ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்
என் ஆன்மீக தோழிகளுக்கு என் இனிய வணக்கங்கள்.
அம்பிகையானவள் பார்வதி,காமாட்ஷி ,மூகாம்பிகை ,காளிகாம்பாள் போன்ற பல உருவங்களில் இருந்து நமக்கு அருள்பாவிக்கிறாள்.அவள் எடுத்த வடிவங்களில் ராஜராஜேஸ்வரி எனப்படும் லலிதா அவதாரமும் ஒன்று.அந்த வடிவத்திற்குரிய சுலோகம் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்.1000 மந்திரங்கள் கொண்ட தொகுப்பே லலிதா சஹஸ்ரநாமம் .இந்த 1000 மந்திரங்களும் லலிதாம்பிகைக்கு பிரியமானவை.
அம்பிகையின் புகழை சொல்லிக்கிட்டே போகலாம்.அம்பாளின் துதிகள் நிறைய உள்ளது.அந்த துதிகளில் முதலிடம் வகிப்பது ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் .இதை உபதேசித்தவர் ஹயக்ரீவர் .உபதேசம் பெற்றவர் அகஸ்திய முனிவர்.
நிறைய பேர்களுக்கு ஹயக்ரீவர் யார்? என்பது தெரியாமல் இருக்கும்.இவரைப் பற்றி நான் முன்பே என் பதிவில் எழுதியிருக்கேன்.இருந்தாலும் அவரைப் பற்றி சுருக்கமாக சொல்கிறேன்
ஹயக்ரீவர்
ஒரு சமயம் பிரம்ம தேவரிடம் ,அசுரன் ஒருவன் வேதங்களை கவர்ந்து கொண்டு போன போது ,மகா விஷ்ணு ஹயக்ரீவராக குதிரை முகம் கொண்டவராக வந்து, அசுரனை கொன்று ,வேதங்களை பிரம்ம தேவர்க்கு மீட்டு கொடுத்தார்.
ஞானத்தின் வடிவான ஹயக்ரீவர் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தை உபதேசிக்க ,உபதேசம் பெற்ற அகஸ்தியரின் பெருமையை சொல்லி அளவிட முடியாது .
அகஸ்தியர்
சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் திருமணம் நடந்த போது இந்திரன்,பிரம்மன் முதலான தேவர்கள் அனைவரும் அங்கு கூடியதால் வடகோடி தாழ்ந்து தென்கோடி உயர்ந்தது .
அப்போது சிவன் அகஸ்தியரை தென்திசைக்கு அனுப்ப ,பூமி சமநிலை அடைந்தது.அந்த பக்கம் இருந்த அத்தனை பேருக்கும் சமமானவர் அகஸ்தியர் எனபது தானே அர்த்தம்!
பண்டாசுரன் என்னும் அசுரனை வதைப்பதற்கு அம்பிகை தோன்றி லலிதாவாக வருகிறாள்.அவளுடைய வெற்றிவிழாயின் போது தன்னுடைய கணவர் காமேஸ்வருடன் வீற்றிருக்கிறாள்.அவளுடைய விருப்பத்தின்பேரில் அப்போது 'வசினி "என்னும் தேவதையின் தலைமையில் வாக்தேவிகள் அவளுடைய புகழை மந்திரங்களின் வாயிலாக பாடுகின்றனர்.அவ்வாறு பாடப்பட்டது லலிதா சஹஸ்ரநாமம்.
அம்பிகையின் பேரருளுக்கு பாத்திரமாக யாரெல்லாம் விரும்புகிறார்களோ அவர்களெல்லாம் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தை படிப்பது மூலம் மிக எளிதாக பெறலாம்.சக்தியின் ஆலயங்களில் இதை சொல்வது சிறந்த பலன் தரும்.
எந்த அம்பிகை கோவில்களிலும் இதை சொல்லலாம்.ஸ்ரீ சக்ரம் அல்லது அம்பிகை உருவப் படம்,ஸ்ரீ சக்ர மஹா மேரு ஆகியவற்றின் முன்னிலையில் லலிதா சஹஸ்ரநாமம் சொல்லலாம்.
செவ்வாய்,வெள்ளி ,நவமி ,சதுர்த்தசி,பெளர்ணமி போன்ற நாட்களில் கூறுவது சிறப்பானது.
இந்த சஹஸ்ரநாமத்தை ஸ்ரீ விநாயகரை தியானித்து ஸ்ரீ குருவை வேண்டி சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும்.
சங்கல்பம் என்பது நமது வேண்டுதலை நிறைவேற்றி தருமாறு அம்மனை வேண்டுதல் .
அர்ச்சனை செய்வதாக இருந்தால் ,அம்மன் படம் முன்பு ஒரு தாம்பாளத்தில் சிறு கிண்ணம் வைத்து
ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் தோன்றிய இடமான திருவாரூர் மாவட்ட பேரளம் அருகே உள்ள திருமீயச்சூர் லலிதாம்பிகை ஆலயத்திற்கு ஒரு முறை சென்று தரிசனம் செய்வது சிறப்பு ஆகும்.
அங்கே எல்லாம் உங்களால் செல்ல இயலாது என நீங்கள் எண்ணினால் ,இந்த லலிதாம்பிகை அம்பாள் படத்தை பார்த்து பிராத்தனை செய்யுங்கள்.நம் அன்பு குரலுக்கு ஓடோடி வருபவள் நம் அன்னை.
என்னை எழுத வைக்கும் என் அன்பு தாயான ஸ்ரீ லலிதாம்பிகையை வேண்டிக் கொண்டு ,இந்த பதிவை முடிக்கிறேன் .
அடுத்த பதிவில் சந்திப்போம்.
உங்கள் அன்பு தோழி ஈஸ்வரி

அதில் கட்டை விரல்,மோதிர விரலால் குங்குமம் எடுத்து நம:என்று முடியும் போது அம்மனின் பாதங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.இறுதியாக,பாராயணம் அல்லது அர்ச்சனை செய்து முடித்தவுடன்,நாம் செய்த பூஜையில் பிழை இருந்தால் மன்னித்தருளும்படி ,வேண்டி முடிக்க வேண்டும்.
அம்மனுக்கு இனிப்பு என்றால் பிரியம்.ஆதலால் சர்க்கரை பொங்கல்,பாயாசம்,சர்க்கரை கலந்த பால் நிவேதனம் செய்ய வேண்டும்.ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இதை பாராயணம் செய்து வந்தால் நம்முடைய முன்னேற்றம் நமக்கே தெரியும்.
அம்பிகையை பக்தியுடன் மனதார வழிபட்டால், நம் வாழ்வில் என்றென்றும் சந்தோஷம் நிலைத்து நிற்கும்.
ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் தோன்றிய இடமான திருவாரூர் மாவட்ட பேரளம் அருகே உள்ள திருமீயச்சூர் லலிதாம்பிகை ஆலயத்திற்கு ஒரு முறை சென்று தரிசனம் செய்வது சிறப்பு ஆகும்.
அங்கே எல்லாம் உங்களால் செல்ல இயலாது என நீங்கள் எண்ணினால் ,இந்த லலிதாம்பிகை அம்பாள் படத்தை பார்த்து பிராத்தனை செய்யுங்கள்.நம் அன்பு குரலுக்கு ஓடோடி வருபவள் நம் அன்னை.
என்னை எழுத வைக்கும் என் அன்பு தாயான ஸ்ரீ லலிதாம்பிகையை வேண்டிக் கொண்டு ,இந்த பதிவை முடிக்கிறேன் .
அடுத்த பதிவில் சந்திப்போம்.
உங்கள் அன்பு தோழி ஈஸ்வரி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக