ஆன்மீக அன்பர்களுக்கு என் இனிய உளம்கனிந்த வணக்கங்கள் .
என்னுடைய பதிவில் மகா சிவராத்திரியைப் பற்றி எழுதி இருக்கிறேன்.அதன் தொடர்ச்சியாக இந்த பதிவை எழுதுகிறேன் .
மகா சிவராத்திரி வழிபாட்டுக்கு 6 அம்சங்கள்
சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தல்------இது ஆன்மாவை தூய்மைப்படுத்தும்
லிங்கத்திற்கு குங்குமம் அணிவித்தல் -------நல்லியல்பையும் ,நல்ல பலனையும் வழங்கும்.
உணவு நிவேதித்தல் -------நீண்ட ஆயுள்,விருப்பங்கள் நிறைவேறும் .
தீபமிடுதல் -----செல்வத்தை வழங்கும்.
எண்ணெய் விளக்கேற்றுதல் ------ஞானத்தை தரும்.
வெற்றிலை அளித்தல் ----உலக இன்பங்களையும்,திருப்தியையும் கொடுக்கும் .

இந்த 6 அம்சங்களையும் கோவிலுக்கு சென்று அல்லது வீட்டிலாவது அனுஷ்டிக்க வேண்டும் என்று புராணங்கள் கூறுகின்றன.
வீட்டில் பூஜை செய்யும் முறை
வீட்டில் பூஜை செய்வதாக இருந்தால் ,மாலையில் குளித்து உலர்ந்த ஆடையணிந்து, நெற்றியில் திருநீறு அணிந்து, கையில் உத்திராட்ச மாலை கொண்டு சிவ பூஜை செய்ய வேண்டும்.
ஐந்தெழுத்து மந்திரமான "சிவாய நம",ஓம் நமச்சிவாய"என உச்சரித்து பூஜை செய்தல் வேண்டும்.சிவபெருமானின் வெவ்வேறு பெயர்களான பவாய ,சர்வாய ஈசனாய ,பசுபதாய ,உக்ராய ,ருத்ராய ,பீமாய மற்றும் மகா தேவா நமஹ என்று கூறி ,பூஜிக்க வேண்டும். வீட்டில் உங்களுக்கு தெரிந்த பாடல்களை பாடி இறைவனை சந்தோஷப்படுத்தி ,பரம்பொருளான சிவபெருமானின் அருளை பெறலாம்.
சிவபெருமானின் சகஸ்ர நாமத்தை சொல்லி ,சிவபெருமானுக்கு உகந்த வில்வ இலையை போட்டு பூஜிக்க வேண்டும்.108 போற்றியையும் ,மூல மந்திரத்தையும் பாராயணம் செய்வது நல்ல பலனை தரும்.
பின்னர் நைவேத்தியமாக சர்க்கரை பொங்கல் வைக்க வேண்டும் .
பூஜை செய்ய முடியாதவர்கள் 4ஜாமத்திலும் சிவபுராணங்களை கேட்டும்,சிவதுதி சொல்லி,சிவன் கோவிலுக்கு சென்று அந்த இரவை கோவிலில் கழித்து சிவனை வழிபட வேண்டும்.சிவனுக்கு 3 அல்லது 9 நெய் தீபம் ஏற்றி வழிபடலாம்.
நான் கோவில்களில் சில பேர் "ஓம் நமச்சிவாய" என எழுதுவதைப் பாத்திருக்கிறேன் ,அவ்வாறு நாம் எழுதி நம் கோரிக்கைகளை சிவபெருமானிடம் முன் வைக்கலாம்.அன்று முழுவதும் சிவனை மனதில் இருத்தி ,வழிபட வேண்டும்.
சிவனுக்கு செய்யும் அபிஷேக பொருட்களை வாங்கிக் கொடுத்து, பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்.
ஆன்மீக நண்பர்கள் இதைப் படித்து ,பலன் பெற நான் சிவபெருமானை வேண்டுகிறேன் .
நன்றி !வணக்கம் !

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக