சனி, 9 ஏப்ரல், 2016

தமிழ் புத்தாண்டும் ,விஷுக் கனி கானலும்

தமிழ் புத்தாண்டும் ,விஷுக் கனி கானலும்தொடர்புடைய படம்














என் அன்பு தோழிகளுக்கு   இனிய  தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் .


உலகத்திலுள்ள தமிழர்கள் இந்த நாளை வெகு  விமரிசையாகக் கொண்டாடுவார்கள் .தமிழ் புத்தாண்டு  என்பது தமிழர்கள் ,புதிய ஆண்டு பிறப்பதை கொண்டாடும் விழாவாகும்.இந்தியாவில் சித்திரை மாதத்தின் முதல் நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது . தமிழ் வருஷப் பிறப்பு அன்று கோவில்களில்  புது வருஷப் பஞ்சாங்கம் படிக்கும் வழக்கம் உண்டு .

வீடுகளில் அன்று எல்லா விதமான சுவைகளும் கொண்ட  உணவு  சேர்க்கப்படும்.நம் வாழ்க்கையும் இனிப்பு ,புளிப்பு ,கசப்பு ,காரம் ,துவர்ப்பு கலந்த கலவை என நமக்கு உணர்த்துவதுடன் ,அதை ஏற்று கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்பதே இதன் உட்பொருள் ஆகும்.

pachadi for tamil new year க்கான பட முடிவு

வெல்லம்,மாங்காய் ,வேப்பம்பூ ,மிளகாய் ,உப்பு எல்லாம் சேர்த்து பச்சடி செய்வர்.




சில வீடுகளில் வடை ,பாயசம் ,பல காய்கறிகள் கொண்ட சாம்பார்,பொரியல்கள்   இடம் பெறும் .




தொடர்புடைய படம்சித்திரை தமிழ் புத்தாண்டு தினத்தை கேரளாவில் விஷுக் கனி காணல் என்று கொண்டாடுகிறார்கள் .கேரளாவுக்கு ஒட்டியுள்ள பகுதிகளான  குமரி ,கோவை ,திருப்பூர் ,நாகர் கோவில் போன்ற இடங்களில் விஷுக்கனி காணல் கொண்டாடப்படுகிறது .























சித்திரை வருஷப்  பிறப்பிற்கு முதல் நாள் பங்குனி மாதக் கடைசி நாள் இரவு சுவாமி படங்களுக்கு பூக்கள் போட்டு அலங்கரிக்க வேண்டும்.ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியை வைத்து இருபுறமும் குத்து விளக்கு வைக்க வேண்டும்.ஒரு தட்டில் வெற்றிலை ,பாக்கு ,பூ, பழங்கள்  ,தேங்காய் ,அரிசி ,பருப்பு ,காய்கறிகள் ,புது துணி ,நகைகள் போன்றவற்றை வைக்க வேண்டும்.




மறுநாள் அதிகாலை வீட்டின் மூத்தவர் எழுந்து சுவாமிக்கு அருகில் உள்ள பொருட்களை பார்த்த பிறகு ,குளித்துவிட்டு குத்து விளக்கு ஏற்றுவர். பிறகு வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் தூங்கி எழுந்தவுடன் பூஜை அறையில் வைத்துள்ள பொருட்களை கண்ணாடியில் பார்த்து அறிவர்.இதையே விஷுக்கனி காணல் என்று அழைக்கிறார்கள் .




இவ்வாறு முதல் முதலில் வருஷப் பிறப்பு அன்று பார்க்கப்படுவதற்கு காரணம் ,எல்லா நாளும் எந்த குறைகளின்றி எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே .



எல்லோரும் பார்த்த பிறகு, குளித்து விட்டு சுவாமிக்கு நெய்வேத்தியம் வைத்து  வணங்குவர்.அவரவர்களுக்கு தெரிந்த சுலோகங்களையும் ,பாடல்களையும் பாடுவர் .வீட்டிலுள்ள பெரியவர்கள் குழந்தைகளுக்கு பணம் கொடுப்பர்.இதற்கு கை நீட்டம் என்று பெயர் .இன்றும் கேரள மக்கள் இதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் .இப்படி செய்வதால் ஆண்டு முழுவதும் பணம் குறையாமல் கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கை .


சரி நண்பர்களே !நீங்களும் சந்தோசமாக வரவிருக்கும் புத்தாண்டை கொண்டாடுங்கள் .என்றென்றும் உங்கள் வீட்டில் அளவில்லாத சந்தோஷம் பொங்கட்டும் .நானும் புத்தாண்டை கொண்டாட மிகவும் ஆவலாக இருக்கிறேன் .


எல்லோரும் எல்லா வளமும் பெற இறைவனை பிராத்திக்கிறேன் .

என் பதிவை பார்க்கும் ஆன்மீக அன்பர்கள் உங்கள் கருத்தை தெரிவித்தால் அது நான் மேலும் எழுதுவதற்கு ஒரு தூண்டு கோளாக இருக்கும் .

இன்னும் பல அன்மீகத் தகவல்களுடன் உங்கள் தோழி ,

ஈஸ்வரி .


















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக