செவ்வாய், 5 ஏப்ரல், 2016

ஒன்பது வகையான பக்தி

உலக ஆன்மீக நண்பர்களுக்கு என் அன்பு வணக்கங்கள் .


எனக்கு தெரிந்த விஷயங்களை  உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் என்  பதிவை படிக்கும் ஆன்மீக தோழிகளுக்கு ஆன்மீகத்தைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு ,ஒரு பாலமாக இருப்பது கடவுள் எனக்கு கொடுத்த பரிசு என்றே நான் சொல்வேன் .


இன்னிக்கு நாம் எல்லோரும் ஒவ்வொரு விதமாக கடவுளை நமக்கு தெரிந்த  வழிகளில் வணங்குகிறோம் .பகவான் நம்முடைய ஆத்மாத்தமான பக்தியை மட்டுமே விரும்புகிறார் .உள் அன்புடன் பகவானுக்கு ஒரு பூவையோ அல்லது தண்ணீரையோ சமர்பித்தால் மட்டும் போதும் .நம் கோரிக்கைகளை பகவான் ஏற்றுக் கொள்வார் .


இப்போது 9 வகையான பக்திகள் என்ன என்பதைப் பற்றி பார்ப்போம்.


1) சிராவணம் ----பகவானுடைய நாமங்களையும் ,அவருடைய கல்யாணக் குணங்களை கேட்பது .



ராமாயணத்தில் ,அனுமார் ராமருடைய நாமங்களை உச்சரித்து கொண்டே இருக்கிறார் .

பகவானுடைய நாமங்களுக்கு சக்தி அதிகம் .













2) கீர்த்தனம் -----  பகவானுடைய பெருமைகளை பேசுவது .



ராமாயணத்தை இயற்றியவர் வால்மீகி .இவர் பகவானின் பெருமைகளை பேசுவதுடன் மட்டுமில்லாமல் எழுதி இருக்கிறார் . 

















3)  ஸ்மரணம் ----எப்போதும் பகவானை நினைத்துக் கொண்டே இருப்பது .


இந்த பக்தியானது சீதா  தேவிக்கு உரியது .எப்போதும் ராமனை நினைத்து கொண்டிருப்பவர் சீதை .

4)பாத சேவனம்----கால்களில் விழுந்து வணங்குவது . .




பரதன் பாதுகையை ராமனாக நினைத்து வணங்குவது .













5)வந்தனம் ----பகவானை வணங்குவது ,அவனை  போற்றுவது 

இராவணன் தம்பி விபிஷணன் ராமனையே வணங்கி வந்தான் .


6)அர்ச்சனம் -----  பகவானுக்கு மலர்களையும் ,கனிகளையும் கொடுத்து மகிழ்வது .




ராமனுக்கு சாப்பிட  பழங்களை  கொடுத்து மகிழும் சபரி என்ற மூதாட்டி .

















7)தாஸ்யம் -------பகவானின் வேலைக்காரனாக நடந்து கொள்ளுதல் .



இராமனுடன் இருந்து அவர் சொல்படி கேட்டு நடந்த லக்ஷ்மனின் பக்தி இது.











8)ஸக்யம் ----- பகவானிடம் நட்பு கொள்வது .


சுக்ரீவன் ராமனிடம் நட்பு கொண்டது.
















9)ஆத்ம நிவேதனம் -----  பகவானுக்காக தன உயிரையே தியாகம் செய்வது.



இராவணனிடம் இருந்து சீதையைக் காப்பாற்ற முயன்று, தன் உயிரை கொடுத்த ஜடாயு என்ற கழுகு .















துளசி தாசர் அவருடைய ராமாயணத்தில் ராமர்  சபரிக்கு சொன்ன  9 வகையான  பக்தி .


1.சத்சங்கம்
2.என்  கதை கேட்க ஆசை
3.குரு சேவை
4.என் குணங்களை கீர்த்தனம் செய்தல்
5.என் நாமத்தை சொல்லுதல்
6.புலனடக்கம்
7.எல்லா உயிரினங்களையும் நானாக பார்த்தல் .
8.கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடைதல்,கனவில் கூட பிறருடைய குற்றங்களை காணாதிருத்தல் .
9.சுகம்,துக்கம் இரண்டையும் சமமாக பாவித்தல்

இந்த பக்தியில் ஏதாவது ஒன்றை எவர் பின்பற்றுகிறார்களோ அவர்கள் எனக்கு விருப்பமானவர்கள் என்று ராம பகவான் சொல்லுகிறார் . 

சரி தோழிகளே ,பக்தியைப் பற்றி சொல்லிவிட்டேன் .நீங்களும் உங்களுக்கு எது முடியுமோ அதை பின்பற்றி ,இறைவனின் அருளை பெறுங்கள்.
உங்கள் ஈஸ்வரி 













கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக