புதன், 19 அக்டோபர், 2016

அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்திரம்

அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்திரம்

நம் வாழ்க்கைக்குத் தேவையான எல்லாவிதமான வளங்களையும் வழங்கக்கூடிய திருமகளை எட்டு வித செல்வங்களுக்கு அதிபதியாக எட்டு தெய்வீக வடிவங்களில் வழிபடக்கூடிய அமைப்பு அஷ்டலட்சுமி என்றழைக்கப்படுகிறது.

1.மஹாலக்ஷ்மி:

யாதேவி சர்வ பூதேஷு லக்ஷ்மி ரூபேண சம்ஸ்திதா:நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:


எந்தத் தேவியானவள் அனைவரிடத்திலும் (அனைத்து உயிர்களிலும்) ஸ்ரீலக்ஷ்மி உருவில் உள்ள ஸ்ரீமஹாலக்ஷ்மியை வணங்குகிறேன்.நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்

2.வித்யா லக்ஷ்மி:

யாதேவி சர்வ பூதேஷு வித்யா (புத்தி) ரூபேண சம்ஸ்திதா:நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:


எந்தத் தேவியானவள் அனைவரிடத்திலும்(அனைத்து உயிர்களிலும்) புத்தியாக, ஞானமாக இருக்கின்றாளோ அந்த தேவிக்கு நமஸ்காரங்கள். அந்த புத்தி உருவில் உறைபவளுக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்

3.ஸந்தான லக்ஷ்மி:

யாதேவி சர்வ பூதேஷு மாத்ரு ரூபேண சம்ஸ்திதா:நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

எந்தத் தேவியானவள் அனைவரிடத்திலும்(அனைத்து உயிர்களிலும்) ,எல்லா உயிரினங்களிலும் தாய் உருவில் உள்ள ஸந்தான லக்ஷ்மியை வணங்குகிறேன். நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

4.காருண்யலக்ஷ்மி:

யாதேவி சர்வ பூதேஷு காருண்ய ரூபேண சம்ஸ்திதா:நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:


எந்தத் தேவியானவள் அனைவரிடத்திலும்(அனைத்து உயிர்களிலும்) , எல்லா உயிரிங்களிலும் தயையுருவில் உள்ள காருண்ய லக்ஷ்மியை வணங்குகிறேன். நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

5.சௌபாக்ய லக்ஷ்மி:

யாதேவி சர்வ பூதேஷு துஷ்டி ரூபேண சம்ஸ்திதா:நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:


எந்தத் தேவியானவள் அனைவரிடத்திலும்(அனைத்து உயிர்களிலும்) , எல்லா உயிரினங்களிலும் துஷ்டி (மகிழ்ச்சி) உருவில் உள்ள சௌபாக்ய லக்ஷ்மியை வணங்குகிறேன். நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.



6.தனலக்ஷ்மி: 

யாதேவி சர்வ பூதேஷு புஷ்டி ரூபேண சம்ஸ்திதா:நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:


எந்தத் தேவியானவள் அனைவரிடத்திலும்(அனைத்து உயிர்களிலும்), புஷ்டி (நிறைவு / பலம் ) உருவத்தில் உள்ள தனலக்ஷ்மியை வணங்குகிறேன். நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

7.வீரலக்ஷ்மி:

யாதேவி சர்வ பூதேஷு த்ருதி ரூபேண சம்ஸ்திதா:நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:


எந்தத் தேவியானவள் அனைவரிடத்திலும்(அனைத்து உயிர்களிலும்), எல்லா உயிரினங்களிலும் தைர்ய உருவில் உள்ள வீரலக்ஷ்மியை வணங்குகிறேன். நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

8.தான்யலக்ஷ்மி:

யாதேவி சர்வ பூதேஷு ஸூதா ரூபேண சம்ஸ்திதா:நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:


எந்தத் தேவியானவள் அனைவரிடத்திலும்(அனைத்து உயிர்களிலும்), எல்லா உயிரினங்களிலும் பசியை நீக்கும் தான்ய உருவில் உள்ள தான்ய லக்ஷ்மியை வணங்குகிறேன் . நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்



















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக