு வாழ உமா மகேஸ்வரன் அனைவருக்கும் அருள் புரியட்டும்.
"ஓம் நம சிவாய "
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
திருச்சிற்றம்பலம்

நன்றி வணக்கம்
ஈஸ்வரி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக