வைகாசி விசாகம்
வைகாசி விசாகம் என்பது முருகக் கடவுள் அவதாரம் செய்த நாளாகும்.வைகாசி மாத விசாக நட்சத்திரத்தில் வரும் சிறந்த நாள் இதுவாகும்.முருகப் பெருமான் விசாக நட்சத்திரத்தில் பிறந்ததால் "விசாகன்" என அழைக்கப்படுகிறார்.
விசாகன் என்றால் "பட்சி" [மயில் ]என்றும்,சாகன் என்றால் "சஞ்சரிப்பவன்" என்று பொருள்.மயில் மீது வலம் வரும் இறைவன் என்பதால்" விசாகன்" என்றும் அழைப்பர்.
முருகன் வாகனமாக சூரபத்மனே திகழ்கிறான்.
உயிருக்கு நேரும் இன்னல்களை நீக்கும் பொருட்டு ,சிவன் ஆறுமுகமாய் தோன்றி தம் திருவிளையாடலால் குழந்தையானது இந்நாளில் தான்.வைகாசி மாத பெளர்ணமி நாளை "வைகாசி விசாகம்"என்று குறிப்பிடுகிறோம்.
பகைவருக்கு அருள்கின்ற தன்மை முருகப் பெருமானிடம் காணலாம்.பழநி,திருப்பரங்குன்றம் போன்ற கோவில்களில் அணி அணியாக மக்கள் பால்குடம் எடுத்து அபிஷேகம் செய்கிறார்கள்.இந்நாளில் முருகனைப் பணிந்து ,வேண்டிய வரத்தை பெறலாம்.
காளிதாசன் எழுதிய "குமார சம்பவம்"எனும் நூலில் ,முருக பெருமான் பிறப்பு பற்றி கூறப்பட்டுள்ளது.
சம்பவம் என்றால் தோன்றுதல்.குமரனின் தோற்றத்தைப் பற்றிய நூல் என்பதால் இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது.
வைகாசி விசாகம் விரதம்
விரதம் இருப்பவர்கள் பிரம்ம முகூர்த்த வேளையில் (காலை 4.30-6)மணிக்குள் எழுந்து நீராட வேண்டும்.
நாள் முழுவதும் விரதம் இருக்க முடிந்தவர்கள்,ஒரு வேளை மட்டும் உணவு உண்ணலாம்.மற்றவர்கள் பால் ,பழம் சாப்பிட்டு விரதம் மேற்கொள்ளலாம்.
முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரங்களான ஓம் சரவணபவ ஓம் ,ஓம் சரவண பவாய நம ,ஓம் முருகா ஆகிய மந்திரங்களில் ஏதாவது ஒன்றை நாள் முழுவதும் ஜெபித்து வர வேண்டும்.
திருப்புகழ் ,கந்த சஷ்டி கவசம்,ஸ்கந்த குரு கவசம்,சண்முக கவசம் பாடல்களில் ஏதேனும் ஒன்றை காலையிலும் ,மாலையிலும் பாராயணம் செய்ய வேண்டும்.
முருகன் கோயிலுக்குச் சென்று விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும்.
முருகன் கோயில் அமைந்துள்ள மலையை வலம் வந்தால் மிகுந்த புண்ணியம் உண்டாகும்.இந்த விரதம் இருப்பவர்களுக்கு புத்திரதோஷம் நீங்கும்.குழந்தை இல்லாதவர்களுக்கு விரைவில் மழலைச் செல்வம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
திருமணமாகாத கன்னியர்கள் விரதமிருந்தால் விரைவில் திருமணம் நடக்கும்.இந்த விரதத்தை ஆண்கள் மேற்கொள்ளலாம்.
பக்தர்கள் பால்குடம் எடுத்தல்,காவடி எடுத்தல், அலகு குத்துதல் ,பாத யாத்திரை செல்லுதல் போன்ற வேண்டுதல்களை இந்த நாளில் நிறைவேற்றுகிறார்கள்.
சில ஆலயங்களில் தேர் திருவிழாவும் நடைபெறும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக