ஆனந்த தாண்டவம்
ஒவ்வொரு யுகம் முடிந்ததும் உலகம் அழிந்து போகும்.அப்போது சிவன் எல்லா உயிர்களையும் தன்னுள் அடக்கி கொள்வார்.ஒவ்வொரு உயிரின் தலையிலும் அது செய்த பாவங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதைப் பார்ப்பார்.
அடேங்கப்பா! இந்த உயிர் எத்தனை பெரிய பாவ மூட்டை கரைக்க வேண்டியிருக்கும்!அதற்கு ஏகப்பட்ட பிறவிகள் எடுக்க வேண்டியிருக்கும் என்று வருத்தப்படுவார்.அப்போது அவர் உள்ளத்தில் கருணை பொங்கும்.மீண்டும் உயிர்களை படைக்க முடிவெடுப்பார்.அந்த மகிழ்ச்சியில் அப்போது நடனம் ஆடுவார் .அதையே "ஆனந்த தாண்டவம்"என்பர்.
சிவன் நடனமாடும் போது 'நட [ன ]ராஜா' என்ற பட்ட பெயர் பெறுவார்.
மற்றொரு நிகழ்ச்சி
சிவனின் ஆனந்த நடனத்தை காண வியாக்ரபாதர்,பதஞ்சலி முனிவர்கள் சிதம்பரத்தில் தவம் செய்து வந்தனர்.அவர்களுடைய தவத்தினால் மகிழ்ந்து சிவபெருமான் ஆனந்த தாண்டவம் ஆட இசைந்தார்.
புலி தோல் உடுத்தி ,உடுக்கை ,அனல்,மான் மழு ,நாகாபரணம் அணிந்து,வலக்கையால் டமருகத்தை அடித்தும்,இடக்கையில் அக்னி ஏந்தியும்,ஒரு கையால் அபயம் அளித்து,மறுகையால் பாதத்தை காட்டியும் நடனமாடினார்.
அசுரன் முலகனை காலால் மிதித்தபடி ஆடுகின்ற நடனம் "ஆனந்த தாண்டவம் "என வழங்கப்படுகிறது.படைத்தல்,காத்தல்,அழித்தல் ,மறைத்தல் ,அருளல் என ஐந்தொழிலையும் இயற்றும் தாண்டவம் ஆனந்த தாண்டவம் என அறியப்படுகிறது.இது 'பிரபஞ்ச இயக்க நடனம்' என்று போற்றப்படுகிறது .
இதை திருநாவுக்கரசர் "குனித்த புருவமும் கொவ்வைச் செவ் வாயிற் குமிண் சிரிப்பும் "என்று பாடுகிறார்.
நடனமாடும் சிவனை "கூத்தன்" என்றும்,தில்லையில் நடனமாடியதால் "தில்லைக் கூத்தன் "என்று அழைக்கப்படுகிறார்.
நன்றி வணக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக