ஹாய் ப்ரண்ட்ஸ் , எல்லோருக்கும்
என் வணக்கம் .
என்னுடைய பதிவு 100 யை எட்டி விட்டதை எண்ணி என் உள்ளம் பூரிப்பு அடைகிறது .இதற்கு முதலில் என் இஷ்ட தெய்வமான முப்பெரும் தேவியரை மனதார வணங்குகிறேன் .
இந்த பதிவை எழுதுவதற்கு என் குடும்பமும்,நண்பர்களும் உறுதுணையாக இருக்கிறார்கள் என்பதை இங்கு கூறவேண்டியது என்னுடைய கடமை . என் பதிவைப் படிக்கும் தெரிந்த ,தெரியாத நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள் பல.
என் பதிவைப் படித்து , பயன் பெறுகிறார்கள் என்றால் அதுவே நான் கடவுளுக்கு செய்யும் சேவையாக எண்ணுகிறேன் . இதுவொரு கடவுள் மேல் நான் கொண்ட பக்தி என்றே சொல்லலாம்.
பயம் நீக்கும் சரபேஸ்வரர்
சரபேஸ்வரர் என்பவர் சிவபெருமானின் அவதாரம் இந்த சரபேஸ்வரரின் தோற்றம் மிகவும் விசித்திரமானது.
மனித உடலும்,சிங்க முகமும், எட்டு கால்களும் ,நான்கு கரங்களும் ,கருடன் போன்ற மூக்கும்,யரளியின் வாய் ,இரண்டு பெரிய இறக்கைகள், அவரது காலடியில் வணங்கும் நரசிம்மம் இதுவே சரபேஸ்வரின் உருவமாகும் .
நாராயணன், நரசிம்ம அவதாரம் எடுத்த போது அவரது உக்கிரகத்தை தணிக்க அவரை விட உக்கிரமாக வெளிவந்த சிவ அவதாரமே சரபேஸ்வரர் .
நான் என்ற அகங்காரத்தை அளித்து ,சகல ஐஸ்வரியங்களையும் தந்து அருள்பவர் சரபேஸ்வரர் .
சரபேஸ்வரர் தோன்றிய காரணம்
'இரணியன் ' என்ற அசுரர் குல தலைவன் பரமனை நோக்கி சாகாவரம் வேண்டி தவம் செய்தான் .கடும் தவத்தின் பயனாக பரமனிடம் ," தேவர்,மனிதர் ,விலங்கு முதலிய யாராலும் பகலிலோ அல்லது இரவிலோ ,வீட்டின் உட்புறத்திலோ அல்லது வெளிபுறத்திலோ எவ்வித ஆயுதங்களாலோ தனக்கு மரணம் ஏற்படக்கூடாது "என்ற வரத்தை பெற்றான்.
தன்னை எதிர்ப்பவர் யாரும் இல்லை ,தானே கடவுள் என்று கூறி ,தேவர்கள் உட்பட அனைவரையும் தன்னையே தெய்வமாக வணங்க வேண்டும் என ஆணையிட்டு ,கொடுங்கோல் ஆட்சி செய்து வந்தான்.
இரணியனின் மகன் பிரகலாதன்.அவன் அன்னை வயிற்றில் இருக்கும் போதே ,நாரதர் முனிவரின் மூலம்,திருமால் உபன்யாசம் கேட்டு சிறந்ததொரு ஸ்ரீ ஹரியின் பக்தனாய் பிறந்தான்.எந்நேரமும் நாராயணன் நாமத்தை சொல்லி வந்தான் .இதனைக் கண்ட இரணியனுக்கு கடும் கோபம் வந்தது .எவ்வளவு சொல்லியும் தன் நாமத்தை சொல்லாத பிரகலாதனை தன மகன் என்று கூட பார்க்காமல் பல வழிகளில் அழித்திட முயன்றான்.ஸ்ரீ ஹரியின் அருளால் அனைத்திலும் தப்பிய பிரகலாதனை நோக்கி ,"எங்கே உன் நாராயணன்? எனக் கேட்க,பிரகலாதனோ "என் நாராயணன் தூணிலும் இருப்பான்.துரும்பிலும் இருப்பான் "என்று கூறினான்.
கோபம் கொண்ட இரணியன் ,அருகில் இருந்த தூணை தன் கதை கொண்டு தாக்க,அதிலிருந்து நரசிம்ம உரு கொண்டு வெளி வந்தார் பரந்தாமன்.இரணியனின் வரத்தின்படி,மனிதனாகவோ ,தேவராகவோ ,விலங்காகவோ இல்லாது அனைத்தும் கலந்த கலவையாய் நரசிம்மமாய் வந்து ,இரவோ பகலோ இல்லாத அந்தி நேரத்தில் எவ்வித ஆயுதங்களுமின்றி தன் நகத்தினை கொண்டு,வீட்டின் உள்ளும் ,வெளியும் இல்லாது வாசற்படியில் வைத்து இரணியனை வதம் செய்தார்.
அசுரனின் குருதியை குடித்து மதி மயங்கி ஆக்ரோஷமானார்.நரசிம்மத்தின் கோபத்தை தணிக்க வேண்டி தேவர்கள் அனைவரும் சிவபெருமானை நாட ,சிவனே சரபேசப் பறவை உருவம் எடுத்து ,நரசிம்மத்தின் கோபம் தணித்தார்.இவ்வாறு பிரகலாதன் மற்றும் தேவர்கள் நடுக்கத்தினை தீர்த்ததால் இவர் "நடுக்க தீர்க்க பெருமான் "என்றானார்.
நாராயணின் கோபத்தை தணிக்க ,அபூர்வ பிறவி சரபேஸ்வரர் தோன்றி,அவர் போட்ட சப்தத்தினால் நரசிம்மர் அடங்கினார்.
சந்தி ,சூரி ,அக்கி 3 கண்களாக,கூர்மையான நகங்களோடும்,காளி ,துர்க்கா ஆகியோர் தன் இறக்கையாகவும் கொண்டு வேகமாய் பறந்து ,பகைவர்களை அளிக்கும் சரபேஸ்வரர் "பட்சிகளின் அரசன்"என்றும்,"சாலுவேஸ்வரன் " என்று அழைக்கப்படுகிறார்கள்.
இவரின் சக்திகளாக விளங்குபவர்கள் பிரத்யங்கிரா மற்றும் சூலினி .
காஞ்சி புராணத்தில் ,நரசிம்மரின் உக்கிரத்தை அடக்க பரமசிவன் வீரபத்திரனை அனுப்பினார் .நரசிம்மம் வீரபத்திரரை கட்டி போட்டு விட்டு வேடிக்கை பார்த்ததாகவும் ,அந்த சமயம் சிவன் ஒரு ஜோதி ரூபமாக வீரபத்திரனின் உடலில் புகுந்து,சரபேஸ்வரர் ஆகி நரசிம்மத்தை அடக்கியதாக கூறுகிறது.
திருபுவனம் கோவிலில் சரபேஸ்வரருக்கு தனி சன்னதி உள்ளது.
எத்தகைய விதியையும் மாற்றும் சக்தி சரபேஸ்வருக்கு மட்டுமே உண்டு.நம் கண்களுக்கு புலப்படாத எதிரிகளை அழித்து,நம்முடைய துன்பங்களை நீக்கி ,தன்னிடம் சரணடையும் பக்தர்களுக்கு சுகமளிக்கும் தெய்வம் சரபேஸ்வரர் .இவரை ஞாயிற்றுக் கிழமை மாலை 4 1/2 --6 மணி வரை ராகு காலத்தில் வழிபட பயம் விலகும்.
தூக்கம் நீங்க ,தீய சக்தியிலிருந்து பாதுகாக்க ஸ்லோகம்
ஹராய பீமாயா ஹரிப்ரியாய
பவாய சாந்தாய பராத்பராய
ம்ருடாய ருத்ராய த்ரிலோசனாய
நமோஸ்து துப்யம் சர்பேச்வராய
ஸ்ரீ சரபாஷ்டகம் .
இதை எல்லாம் சொல்ல முடியாது மிகச் சிரமம் என்று நினைப்பவர்களுக்கு தமிழில் மந்திரம்
இது .
அச்சத்தை நீக்கும் திவ்ய கவசம்
நரசிம்ம உக்கிரம் உடைத்து வந்த
பரமசிவம் பறவையாய் எழுந்த என் கோலே !
ஹரஹர எனச் சொல்லி ஆனந்தமாக்கி உன்னை
உரத்த குரலில் கூவி அழைப்பேன் சாலுகேசா என்றே
சிரம் இரண்டும் ,கண் மூன்றும் கூரிய மூக்குடனே
கரம் நான்காய் எனைக் காத்தருளும் கருணாகரனே !
பரம் பொருளே! சரபேசா !வாழி வாழியே !
பில்லி சூனிய ஒழிப்பு,மரண பயம் அகலுதல்,நீண்ட ஆயுள் ,எந்த வியாதியும் நெருங்காத சூழ்நிலை ,எதிரிகள் குலநாசம் என்று பாதுகாப்பு வளையங்களாக சரபேஸ்வரர் வழிபாடு திகழ்கிறது.
சரபேஸ்வரரை பற்றி உங்களுடன் பகிர்ந்து கொண்டேன் என்ற மகிழ்ச்சியில் மேலும் என் பணி தொடர பராசக்தியை பிராத்திக்கிறேன் .
உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டால் அது எனக்கு ஒரு தூண்டுகோலாக அமையும்.
இந்த சந்தோசத்துடன் ,அடுத்த பதிவில் மற்றுமொரு ஆன்மீகத் தேடலில் சந்திப்போம் .
என்றும் உங்கள் தோழி
ஈஸ்வரி