துளசியின் மகிமை
சிறந்த பலனை கொடுக்கும்.
துளசி செடியை பெரும்பாலான வீடுகளில் வளர்த்து ,தினம்தோறும் ஒரு அகல் விளக்கு ஏற்றி வழிபட்டு வருகிறார்கள் .வெள்ளிக் கிழமைகளில் துளசிக்கு பூஜையும் செய்வார்கள்.துளசி செடியை வைத்து ,பூஜை செய்தால் நல்ல பலனை தரும்.துளசியின் பெருமை தெரிந்தவர்கள் அதை வணங்காமல் இருக்க மாட்டார்கள்.
எந்த வீட்டில் துளசி இருக்கிறதோ அங்கு மும்மூர்த்திகளுடன் அனைத்து தேவர்களும் வசிக்கிறார்கள். துளசி இருக்கும் வீட்டில் எந்த துஷ்ட சக்திகளும் நுழையாது.துளசி மாடம் வைத்து துளசியை பூசிப்பவர்கள் வீட்டில் திருமாலும்,லக்ஷ்மியும் நிரந்தரமாக வாசம் செய்வார்கள்.அங்கு செல்வ செழிக்கும்,மகிழ்ச்சிக்கும் குறைவிருக்காது.மனம்,வாக்கு,உடல் ஆகிய மூன்றாலும் செய்த பாவங்கள் தொலையும்.
கோவிலில் பெருமாளை மன நலத்திற்காக வேண்டுவர்.உடல் நலத்திற்காக துளசி தீர்த்தமும், துளசியும் பிரசாதமாக கொடுக்கப்படுகிறது.
சூரியனை கண்டதும் இருள் மறைவது போல் துளசி காற்றுப்பட்டாலே பாவங்களும் விலகி விடும்.துளசி இலையை தெய்வ பிரசாதமாக உட்கொண்டால் சகல பாவங்களும் தொலையும்.
சிவபெருமான் அபிஷேகப்பிரியர்.பெருமாள் அலங்காரப்பிரியர்.திருமாலுக்கு உகந்தது துளசி.திருமாலின் மார்பில் மாலையாக மகிழ்ந்து காட்சி தருபவள் துளசி தேவி."துளசி தீர்த்ததால் எனக்கு அபிஷேகம் செய்தால்,பல ஆயிரம் அமிர்த குடங்களால் அபிஷேகம் செய்ததாக ஆனந்தமடைவேன்"என்று மகா விஷ்ணுவே கூறியுள்ளார்.
துளசி செடி நுனியில் பிரம்மா ,அடியில் சிவபெருமான் ,மத்தியில் திருமால் வாசம் செய்வதாக ஐதீகம்.துளசி இலை பட்ட தண்ணீர் கங்கை நீருக்கு சமம் ஆகும்.திருமணமாகாத பெண்கள் வழிப்பட்டால் திருமணம் நடைபெறும்.
துளசி தேவியை தினமும் யார் பூஜை செய்கிறார்களோ ,அவர்கள் இந்த உலகில் விரும்பிய சுகங்களை அனுபவித்து ,முடிவில் மோட்சத்தை அடைக்கிறார்கள்.
துளசி பூஜை செய்து அருந்ததி தேவி வசிஷ்டரை மணந்தார் .ருக்மணி கிருஷ்ணனை மணவாளானாக அடையும் பேறு பெற்றாள்.கருட பகவான் விஷ்ணுவுக்கு வாகனமாக மாறியதும்,அவர் செய்த துளசி பூஜை மகிமை தான். சாவித்திரி துளசி பூஜை செய்து தீர்க்க சுமங்கலியாக வாழ்ந்தாள்.
விநாயகர் கஜாக சூரனை வென்று விக்னேஸ்வரன் என்ற பட்டம் பெற்றதும் துளசி பூஜை செய்ததால் தான்.
தாவர இனங்களில் துளசி மருத்துவ குணம் நிறைந்தது.தாவரங்கள் காற்றில் உள்ள கார்பன் டை ஆக்ஸைடை எடுத்து கொண்டு ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது நமக்கு தெரியும்.ஆனால் துளசி செடி மற்ற தாவரத்தை விட அதிகமாக ஆக்ஸிஜனை வெளியிடும் தன்மை கொண்டது.அதனால் தான் துளசியை ஒவ்வொரு வீடுகளிலும் வளர்த்து ,அதிகாலையில் எழுந்து, குளித்து விட்டு துளசியை வணங்க வேண்டும்.பிரம்ம மூர்த்தமான காலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் பூஜை செய்தால் நல்ல பலனை கொடுக்கும்.இந்த நேரத்தில் ஓசோன் அதிகமாக இருக்கும் நேரம்.அதை சுவாசிப்பதால் நம் உடல் ஆரோக்கியமாக வாழலாம்.
துளசி செடியுடன் , திருமாலையும் சேர்த்து பூஜை செய்வது
நன்றி வணக்கம்
Hi maam.. indha post paathathukaporm ippo dha poi our tulasi maadamu chediyum vangitu vandhom... naanga flats la irrukaradhunaala enga veetu thala vaasal munnadi vachuruka.. kalaiyila yelundadhu thusali paakalam nu.. aana thala vaasal munnadi vaika kudathunu soldrnga unmaya..thulasi vacha niraya kastam varumnu soldranga adhu unmayanu sollunga maam.. avunga sonnadula irrundhu romba manasuvedanaiya irruku...
பதிலளிநீக்குthulasi maadam vaithu valipaduvathu nallathu thaan.kasdamum santhosamum avaravar karma palanal varuthu.sedi pakkam suththam illaama pengal selvaaargal enru gooda solli irukkalam.mana niraivudan vaithal vaiyungal.illana vaikaatheenga.
பதிலளிநீக்கு