ஞாயிறு, 16 அக்டோபர், 2016

சரஸ்வதி தேவி வெள்ளை ஆடை அணிந்திருப்பது ஏன்?

சரஸ்வதி தேவி வெள்ளை ஆடை அணிந்திருப்பது ஏன்?


மற்ற தேவியர் வண்ண ஆடை உடுத்த சரஸ்வதி மட்டும் வெள்ளை ஆடை உடுத்தி,வெள்ளைத்தாமரையில் வீற்றிருக்கிறாள்.இதற்கு காரணம் உண்டு. சரஸ்வதி ஞான வடிவானவள்.ஞானம் எங்கிருக்கிறதோ அங்கே அடக்கம் இருக்கும்.சரஸ்வதி கல்வி செல்வம்.பிரம்மனின் படைப்புகள் முதன் முதலில் பேசும் திறன் இல்லாமல் கிடந்தன.  அதன் பின்னர் பிரம்மன் சரஸ்வதியை வேண்ட சரஸ்வதி அன்னை அருள்பாலித்தாள்.  அதன் பின்னரே பிரம்மனின் படைப்புள் பேசும் திறமையை பெற்றன.


தூய வெள்ளை ஆடை அணிபவர்களுக்கு தனிமரியாதை  உண்டு.கற்றவர்,மரியாதைக்குரியவர் என்பதை எடுத்துகாட்டவே,கல்வி தெய்வமான சரஸ்வதியும் வெள்ளை ஆடை அணிந்திருக்கிறாள்.வெள்ளை என்பது மாசுமருவற்றது.ஒருவன் கற்ற கல்வியும்,மாசு மருவற்றதாக இருக்க வேண்டும் என்பதை இது காட்டுகிறது.


சரஸ்வதி அணிந்துள்ள புடவை நிறம் வெள்ளை.வானவில்லின் 7வண்ணங்களில் சேராத வெள்ளையை சரஸ்வதிக்கு மட்டும் சாத்துவர்.மலம் என்றால் அழுக்கு.உடலிலுள்ள அழுக்கை மலம் என்கிறோம்.நிர்மலம் என்றால் அழுக்கற்றது.தெளிவானது.நன்மையும்,தீமையும்  கலந்து இருக்கும் இந்த உலகத்தில் அழுக்கே இல்லாத கல்வியைத் தேர்ந்தெடுத்து, கற்க வேண்டும் என்பதையே அவளுக்குரிய வெள்ளை நிறம் உணர்த்துகிறது.வெள்ளை நிறத்தில் மட்டும் ஒளி ஊடுருவும்.இதனால்தான் சரஸ்வதி தேவி நிர்மலமான ஸ்படிகத்தால் ஆன மாலையை அணிந்திருக்கிறாள்.


கலைமகள் பெயர்க்காரணம்    

சரஸ்வதிக்கு கலைமகள் என்ற பெயர் உண்டு.கலை  என்றால் வளர்வது.கல்வியும் படிக்க படிக்க வளர்ந்து கொண்டே போகும்.அதற்கு முடிவுயில்லை .தன்  வாழ்நாளுக்குள்,ஒருவன் எல்லாக் கலைகளையும் கற்று விட முடியாது. இதைத் தான் கற்றது கைம்மண்ணளவு,கல்லாதது உலகளவு என்பர்.படிப்பு தவிர பாடல்,நாடகம்,இசை  போன்ற கலைகளையும் சரஸ்வதி தேவி நமக்கு சிறப்புற கிடைக்க அருள்பாவிக்கிறாள்.

சரஸ்வதி பூஜையின் அர்த்தம்

பூஜை என்பது பூஜா என்பதில் இருந்து பிறந்தது.பூ என்றால் பூர்த்தி.ஜா என்றால் உண்டாக்குவது .தான் என்ற அகங்காரம், அடுத்தவனை விட நன்றாக இருக்க  வேண்டுமென்ற பொறாமை,உலகவாழ்வு நிரந்தரமானது என்ற எண்ணம் ஆகியவை மனிதனை ஆட்டி படைக்கின்றான்.இதையே சைவ சித்தாத்தத்தில் கர்மா,மாயை என்கிறார்கள்.இதை அகற்றி ,ஞானத்தை உண்டாகச் செய்வதே பூஜை.சரஸ்வதி கல்வியாகிய ஞானத்தை தருபவள் என்பதால்,அவளது விழாவை மட்டும் பூஜை என்ற அடைமொழி இணைந்தது .   
















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக