என் அன்பு தோழிகள் அனைவருக்கும் என் அன்பார்ந்த வணக்கங்கள் .
போன பதிவில் தீபத்தைப் பற்றி எழுதி இருந்தேன் .இந்த பதிவில் அதன் தொடர்ச்சியை எழுதுகிறேன்.என் பதிவைப் பார்த்து ,பயன் பெறுகிறார்கள் என்றால் அதுவே நான் கடவுளுக்கு செய்யும் சேவையாக நினைக்கிறேன்.
அகல் விளக்கு
அகல் ,எண்ணெய் ,திரி ,சுடர் இவையெல்லாம் சேர்ந்ததே விளக்கு.நெய் விளக்கு ஏற்றும் இடத்தில் மகா லக்ஷ்மி குடியிருப்பாள்.
எந்த கடவுளுக்கு தீபம் ஏற்றினாலும் அகல் விளக்கில் தீபம் ஏற்றுவது சிறந்தது.அதற்கு காரணமும் உண்டு.அதாவது அகல் விளக்கு ஒரு ஏழை ஒருவனால் ஐம் பூதங்களைக் [மண்,நீர்,நெருப்பு,காற்று ,ஆகாயம்] கொண்டு செய்யப்படுகிறது.அவன் களிமண்ணில் நீரை ஊற்றி ,சூரிய ஒளியில் காய வைத்து ,காற்றின் உதவி கொண்டு நெருப்பில் இட்டு ஒரு அழகான அகல் விளக்கை செய்கிறான்.அகல் விளக்கில் தீபம் ஏற்றுவதையே அம்பாள் விரும்புகிறாள்.
இன்னுமொரு காரணம்,அகல் விளக்கை வாங்குவதால் அந்த ஏழைக் குடும்பமும் பிழைக்கிறது .நம்மை அறியாமல் ஒரு நல்ல செயல்களை செய்கிறோம்.இதுவும் புண்ணியக் கணக்கில் போய் சேரும்.
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்குமெனில் ,உங்கள் கருத்தை தெரிவித்தால் அது எனக்கு மேலும் எழுத தூண்டுகோளாக அமையும்.

எந்த கடவுளுக்கு எந்த எண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும்?
- கணபதி ----தேங்காய் எண்ணெய்
- முருகன்-----நெய் தீபம்
- நாராயணன் ----நல்லெண்ணெய்
- மகா லக்ஷ்மி ----நெய்
- அம்மன் ----5 கூட்டு எண்ணெய்
- குல தெய்வம் ---இலுப்பை எண்ணெய்
5 கூட்டு எண்ணெய் எது ?என போன பதிவில் எழுதியுள்ளேன்.
அடுத்து ,எத்தனை தீபங்கள் ஆலயத்தில் ஏற்றுவது,எங்கே ஏற்றுவது ?என்பதைப் பற்றி பார்ப்போம்.
கணபதி---1 தீபம் [எலி முன்பாக தீபம் ஏற்ற வேண்டும்]
முருகன்---6தீபம் [மயில் முன்]
பெருமாள் ---5 [கருடாழ்வார் முன்]
மகா லக்ஷ்மி ---8 அகல் விளக்கு
அம்மன் ---2 [வாசலில் ]
சிவன்--3 அல்லது 9 [நந்தி முன்பாக தீபம் ஏற்ற வேண்டும்]
பராசக்தி ---5வகை எண்ணெய்
நாக அம்மன் ---4
ஆலயத்தில் ஏற்றும் அகல் விளக்கு புதியதாக இருக்க வேண்டும் .விளக்கு ஒளியை தருவதுடன் ,நம் உள்ளத்தில் இருக்கும் தீய எண்ணங்களை அகற்றி ,நல்ல நேர்மறை எண்ணங்களை தக்க வைக்கிறது .
நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஆலயங்களுக்கு சென்று ,விளக்கு ஏற்றுங்கள்.முடியாத நேரத்தில் வீட்டில் விளக்கு ஏற்றி வழிபடுங்கள் .
எங்கு ஏற்றினாலும் இந்த மந்திரத்தை சொல்லி ஏற்றுங்கள் .
சுபம் பவது கல்யாணீ ஆரோக்கியம் புத்ர சம்பதாம்
மம துக்க வினாசாயை தீபலக்ஷ்மீர் நமோஸ்துதே!
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்குமெனில் ,உங்கள் கருத்தை தெரிவித்தால் அது எனக்கு மேலும் எழுத தூண்டுகோளாக அமையும்.
வாழ்க வளமுடன்
நன்றி வணக்கம்
உங்கள் அன்பு தோழி
ஈஸ்வரி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக