என் அன்பு தோழிகளுக்கு என் இனிய வணக்கங்கள்.நான் எழுதிய பதிவுகள் பல்வேறு தலைப்புகளில் இருந்தாலும் இப்போது நான் எழுதும் தலைப்பு ஒவ்வொரு இல்லத்தரசிகளும் தெரிந்து கொள்ள வேண்டிய தலைப்பாகும்.
இந்துக்கள் ஒவ்வொரு வீடுகளிலும் கோவிலாக விளங்குவது பூஜை அறைதான்.அதைப்பற்றி அறிந்து கொள்வது நம் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாத செயல் ஆகும்.
நான் அறிந்த,தெரிந்த விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
பூஜைஅறை
மன நிம்மதியையும்,சந்தோஷத்தையும் தரக்கூடியது கோவில்கள்.நாம் அன்றாடம் கோவிலுக்கு செல்வது இயலாத காரியம்.அந்த குறையைத் தீர்க்கவே நாம் வீட்டில் பூஜையறையை அமைத்து வழிபட வேண்டும்.
இன்றைய காலத்தில் பெண்கள் வேலைக்கு செல்வதால் தினமும் கோவிலுக்கு சென்று வருவது இயலாத காரியம்.ஆதலால் இல்லத்தரசிகள் தினமும் பூஜை அறையை சுத்தம் செய்து ,2நிமிடம் மனதை கடவுளிடம் இருத்தி பிராத்தனை செய்ய வேண்டும் .
பூஜைஅறை தகவல்கள்
முதலில் பூஜை அறையை கிழக்கு பார்த்து இருக்குமாறு அமைக்க வேண்டும்.அது முடியாத போது மேற்கு ,வட கிழக்கு நோக்கியும் பூஜையறையை அமைக்கலாம்.
பூஜை அறையில் குல தெய்வத்தை முதலில் வைக்க வேண்டும்.பிறகு நம் இஷ்ட தெய்வங்களையும் ,குருவாக நாம் நினைக்கும் மகான்களின் படங்களை [சாய் பாபா ,மகா பெரியவா ,ராகவேந்திரா] வைக்கலாம்.நிறைய தெய்வங்களை வைத்து வழிபடுவதில் தவறு இல்லை .ஆனால் அதை சுத்தம் செய்வது கடினம்.
தெய்வ படங்களை சுவரில் மாட்டும்போது தெய்வத்தின் கண்கள் தரையில் படும்படியாக படங்களை மாட்ட வேண்டும்.
இறந்தவர்கள் நம் அன்பிற்கு பாத்திரமானவர்கள் என்று எண்ணி அவர்கள் படங்களை பூஜையறை யில் வைக்கக் கூடாது.இறந்தவர்கள் தெய்வமாக இருந்து நம்மை காப்பாற்றுவார்களே தவிர ,அவர்கள் தெய்வம் அல்ல.அதனால் இறந்தவர் படங்களை தனியாக வைத்து பூஜை செய்வது நல்லது.
சாந்தமான தெய்வங்களை வீட்டில் பூஜையறையில் வைத்து வணங்கலாம்.உக்கிரமான தெய்வங்கள் வீட்டில் வைத்து வழிபடுவது உகந்தது அல்ல.அவைகள் கடவுளின் ஆவதாரமே ஆனாலும் அதற்கென வீட்டில் வழிபாடுகளும் ,சுத்தங்களும் தேவை .எனவே,அந்த தெய்வங்களை கோவில்களில் வழிபடுவதே நல்லது.
தெய்வ சிலைகளை சில பேர் வீடுகளில் வைத்து பூஜை செய்வது உண்டு.மண் சிலையாக இ ருந்தாலும்,விக்ரங்களாக இருந்தாலும் முறையாக பூஜை செய்ய வேண்டும்.
பூஜை அறை கதவு இரு கதவாக இருக்க வேண்டும். அவை வெளிப்புறம் திறக்கும்படி அமைத்தல் வேண்டும்.பூஜை அறை பக்கத்தில் கழிவறை இருத்தல் கூடாது.மாடிப்படிக்கு கீழும் பூஜை அறை இருத்தல் கூடாது.பெரிய வீட்டில் மேல் மாடியிலும் ,கீழும் வசித்தால் கீழ் தளத்தில் பூஜை அறையை அமைத்து கொள்ள வேண்டும்.
தலை வாசலை அருகில் பூஜை அறையை அமைத்தல் கூடாது.
பூஜை அறையை பூஜை முடிந்ததும் சாத்தி வைக்க வேண்டும்.பெண்கள் சுத்தமாக இருக்கும் நேரத்தில் மட்டுமே வீட்டில் விளக்கேற்ற வேண்டும்.
ஒரு படம் வைத்து பூஜை செய்தாலும் அது உருப்படியாக இருக்க வேண்டும்.தூசி ,ஓட்டடை படிந்து இருத்தல் கூடாது.பழைய படங்கள் ,உடைந்த சிலை ,கறை படிந்த உடைந்த கண்ணாடியுடன் இருக்கும் படங்களை கண்டிப்பாக பூஜை அறையில் வைத்திருத்தல் கூடாது .
வீட்டில் பூஜை அறையில் ஒற்றை குத்து விளக்கு ஏற்றக் கூடாது.இரண்டு குத்து விளக்கு ஏற்ற வேண்டும்.
நம் குல தெய்வமாக காமாட்சி விளக்கை ஏற்ற வேண்டும்.விளக்கிலிருந்து கற்பூரம் ஏற்றுவதோ ,ஊதுவர்த்தி ஏற்றுவதோ கூடாது.அதற்கென ஒரு அகல் விளக்கு ஏற்றி அதில் கற்பூரம் ஏற்றவும்,ஊதுவர்த்தி ஏற்றவும் பயன்படுத்தலாம்.
வீட்டில் பூஜை அறையில் எப்பொழுதும் வடகிழக்கு மூலையில் ஒரு செம்பு தண்ணீர் இருப்பது நல்லது.தண்ணீரை தினமும் மாற்ற வேண்டும்.முக்கியமாக தென்கிழக்கு மூலையில் குத்து விளக்கை வைத்து விளக்கேற்ற வேண்டும்.இரு புறமும் குத்து விளக்கை ஏற்றுவது தவறு ஒன்றும் இல்லை.
பூஜையின் போது ஒரு குத்து விளக்கில் ஐந்து முகம் ஏற்றி பூஜை செய்யலாம் .விளக்கு பூஜை செய்பவர்கள் 5முகங்களை ஏற்றி செய்வதே சிறந்தது.இதனால் நமக்கு எல்லா வளங்களும் கிடைக்கும் .பூஜைக்கு நெய் தீபமே சிறந்தது.
கற்பூரம் ஏற்றினால் மாசு ஏற்படுவதால் கோவில்களில் விளக்கு ஆர்த்தி செய்கிறார்கள்.நாமும் நம் பூஜை அறை தெய்வங்களுக்கு தீப ஆரத்தி எடுத்து பூஜிப்போம்.
நம் வீட்டை சுத்தமாக வைத்திருந்து பூஜை செய்வது போல் நம்மிடம் உள்ள தீய பண்புகளை விடுத்து நம் மனதை சுத்தமாக்கி இறைவனின் திருவடிகளை தொழுவோம் .
நாமும் சந்தோசத்துடன் வாழ்வோம்.நம்மை சுற்றி உள்ளவர்களும் எல்லா வளங்களும் பெற்று சந்தோஷமாக வாழ இறைவனை பிராத்திப்போம்.
எல்லா வளமும் நம்மை தேடி வரவும்,என் இஷ்ட தெய்வமான முப்பெரும் தேவியரை மனமுருக வணங்கி ,இந்த பதிவை முடிக்கிறேன்.
இன்னும் சில தகவலுடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன் .
உங்கள் அன்பு தோழி
ஈஸ்வரி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக