செவ்வாய், 12 ஏப்ரல், 2016

ஸ்ரீ ராம நவமி

ஸ்ரீ ராம நவமி


என்  அன்பு ஆன்மீக நண்பர்களுக்கு என்  இனிய வணக்கங்கள்.ஆன்மிகம் என்பது  ஒரு பெரும் கடல்.அதைப் பற்றி அறிய நான் ஒரு துடுப்பாக இருப்பதை எண்ணி மகிழ்கிறேன்.நம் வாழ்க்கை எங்கு சுற்றி திரிந்தாலும் கடைசியில் ஆன்மிகம் என்னும் கடலில் போய்  சேருகிறது .


நம் குழந்தைகளுக்கும் சிறு வயதிலிருந்தே கடவுளின் நாமங்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும்.இனி ராமர் புகழ் பாட உங்களை அழைக்கின்றேன்.
சித்திரை மாதத்தில் கொண்டாடப்படுவது ஸ்ரீ ராம நவமி .பொதுவாக நவமி அன்று எந்த விழாக்களும் கொண்டாடப்படுவது இல்லை .அஷ்டமியும் ,நவமியும்   தங்கள் நாட்களில் எந்த நல்ல காரியமும் நடைபெறுவது இல்லையே !என கவலை அடைந்தனர் . தங்கள் நாட்களிலும் மக்கள் விழாவாக  கொண்டாட வேண்டும் என்று விஷ்ணு பகவானிடம் சென்று முறையிட்டனர்.அவர்களின்  வேண்டுகோளுக்கு இணங்க,நவமி அன்று விஷ்ணு பகவான் ராமர் அவதாரத்தையும்.அஷ்டமி அன்று கிருஷ்ண அவதாரத்தையும் எடுத்தார். 


ராம நவமி அன்று அதிகாலை எழுந்து , குளித்து விட்டு ,வீட்டை சுத்தம் செய்து  பூஜையறையில் கோலம் போட்டு ,ராமர் படத்தை  வைத்து  சந்தனம் ,குங்குமம் பொட்டிட்டு ,துளசி மாலை அணிவிக்க வேண்டும்.பின் பழம் ,வெற்றிலை ,பாக்கு,பூ இவைகளை வைத்து ஸ்ரீ ராம நாமத்தை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்.


நீர் மோர்,பானகம்,பாசிபருப்பு பச்சடி போன்றவற்றை நெய்வேத்தியமாக  வைத்து  பூஜை செய்ய வேண்டும்.


ஸ்ரீ ராமர் 14 வருஷம் காட்டில் இருந்து கஷ்டப்பட்டார். அவர் காட்டில் இருந்த போது நீர் மோரும் ,பானகமும் அருந்தி ,வாழ்ந்தார்.
அதன் காரணமாகவே ஸ்ரீ ராமர் பிறந்த நவமி அன்று இவற்றையெல்லாம் நெய்வேதியமாக வைத்து வணங்குகிறோம் .


ராமரை பற்றிய நூல்களை  படித்தும் ,பாராயணம் செய்வது நன்று.ஸ்ரீ ராமர்  கோவிலுக்கு சென்று ராமர் பட்டாபிஷேகத்தை  கண்டு களிக்க வேண்டும்.

அர்ச்சனை முடிந்த பிறகு ,நெய்வேதியமான சர்க்கரை பொங்கலை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.



காலை உணவு எதுவும் சாப்பிடாமல் விரதம் இருந்து ஸ்ரீ ராமரை வணங்கினால் ,ஆஞ்சநேயரின் அருட்பார்வை கிடைக்கும் .அதனால் குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள்.ஸ்ரீ ராமர்  நாமத்திற்கு மகிமை அதிகம் .எனவே ராமரது நாமத்தை சொல்லி செய்யப்படும் வேலைகள் அனைத்தும் சிறப்பாக அமையும்.

நம் ஆஞ்சநேயர் எல்லா நேரமும் ராம  நாமத்தையே ஜெபித்து வருபவர்.அது மட்டுமில்லாமல் எங்கெல்லாம் ராம நாமம்  உச்சரிக்கப் படுகிறதோ அங்கு ஆஞ்சநேயர் நம் அருகில் இருந்து கேட்கிறார் என்பது திண்ணம் .




ஸ்ரீ ராம ஜெயத்தை 108 முறை ,1008 முறை எழுத தொடங்கலாம்.ராம மந்திரத்தை உச்சரிப்பதால் ஆணவம் அழியும்.மனதில் அமைதியும்,மகிழ்ச்சி உண்டாகும்.ராம நாமம் எல்லையற்ற ஆன்மசக்தியை  கொண்டது .

"ரா " என வாய் திறந்து உச்சரிக்கும் போது நமது பாவங்கள் எல்லாம் வெளியேறி விடுகிறது.'ம 'என உதடுகள் மூடும் போது அந்த பாவங்கள் மீண்டும் வராமல் தடுக்கப்படுவதாக ஐதீகம்.


'ஸ்ரீ ராம்  ஜெய ராம்  ஜெய  ஜெய ராம் 'இந்த ராம  நாமத்தை 108 முறை சென்னாலே நம்மை தேடி ராமர் வருவார்.அருள் மழை  பொழிவார் .

ராமாயணத்தை முழுவதுமாக வாசிக்க முடியாதவர்கள் இதைப் படித்து பலன் பெறலாம் .

ஸ்ரீராம ராம ராமமேதி ரமே ராமே மனோரமே 
ஸஹஸ்ரநாம தத்துல்யம ராமநாம வராணனே 

இந்த இரண்டு வரிகளை சொல்லுங்க போதும்.எந்த வேலைகளிலும் ஆத்மாத்தமாக செய்யும் போது அது சிறப்பாக அமையும்.அதுபோல நாம் பகவனை நினைக்கும் போது ,அவர் பெயரை உச்சரிக்கும் போது  நம்முடைய கோரிக்கைகள் நிறைவேற பகவான் அனுக்கிரகம் செய்வார்.

எல்லோரும் சந்தோஷமாக ,உங்களுக்கு தெரிந்த வழிகளில் இறைவனின்  திருவடிகளைப் இறுக பற்றி கொண்டு அவர் அருளை பெறுங்கள் .



நீங்களும் சந்தோஷமாக இருங்கள் ,உங்களைச் சுற்றி உள்ளவர்களையும் சந்தோஷப்படுத்துங்கள் .

அடுத்த பதிவில் சந்திப்போம் .

நன்றி வணக்கம் .


  











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக