வெள்ளி, 13 மே, 2016

பிரதோஷ பூஜையின் போது அபிஷேகப் பொருட்களும் ,அதன் பலன்களும்



அன்பு தோழிகளே !
போன பதிவில் பிரதொஷத்தைப் பற்றி எழுதி இருந்தேன்.அதன் தொடர்ச்சியே இந்த பதிவில் இடம் பெறுகிறது.அனைத்து  உயிர்களையும் காத்து ரட்சிக்கும் நம் ஒப்பற்ற தந்தையின் வரலாறுகளை சொல்லிக் கொண்டே போகலாம் .அதற்கு அளவே கிடையாது. 



ஆன்மிகம் ஒரு பெறும் கடல் .அதைப் படிக்க படிக்க வந்துக் கொண்டே இருக்கும்.நாம் இவ்வுலகிற்கு வந்ததே நம் அம்மை ,அப்பன் அருளாலே தான்  .எனவே ,அம்மை ,அப்பன் நந்தியின் மீது அமர்ந்து இருக்கும் கோலத்தை கண்குளிர பார்த்து ,அவர்கள் அருள் என்றென்றும் நமக்கு கிடைக்க வேண்டுவோம்.



தோஷம் என்றால் குற்றம்.பிரதோஷம் என்றால் குற்றமற்றது.

பிரதோஷம் என பெயர் எப்படி வந்தது ?

சூரியனுக்கு இரு மனைவிகள் .அவர்கள் உஷா தேவி,பிரத்யுஷா .   


இரவும்,பகலும் சந்திக்கும் நேரம் உஷத் காலம் என்று பெயர் .இந்த வேளையின் அதி தேவதை உஷா தேவி .அதேபோல் ,பகலும் ,இரவும் சந்திக்கும் நேரம்  பிரத்யுஷத் காலம்.இதன் அதிதேவதை பிரத்யுஷா .அவள் பெயரால் இது "பிரத்யுஷத் காலம் "எனப்பட்டது .பேச்சுவழக்கில் 'பிரதோஷக்  காலம் 'என சொல்லப்படுகிறது,



பிரதோஷ பூஜையின் போது  அபிஷேகப் பொருட்களும் ,அதன் பலன்களும் 

பால் -----நோய் தீரும் ,நீண்ட ஆயுள் 

தயிர் ----பல வளங்கள் கிடைக்கும் 

தேன் ---இனிய சாரீரம் 

பழங்கள் ----விளைச்சல் பெருகும் 

பஞ்சாமிர்தம் ----செல்வம் சேரும் 

நெய்  ---முக்தி பெறு 

இளநீர் ---நல்ல மக்கட்பேறு கிடைக்கும் 


சர்க்கரை ----எதிர்ப்புகள் மறையும் 

எண்ணெய் ----சுகவாழ்வு 

சந்தனம் ----சிறப்பான சக்திகள் 

மலர்கள் ----தெய்வதரிசனம் 

பிரதோஷம் வரும் கிழமையும்,பலன்களும்  

ஞாயிறு ----அனைத்து  நலன்களும் கிடைக்கும்


திங்கள்----சிவசக்தி அருளை பெறலாம் 


செவ்வாய் ----பசி,வறுமை ,நோய் அகலும் 


புதன்   ----நன்மக்கட் பேறு  அளிக்கும் 


வியாழன்---திருமணத் தடை நீங்கும் 


வெள்ளி ---எதிரிகளை அழிக்கும் 


சனி ----அனைத்து பாவங்கள் போகும் 



கார்த்திகை மாத சனிக்கிழமை பிரதோஷம் மிகவும் சிறப்பானது.முதல்முதலில் பிரதோஷம் வந்த நாள் சனிக்கிழமை .அன்று தேவர்களும்,மூம் மூர்த்திகளும் உண்ணா நிலையை கடைபிடித்து சிவனருள் பெற்றார்கள்.தொடர்ந்து 12 பிரதோஷங்கள் கடைப்பிடித்தால் இறைவனருள் கிட்டும்.நம் பாவங்கள் தொலையும்.நந்தி தேவர் ,நம் கோரிக்கைகளை இறைவனிடம் கொண்டு போய் சேர்ப்பார் என்பது  திண்ணம் .

பிரதோஷம் 5 வகைப்படும்.


நித்திய  பிரதோஷம் -----தினமும் பிரதோஷக் காலத்தில் வழிபடுவது 


பட்ச பிரதோஷம்  ----சுக்லபட்ச சதுர்த்தியின் மாலை நேரம் 

மாத பிரதோஷம்  -----கிருஷ்ணபட்ச திரியோதசி தினத்தில் வருவது 

பிரளய பிரதோஷம் ----பிரளய காலத்தில் ,எல்லாம் சிவனிடம் ஒடுங்குவது 

மகாப் பிரதோஷம்  -----சனிக்கிழமை தினம் கிருஷ்ண பக்ஷ  திரயோதசி 

சனிக் கிழமையில் வரும் பிரதோஷம் சிறப்பானது.அன்று  சிவன் ஆலத்திற்கு சென்று பிரதோஷ வழிபாடு செய்தால் 5 வருடம் ஆலயம் சென்ற பலன் கிட்டும்.

எனக்கு தெரிந்தவற்றை பகிர்ந்து கொண்ட மகிழ்ச்சியில் என் பதிவை முடிக்கிறேன்.

நன்றி வணக்கம் 

அடுத்த பதிவில் சந்திப்போம் .
ஈஸ்வரி 










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக