அன்புள்ள தோழிகளுக்கும்,நண்பர்களுக்கும் என் இனிய வணக்கங்கள் .
வரவிருக்கும் அட்சய திருதியை கொண்டாடும் பொருட்டு அதைப் பற்றி எழுதினால் மிகவும் சிறப்பாக இருக்கும் என எழுதுகிறேன்
சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரும் 3வது திதி நாளே அட்சயதிருதியை எனப்படுகிறது .இந்நாள் திருமகளான லக்ஷ்மிக்கு உரிய நாளாகும் .
அட்சயம் என்றால் தேயாது ,குறையாது,வளர்தல் என்று பொருள் .இந்நாளில் வாங்கும் எந்த பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிலைத்து இருக்கும் என்பது நம்பிக்கை .எனவே, மக்கள் இந்நாளில் தங்கம் வாங்க விரும்புகிறார்கள் .வசதி இல்லாதவர்கள் அரிசி ,உப்பு,சர்க்கரை வாங்கலாம் .
ஏழை,எளியவர்களுக்கு அன்னதானம் செய்வது,பிறருக்கு செய்யும் எந்த உதவியும் தர்ம தேவதையின் அருளை பெற்று, புண்ணியத்தை தரும்.
நாம் கொடுக்கும் தானம் அளவற்ற புண்ணியத்தை தரும்.ஏழைகளுக்கு உணவு ,உடை ,போர்வை கொடுத்து உதவுவது நல்லது .
எந்த தானம் செய்தால் என்ன பயன் ?
ஏழை மாணவர்கள் கல்விக்கு உதவுவதால் நம் வீட்டு குழந்தைகளின் கல்வி மேம்படும்.
ஆடைகள் தானம் செய்தால் நோய் நீங்கும்.
பழங்கள் தானம் செய்தால் உயர் பதவி கிடைக்கும்.
மோர்,பானகம் அளித்தால் கல்வி நன்கு வளரும்.
தானியங்கள் தானம் செய்தால் அகால மரணம் ஏற்படாது.
தயிர் சாதம் தானம் அளித்தால் பாவ விமோசனங்கள் ஏற்படும்.
முன்னோர்களுக்கு தர்பணம் செய்தால் வறுமை நீங்கும்.
ஸ்ரீ மகாலக்ஷ்மி விஷ்ணு மார்பில் இடம் பிடித்ததும் இந்நாளில்தான்.ஸ்ரீ லக்ஷ்மியானவள் வைகுண்டத்தில் மகாலக்ஷ்மியாகவும்,பாற்கடலில் ஸ்ரீ லக்ஷ்மியாகவும்,இந்திரனிடம் சுவர்க்க லக்ஷ்மியாகவும்,அரசர்களிடம் ராஜ லக்ஷ்மியாகவும்,வீரர்களிடம் தைரியலக்ஷ்மியாகவும் ,குடும்பத்தில் கிரகலக்ஷ்மியாகவும் ,பசுக்களில் கோமாதாவாகவும்,யாகங்களில் தட்சிணையாகயும் ,தாமரையில் கமலையாகவும் ,அவிர்பாகம் அளிக்கும்போது ஸ்வாகா தேவியாகவும் விளங்குகிறாள் .இப்படி சகல யோகங்களுக்கும் ஆதாரமாக விளங்குகிறவள் லக்ஷ்மிதான்.
அன்னபூரணி காசியில் அட்சயபாத்திரம் பெற்று ,சிவபெருமானுக்கு உணவு அளித்ததும் அட்சய திருதியை அன்று தான்.எனவே இந்நாளில் சிவபெருமானின் மந்திரமான ''ஓம் நமச்சிவாய "என சொல்லி சிவனின் அருளை பெற வேண்டும்.

குசேலனின் வறுமை நீங்கி கண்ணப்பிரானின் அருளைப் பெற்றதும் ,ஆதி சங்கரர் ஏழை குடும்ப பெண்மணிக்கு ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் பாடி அந்த குடும்பத்தின் தரித்திரத்தை நீக்கி ,வாழ்க்கை தரத்தை உயர்த்தியதும் அட்சயதிருதியை நாளில்தான்.
குபேரன் இந்நாளில் மகாலக்ஷ்மியை மனம் உருகி வணங்கி செல்வத்தை பெருக்குவதாக ஐதீகம் .ஆகையால் ,குபேர லக்ஷ்மி பூஜை செய்து செல்வத்தை அடையலாம் .
மகாபாரத்தில் பாண்டவர்கள் தங்கள் உடைமைகளையும் ,செல்வங்களையும் இழந்து காட்டில் வாசம் செய்த போது ,உணவு வேண்டும் என தங்களை நாடி வரும் முனிவர்களுக்கு இல்லை என்று சொல்லக் கூடாது என சூரிய பகவானை வணங்கி ,திரோபதி அட்சய பாத்திரத்தை பெற்றாள் .அந்த நாளும் அட்சயதிருதியைதான் .
அவள் செய்த புண்ணியத்தால் பாண்டவர்களுக்கும்,கெளரவர்களுக்கும் நடந்த பாரத போரில் துரோபதி செய்த தர்மம் பாண்டவர்களின் தலையை காத்தது.இழந்த ராஜ்யத்தை திரும்ப பெற்றார்கள்.
மேற்கு வங்காளத்தில் ,அட்சய திருதியை நாள் அன்று விநாயகர் ,லக்ஷ்மியை வணங்கி புது கணக்கு தொடங்குகிறார்கள் .
வீட்டில் பூஜை அறையில் மாக்கோலமிட்டு ,அதன் மேல் மனைபலகை ஒன்றை வைக்க வேண்டும்.அதன்மீது வாழைஇலை இட்டு ,இலையின் நடுவில் கொஞ்சம் பச்சரிசியைப் பரப்பி வைக்க வேண்டும்.அதன்மேல் ஒரு செம்பில் நீர் நிரப்பி அதனுள் காசு,ஏலக்காய் ,துளசி போட்டு மாவிலை ,மஞ்சள் தடவிய தேங்காய் வைத்து கலசமாக்க வேண்டும்.அதையே அம்பாளாக நினைத்து பூஜை செய்ய வேண்டும் .
சில வீடுகளில் கலசம் வைக்கும் பழக்கம் இல்லாமல் இருக்கும்.அவர்கள் குத்துவிளக்கில் லக்ஷ்மியை ஆவாஹனம் செய்து , பூ போட்டு பூஜிக்கலாம்.
லக்ஷ்மி நாராயணன் படத்திற்கு பூ,பொட்டு வைத்து குத்து விளக்கை ஏற்றி ,மஞ்சள் பிள்ளையார் பிடித்து வாழைஇலையில் வைக்க வேண்டும்.
விஷ்ணு லக்ஷ்மி,சிவன் பார்வதி,குபேரன் துதியை சொல்லலாம்.குசேலன் கதையை படிப்பதும்,கேட்பதும் சிறந்தது.கனகதார ஸ்தோத்திரம் பாடுவது நல்லது.வறுமை வராமல் என்றென்றும் நம் இல்லத்தில் செல்வம் நிலைத்து நிற்கும்.
பூஜையில் பாயாசம் அல்லது சர்க்கரை கலந்த பாலை நிவேதியமாக வைக்க வேண்டும்.
கலசத்திற்கு தூப தீபம் காட்டி வழிபடவேண்டும்.பூஜையின் நிறைவாக கலசத்தை வடக்கு பக்கமாக நகர்த்தி பூஜையை முடிக்க வேண்டும்.
கலச தேங்காய் ,பூஜையில் வைத்த அரிசி,மற்ற பொருட்களையும் வீட்டிற்கு உபயோகித்து கொள்ளலாம்.
எனக்கு தேர்ந்த சுலபமான ஸ்லோகத்தை சொல்லி என் பதிவை முடிக்கிறேன்.
மகாலட்சுமி மந்திரம்
ஓம் ஸ்ரீம் ,ஹ்ரீம் ,க்லீம் ,மகாலட்சுமி ,மகாலட்சுமி யேகி ,யேகி ,சர்வ செளபாகியமே தேகி ஸ்வாஹா
இந்த மந்திரத்தை 108 முறை படித்தால் வறுமை நீங்கி ,செல்வம் பெருகும்.தினமும் இதை சொல்லி வழிபட்டால் நம் இல்லம் தேடி லக்ஷ்மி வருவாள் .
அனைவருக்கும் மகாலட்சுமி அருள் கிடைக்க நான் அஷ்டலக்ஷ்மிகளையும் பிராத்திக்கிறேன் .
நன்றி வணக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக