வரலக்ஷ்மி பூஜையின் போது ஷோடசோபசார[16வகை உபசார ] பூஜையின் பொருள்
நம் இல்லத்திற்கு வரும் விருந்தினரை எப்படி உபசரிப்போமோ அதே முறையிலேயே உபசார பூஜைகள் அமைந்துள்ளன.
1.தியானம்
திருப்பாற்கடலில் உதித்த திருமாலின் தேவியாம் வரலக்ஷ்மியை ,கஜலக்ஷ்மியாக மனதுள் தியானம் செய்ய வேண்டும்.
2.தோரஸ்தாபனம்
3.ஆவாஹனம்
அம்பிகையை,நாம் இருப்பிடத்தில்,கலசத்தில் எழுந்தருளப் பிரார்த்தித்தல்
4.ஆசனம்
அம்பிகைக்கு அமர்வதற்காக இருக்கை அளித்தல்.மனதுள்,ரத்ன சிம்மாசனத்தில் தேவியை அமர்விப்பதாகப் பாவிக்க வேண்டும்.
5.பாத்யம்
நம் இல்லத்தில் எழுந்தருளியிருக்கும் தேவியின் திருவடிகளை நீரால் அலம்புவது.உத்தரிணியில் சிறிதளவு நீர் எடுத்து,தேவியின் திருவடிகளை அலம்புவதாகப் பாவித்து,சிறு பாத்திரத்தில் சேர்க்க வேண்டும்.
6.அர்க்யம்
தேவியின் அருள் வழங்கும் திருக்கரங்களை நன்னீரால் அலம்புவதாகப் பாவித்து பாத்திரத்தில் நீர் சேர்க்க வேண்டும்.
7.ஆசமனீயம்
தேவி அருந்துவதற்காக நீர் சமர்ப்பிப்பது.உத்தரிணியால் பாத்திரத்தில் நீர் சேர்க்க வேண்டும்.
8.மதுபர்க்கம்
தேவிக்கு தேன் அல்லது தேனும் தயிரும் கலந்து சமர்ப்பிப்பது
9.பஞ்சாம்ருதம்
பாயோததி--க்ருதைர் --யுக்தர் சர்க்கரா மது --ஸம்யுதம் !
பஞ்சாம்ருதம் க்ருஹாணேதம் வரலக்ஷ்மி நமோஸ்துதே!
என்ற மந்திரத்தை உச்சரித்து,தேவிக்கு பால்,தயிர்,நெய்,வெல்லம்,தேன் கலந்த பஞ்சாம்ருதத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
10.ஸ்நானம்
அம்பிகையை நீராடுவதாகப் பாவித்து,பாத்திரத்தில் உத்தரிணிமூலம் நீர் சேர்ப்பது.இது "சுத்தோதக ஸ்தானம்"[நன்னீரால் ஸ்நானம் செய்வித்தல்]என்றும் கூறப்படுகிறது.
11.வஸ்த்ரம்
அம்பிகைக்கு திருமாங்கல்யச் சரடு சமர்ப்பித்தல்
12.கந்தம்,குங்குமம்
தேவிக்கு,சந்தனம்,குங்குமம் சமர்ப்பித்தல்
13.அக்ஷதை
அக்ஷதை சமர்ப்பித்தல்
14.புஷ்பம்
பலவகைப் புஷ்பங்களைச் சமர்ப்பித்தல்
15.அங்க பூஜை
தேவியின் ஒவ்வொரு உறுப்புகளுக்கும் பூஜை செய்ய வேண்டும்.
16.புனர்பூஜை
பூஜை செய்த மறுநாள்,அம்பிகைக்கு சுருக்கமாக,உபசார பூஜைகள் செய்ய வேண்டும்.பானகம் வைத்தல் நன்று.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக