அன்பார்ந்த நண்பர்களுக்கும் ,தோழிகளுக்கும் என் அன்பு வணக்கங்கள்.
இன்று நான் , நம் அனைவருக்கும் தந்தையாக இருக்கும் சிவபெருமானின் பெருமைகளை உணர்த்தும் பிரதோஷத்தின் வழிபாடு ,கதை ,பயன்களை உங்கள் முன் வைக்கிறேன் .
இந்த பதிவானது ,ஆன்மீக தேடலில் மூழ்கி இருக்கும் என் அன்பு தோழிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
பிரதோஷ வழிபாடு
மாதம் தோறும் பிரதோஷம் இரண்டு முறை வரும்.பிரதான தோஷங்களை நீக்குவதே பிரதோஷ த்தின் முக்கிய சிறப்பாகும்.பிரதோஷ காலம் என்பது மதியம் 4.30 மணி முதல் மாலை 6 மணி வரை ஆகும்.
யாருடைய ஜாதகமாக இருந்தாலும் அதில் குறைந்தது 4 தோஷமாவது இருக்கும்.எத்தனை தோஷங்கள் இருந்தாலும் பிரதோஷ தினத்தில் சிவனை வழிபட நல்ல பலன் கிடைக்கும்.
பிரதோஷ தினத்தில் சிவனை மனிதர்கள் மட்டுமில்லாமல் முப்பத்து முக்கோடி தேவர்களும்,பிரம்மா ,விஷ்ணு ஆகியோர்கள் வழிபடுகிறார்கள்.அந்த நேரத்தில் சிவனும் உலக நலத்திற்காக வழிபாட்டில் ஈடுபடுவார் என்பது ஐதீகம் .எனவே ,அனைவரும் வழிபாடும் நேரத்தில் நாமும் வழிபாடு செய்தால் ஈசன் மனம் குளிர்ந்து ,நமக்கு எல்லா நலன்களையும் வழங்குவார் என்று ஜோதிட நூல் கூறுகிறது.
வாகனத்திற்கு முதல் மரியாதை தருவது இந்த பிரதோஷ வழிபாடு.சிவனின் வாகனமான நந்தி பகவான் 4 வேதங்களையும்,64 கலைகளையும் படித்து முடித்தவர்.சிவனின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கக்கூடியவர். .நந்தீஸ்வரர் அனைத்தையும் கற்றிருந்தாலும் மிகவும் அடக்கமானவர் .சிவன் கோவிலில் அவர் அமர்ந்திருக்கும் தன்மையே இதனை உணர்த்தும்.
பிரதோஷம் பிறந்த கதை
தேவர்களும் அசுரர்களும் அடிக்கடி சண்டையிட்டு கொண்டிருந்தனர்.இதில் இரு தரப்புகளில் பலர்
இறந்தனர். ஆனால் அசுரர் தரப்பில் இறந்தவர்கள் மீண்டும் உயிர் பெற்று வந்தனர்.இதற்கு காரணம் அசுரர்களது குருவான சுக்கிராச்சாரியார் இவர்களுக்கு உபதேசம் செய்த மந்திரத்தால் தான் .
இதே போல் மரணமில்லா வாழ்வு பெற விரும்பிய தேவர்கள் ,பிரம்மாவிடம் சென்று முறையிட்டனர்.அவர் அவர்களை திருமாலிடம் அழைத்து சென்றார்.திருமால்,அவர்களிடம் "திருப்பாற்கடலை கடைந்து அதில் கிடைக்கும் அமிர்தத்தை உண்டால் மரணமின்றி என்றும் இளமையாக வாழலாம் என்றார்.மேலும் தேவர்களாகிய நீங்கள் மிகவும் பலவீனமாக இருக்கிறீர்கள்?.எனவே,அசுரர்களுக்கு அமிர்தத்தில் பங்கு தருவதாகக் கூறி அழைத்து ,அவர்களைப் பிறகு ஏமாற்றி விடலாம் என்றும் கூறினார்.
அசுரர்களிடம் தேவர்கள் உதவி கேட்க ,அசுரர்களும் அமிர்தம் கிடைத்தவுடன் ,தாங்களே எடுத்து கொள்ள வேண்டும் என நினைத்து ஒப்புக் கொண்டனர்.
ஒரு தசமி திதியில் மந்திர மலையை மத்தாகவும்,வாசுகி என்ற பாம்பை கயிறாகவும் கொண்டு பாற்கடலை தேவர்களும் ,அசுரர்களும் கடைய தொடங்கினர்.
அசுரர்கள் தங்கள் அதிகப்பலம் கொண்டவர்கள் என்ற ஆணவத்தால் தேவர்கள் சொன்ன வால்பகுதியை பிடிக்காமல் பாம்பின் தலைப்பகுதியைப் பிடித்தனர் .
அசுரர்கள் பாம்பின் தலைப்பகுதியையும் ,தேவர்கள் வால் பகுதியையும் பிடித்து கொள்ள பாற்கடலை கடைய ஆரம்பித்தனர்.தக்க பிடிமானம் இல்லாததால் "மந்திர கிரி"நிலை குலைந்து,பாற்கடலின் ஆடியில் மலை மூழ்க ஆரம்பித்தது.உடனே,திருமால் ஆமை வடிவம் எடுத்து [கூர்ம அவதாரம்]எடுத்து மலையின் கீழே சென்று அதனை தன் முதுகில் தாங்கி கொண்டார்.தசமி திதியில் பாற்கடலை கடைந்தால் ஒரு வேளை மட்டுமே உணவருந்தினர்.மறுநாள் ஏகாதசி விரத தினம் என்பதால் எல்லோரும் சாப்பிடாமல் உபவாசம் இருந்து கடைந்தனர்.
நேரம் ஆக ஆக எல்லோரும் பசியோடும் ,களைப்போடும் இருந்தனர்.வாசு பாம்பானது வலி பொறுக்க முடியாமல் ,பெரும்மூச்சு விட,அந்த மூச்சின் விஷத்தன்மையினை தாங்க முடியாமல் அசுரர்கள் தவித்தனர்.கடல் கொந்தளித்தது.வெண்மையான கடல் கருப்பாக நிறம் மாறியது.தீடீரென்று கடலின் நடுவே புகையை கக்கியபடி பந்து போல் எழுந்தது.பாம்பும் விஷத்தை கக்கியது.கடலில் தோன்றிய ஆலமும் ,வாசுகி பாம்பு கக்கிய காலமும் ஒன்று சேர்ந்து ஆலாலம் விஷமானது.
இதன் வெப்பத்தால் உலகமே பதிக்கப்பட்டது.விஷ்ணு நீல நிறமாக ஆனார்.தேவர்களும் ,அசுரர்களும் என்ன செய்வது? என்று தெரியாமல் கைலாயத்திலுள்ள சிவனை நாடினர்.அவர்களை எந்த பக்கமும் போக விடாமல் விஷம் துரத்தியது. நந்தி தேவரை சரணடைந்து ஈசன் தரிசனம் பெற உதவ வேண்டும் என்று வேண்டினர் .நந்தி தேவரின் உதவியால் சிவனை தரிசித்தனர்.அதனால் தான் பிரதோஷ காலத்தில் சிவன் கோவில்களில் நந்திக்கு பூஜை முதலில் செய்கிறார்கள் .பிறகுதான் சிவபெருமானுக்கு பூஜைகள் நடைபெறும்.
சிவபெருமான் சுந்தரரை அழைத்து ,அந்த விஷத்தை இந்த இடத்திற்கு கொண்டு வரும்படி கட்டளை இட்டார்.நாவல்பழம் போல் விஷத்தைத் திரட்டி தந்தார் சுந்தரர்.சிவபெருமாள் தேவர்களைக் காக்கும் பொருட்டு ,விஷத்தை அமுதம் போல் உண்டருளினார்.
இதைப் பார்த்து கொண்டிருந்த உலகத்துக்கே தாயான ஈஸ்வரி விஷம் உள்ளே செல்லாதவாறு ஈசனின் கழுத்தைப் பிடித்து ,உள்ளிருக்கும் உயிர்கள் அழிந்து விடாமலும்,வெளியில் உமிழ்தால் வெளியில் உள்ள உயிர்கள் அழியாமலும் காத்தாள் .ஈசனின் தொண்டையில் சென்ற விஷமானது அமுதமாக மாறியது.அதனால்தான் ஈஸ்வரனுக்கு நீலக்கண்டன் என்ற பெயர் வந்தது.
பிறகு பாற்கடலை கடைய சிவன் உத்தரவிட்டார்.பாற்கடலை கடந்தனர்.முதலில் லக்ஷ்மி தேவி தோன்றினாள் .சங்கும் தோன்றியது.இரண்டையும் விஷ்ணு தன் இடப்புறத்தில் சேர்த்து கொண்டார்.
காமதேனுவை தேவர்களின் தலைவனான இந்திரன் பெற்று கொண்டான்.அதன்பின் தோன்றிய ஐராவதம்,கற்பக விருட்சம் ,சிந்தாமணி ,சூடாமணி ,உச்சை சரவம் என்ற குதிரை வெளிவந்தன.இவற்றையெல்லாம் தேவர்கள் ஏற்று கொண்டனர்.
ஏகாதசி அன்று இரவு தூங்காமல் பாற்கடலை கடைவதில் அனைவரும் முனைந்தனர்.மறுநாள் காலை ,துவாதசியன்று அதிகாலை அமிர்தம் தோன்றியது.அமிர்தத்தை அசுரர்களுக்கு கொடுக்கக் கூடாது என திருமால் சில தந்திரங்களை செய்து ,தேவர்களுக்கு மட்டும அமிர்தம் கிடைக்குமாறு செய்தார் .
அமிர்தத்தை உண்ட தேவர்கள் புதிய வலிமையும்,பொலிவும் பெற்றனர்.அவர்களை எதிர்க்க முடியாத அசுரர்கள் ஓடி ஒளிந்து கொண்டனர்.அமிர்தம் உண்ட மகிழ்ச்சி ,அசுரர்களை வென்ற களிப்பு தேவர்களுக்கு போதை ஏற்றியது .எனவே,அவர்கள் அமிர்தத்தை பெற காரணமாக இருந்த பரமேஸ்வரனை அன்று முழுவதும் மறந்திருந்தனர்.
மறுநாள் "திரியோதசி "அன்று அவர்கள் செய்த தவறை உணர்ந்து வெட்கம் கொண்டு உடனடியாக தங்கள் செய்கைக்கு வருத்தம் தெரிவித்து ஈஸ்வரனிடம் மன்னிப்பு கேட்டனர்.கருணைக் கடலான ஈசன் அவர்களை மன்னித்தார்.அவர்களுடைய மகிழ்ச்சியை பொருட்டு ,நந்தி தேவர் இரண்டு கொம்புகளுக்கு நடுவே ஆனந்த தாண்டவம் ஆடினார்.
பிரதோஷ தினத்தன்று இதன் காரணமாகத்தான் ,நந்தி தேவன் இரண்டு கொம்புகளுக்கு இடையே இறைவனைப் பார்க்க வேண்டும் என்பது ஐதீகம்.நந்தி தேவனை குனிந்து வணங்குவதையே மக்கள் தவறாக எண்ணி அவர் காதில் போய் தங்கள் கோரிக்கைகளை சொல்கிறார்கள்.இது தவறானது.
பிரதோஷ வேளையில் நந்தி பகவானின் இரண்டு கொம்புகளின் நடு பகுதியை "சிவாய நம "என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை கூறி வணங்கிட நமது வறுமை ,கடன்,நோய் ,மரணபயம் நீங்கி அனைத்து செல்வமும் கிட்டும்.
சிவபெருமானை தரிசிக்க செல்பவர்கள் முதலில் நந்தி பகவானை வணங்கிவிட்டு தான் செல்ல வேண்டும்.நந்தி பகவானின் அனுமதி பெற்று சிவனை அவருடைய கொம்புகளுக்கு இடையே உள்ள வழியாக பார்த்து விட்டுதான் செல்ல வேண்டும்.
பிரதோஷ காலத்தில் எப்படி வலம் வர வேண்டும்?
சாதாரணமாக ,சுவாமியை வலம் வருவதை போல் பிரதோஷ த்தினத்தன்று வலம் வரக்கூடாது.மாறாக,சோம சூட்ச பிரதட்சண முறையில் தான் வலம் வரவேண்டும்.
அதாவது,நந்தி பெருமானிடமிருந்து புறப்பட்டு இடப்பக்கம் சென்று சண்டிகேஸ்வரை வணங்கி,வந்த வழியாக திரும்பி ,நந்தி தேவரை வணங்கி ,வலப்புறமாக கோமுகி வரை சென்று மீண்டும் வந்த வழியாக திரும்பி நந்தி தேவரின் இரு கொம்புகளுக்கு இடையே சிவபெருமானை வணங்க வேண்டும்.இம்முறைக்கு சோம சூட்ச பிரதட்சணம் என்று பெயர் .
பாற்கடலிலிருந்து வந்த விஷமானது அசுரர்களையும் ,தேவர்களையும் விரட்டிய போது அவர்கள் பயந்து ஓடியது சோம சூட்ச பிரதட்சணம் முறையில்தான் .அதை வைத்தே இம்முறையில் சுவாமியை வலம் வர வேண்டும்.
முதல் முதலில் சிவன் விஷத்தை உண்ட நாள் சனிக்கிழமை .அதனால் ,சனிக்கிழமை வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பு மிக்கது.
பிரதோஷத் தினத்தன்று மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை கோவிலுக்கு சென்று வழிபடுவது சிறந்த பலனை தரும்.
விரதம் இருப்பவர்கள் இந்நேரத்தில் ஆலயத்திற்கு சென்று பிரதோஷக் கால பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்.நந்தி பகவான் சுலோகம் ,சிவன் பாடல்கள் பாடி வணங்குதல் வேண்டும்.பிறகு விரதத்தை முடித்து கொள்ள வேண்டும்.

பிரதோஷ வழிபாட்டின் பயன்கள்
பிரதோஷ பூஜை செய்வதால் எடுத்த காரியங்கள் வெற்றி பெறும் .அறிவு வளரும்,நினைவாற்றல் பெருகும்.பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து பசுவின் கறந்த பாலை கொண்டு ஈசனுக்கும் , நந்திக்கும் அபிஷேகம் செய்து வில்வ இலை, சங்கு பூ வைத்து வழிபட பூர்வ ஜென்ம வினைகள்,பெண்களால் வந்த சாபம் நீங்கும் என விரதமாலை நூல் கூறுகிறது.
இந்த பதிவை உங்களுடன் பகிர்ந்து கொண்ட சந்தோஷத்துடன் முடிக்கிறேன் .
என் பதிவைப் பற்றி உங்கள் கருத்துக்களை தெரிவித்தால் எனக்கு இன்னும் பல தலைப்புகளை எழுத ,ஒரு தூண்டுகோலாக அமையும்.
நன்றி வணக்கம்
உங்கள் அன்பு தோழி
ஈஸ்வரி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக