திங்கள், 17 அக்டோபர், 2016

குபேர லட்சுமி பூஜை செய்வதன் காரணம்

குபேர லட்சுமி பூஜை செய்வதன் காரணம் 



செல்வத்தை அருளும் லக்ஷ்மி தேவிக்கு பூஜையை செய்யாமல் எதற்கு குபேரருக்கு பூஜையை செய்ய வேண்டும்?   


சிவபெருமான் தனது  அதிபதிகளாக லக்ஷ்மி தேவியையும், அவளுக்கு கீழ் பணி புரிய குபேரனையும் நியமித்தார். தேவலோகத்தில் உள்ள குபேர பட்டிணத்தில் இருக்கும் அழகாபுரி அரண்மனையில் இவர் வீற்றிருக்கிறார். லக்ஷ்மி தேவியின் அனைத்து செல்வத்தையும் பாதுகாக்கும் பணியில் உள்ளவரே குபேரன். லக்ஷ்மி தேவி செல்வத்துக்கு அருள் புரிந்தாலும் குபேரர் சில சமயம் 'அம்மா இவர் தகுதியானவர் இல்லை'லக்ஷ்மி தேவி தரும் செல்வத்தை தடுத்து நிறுத்தி விட முடியுமாம். ஒருவர் இல்லாமல் இன்னொருவர் இல்லை என்பதினால் லக்ஷ்மி தேவியே செல்வத்தை அருள்பவள் என்றாலும்அதை குபேரனால் தடுக்க முடியும் என்பதினால் அவரையும் வணங்க வேண்டும்.  சிலபுராணக் கதையின்படி குபேரன் அனைத்து செல்வங்களையும் ராவணனிடம் இழந்துவிட்டு வந்தபோது அவளுக்கு லக்ஷ்மி தேவியே செல்வத்தைத் தந்து அருள் புரிந்து அவரை தன்னிடம் உள்ள செல்வத்தைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடுத்திக் கொண்டதாகவும்கதை உண்டு. ஆனால் எது எப்படியோ நியதியின்படி அந்த செல்வத்தை தன் கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக வைத்து உள்ள குபேரர் பெட்டியை திறந்தால்தான் செல்வம் கிடைக்கும் என்பதினால் குபேரரையும்  லட்சுமி தேவியுடன் சேர்த்து பூஜிக்க வேண்டும். 

சிவபெருமான் செல்வத்தின் அதிபதிகளாக மஹாலக்ஷ்மியையும் அவளுக்கு கீழ் இயங்கும் தெய்வமாக குபேரனையும் படைத்தவுடன் அவர் உலகில் உள்ள செல்வ நிதிகளான பத்ம நிதி, மகாபத்மநிதி, மகரபத்மநிதி, கட்சபபத்மநிதி, குமுத நிதி, நந்தநிதி, சங்குநிதி, நீலநிதி,மற்றும் யோகநிதி எனும் ஒன்பது நவநிதிகளையும் குபேரனுக்கு தந்தாராம். அவற்றில் முக்கியமானவை மூன்றுதான். கடல் சங்கின் உள் இருந்து இருந்து தொடர்ந்து வெளிவந்து கொண்டு இருக்கும் நீரைப் போல தொடர்ந்து செல்வத்தை பெறும் நிலைசங்குநிதியாகும். பதுமம் என்றால் தாமரை என்ற பொருள் உண்டு. ஆகவே தாமரை மலரிலே உள்ள அடுக்கடுக்கான தாமரை இதழ்களை போல அடுக்கடுக்கான செல்வத்தை பெறும் நிலையே பத்மநிதியாகும். அதை போலவே எதிர்பாராமல் செல்வத்தைப் பெறும் நிலையே யோகநிதியாகும். இந்த மூன்று முக்கியமான நிலைகளையும்-பாதாளம், பூலோகம் மற்றும் தேவ லோகம் என மூன்று லோகங்களிலும் வெளிப்படுத்துகின்றார். அதன் காரணமாகவே ஒன்பது கட்டங்கள் உள்ளன. குபேர யந்திரத்தின் ஒன்பது கட்டங்களிலும் குபேரர் அமர்ந்து கொண்டு அவற்றை வெளிப்படுத்துகிறார்.


அதை போலவே தேவி மஹாலக்ஷ்மி படைக்கப்பட்டவுடன் அவளுக்கும்மேலும் எட்டு குணங்களுடன் கூடிய உருவங்களை பெற்றாள்.எதற்கு அத்தனை ரூபங்கள் தேவை என்றால் செல்வமே அனைத்தையும் தரும் நிலை அல்ல.அந்த செல்வத்தை முழுமையாக அனுபவிக்க வாழ்க்கையில் மேலும் சிலசுகங்களை பெற வேண்டும்.
அஷ்ட லஷ்மிகளாக இருந்து கொண்டு அவள் தருபவைதானியம், தைரியம், சந்தானம் (மழலை செல்வம்),வெற்றி,விவேகம், மதிப்பு, சுகம் மற்றும் மகிழ்ச்சி போன்றவற்றைதருகின்றாள். இவை அனைத்தும் இருந்தால்தான் செல்வம் பெற்றவன் அதன் சுகத்தை அனுபவிக்க முடியும்என்பதினால்செல்வம் வேண்டும் எனப் பிரார்திக்கும் நேரத்தில் தடை இன்றி செல்வம் கிடைக்க செல்வத்தை தன் கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக வைத்து உள்ள குபேரர் மூலமே லக்ஷ்மி தேவியை ஆராதிக்க வேண்டும் என்பது ஐதீகம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக