நாரைக்கு முக்தி அளிக்கும் லீலை
வணக்கம் நண்பர்களே
போனபதிவில்,64லீலைகள் என்ன? என்பதைப் பற்றி எழுதியிருந்தேன்.சிவபெருமானின் லீலைகளை தெரிந்திருப்பது இந்துக்களின் கடமையாகும்.
திருவிளையாடல் 64 நிகழ்ச்சிகளும் சிவனின் லீலைகள் ஆகும்.அதில் ஒன்று மீனாட்சி அம்மன் கோவிலில் நாரைக்கு முக்தி கொடுத்த படலம் ஆகும்.
மதுரையில் ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் ஆவணிமூல திருவிழாவாக 10நாட்கள் கொண்டாடப்படுகிறது.
நாரையின் கதை
முன்னொரு காலத்தில் ,பாண்டிய நாட்டின் தென்பகுதியில் இருந்த பெரிய தாடகம் ஒன்றில் வாழ்ந்த மீன்களை உண்டு நாரை ஒன்று வசித்து வந்தது.ஒருசமயம், மழை பெய்யாமல் போனதால் குளம் வற்றி போனது.நாரைக்கு உணவு கிடைக்கவில்லை.எனவே,அது வனத்திற்கு சென்று,அங்கிருந்த நீர் நிலைகளில் சிக்கிய மீன்களை தின்று வாழ்ந்தது.
அங்கு "அச்சோ " என்ற குளம் இருந்தது..இதன்கரையில் பல முனிவர்கள் தவம் செய்து வந்தனர்.இந்த புண்ணியசீலர்கள் பயன்படுத்தும் குளத்தில் நிறைய மீன்கள் இருந்தன .இருந்தாலும்,அந்த முனிவர்கள் இருக்கும் இடத்தில் மீன் பிடித்து சாப்பிடுவது ' மகா பாவம் 'என
நாரை நினைத்தது.
அங்குள்ள சத்தியன் என்ற முனிவர் ,மதுரை தலம் பற்றியும்,அங்கு குடி கொண்டிருந்த சுந்தரேஸ்வரர் பற்றியும் தன்சக முனிவருடன் பேசி கொண்டிருந்தார்.இதை கேட்ட நாரை,மதுரை மாநகரை நோக்கி பறந்தது.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள பொற்றாமரைக் குளத்திலுள்ள நீர் தன்மீது படும்படியாக தலையை மூழ்கிவிட்டு பறந்தது.அன்னை மீனாட்சி மற்றும் சுந்தரேஸ்வர் சன்னதி மேலுள்ள இந்திர விமானத்தில் சுற்றி சுற்றி பறந்தது.
15நாட்கள் இவ்வாறே செய்து,16ம் நாள் பொற்றாமரை குளக்கரைக்கு வந்தது.குளத்தில் மீன்கள் துள்ளி விளையாடின.அவற்றை பிடித்து உண்ண எண்ணிய வேளையில்,ஞானம் பிறந்தது. நாரைக்கு மீனைப் பிடித்து தின்பது பாவம் எனத் தோன்றியது.அது பசியை பொறுத்து கொண்டது.
தனது இயற்கையான சுபாவத்தை கூட கருணையின் காரணமாக,தன் மீது கொண்ட நம்பிக்கையாலும் மாற்றி கொண்ட நாரையின் முன்னால் சுந்தரேஸ்வரர் தோன்றி,"என்ன வரம் வேண்டும் நாரையே?"என்றார்.
"ஐயனே!எங்கள் இனத்தவர் மீன்களை பிடித்து உண்ணும் சுபாவமுடையவர். ஆனால் இந்த புண்ணிய குளத்தில் அதை செய்யாமல் இருக்க தாங்களே அருள வேண்டும்.எனவே,இக்குளத்தில் மீன்களே இல்லாமல் செய்ய வேண்டும்.மேலும்,எனக்கு சிவலோகத்தால் தங்கும் பாக்கியம் வேணும்" என்றது.சிவபெருமானும் நாரை கேட்ட வரத்தை தந்து அருளினார்.
நாரை நான்கு புயங்களும்,மூன்று கண்களும் பொருந்திய சிவவடிவம் பெற்று,வானுலகத்தோர் தூவிய மலர்கள் மூழ்கியவாறு விமானத்தில் ஏறி,சிவலோகத்தை அடைந்தது.
பின்னர் நந்தி கணங்களுள் ஒன்றாய் தங்கியிருந்தது.
நாரையின் வேண்டுகோளுக்கு இணங்க, இன்று வரை பொற்றாமரைக் குளத்தில் மீன்களே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி வணக்கம்.உங்கள் தோழி ஈஸ்வரி