ஹாய் பிரண்ட்ஸ் ,எல்லோருக்கும் என் இனிய வணக்கங்கள் .
போன பதிவில் துளசியின் மகிமை என்ற தலைப்பில் நான் உங்களுடன் எனக்கு தெரிந்ததை பகிர்ந்து கொண்டேன் .இன்னிக்கு துளசியை எப்படி பூஜை செய்வது ?என்பதைப் பற்றி சொன்னால், துளசி செடி வைத்து இருப்பவர்களுக்கு பூஜை செய்ய வசதியாக இருக்கும் என்ற நல்ல எண்ணத்துடன் இதை எழுதுகிறேன்.என் அன்பு தோழி உமா விருப்பத்திற்கு இணங்க ,இங்கு சில மந்திரங்களை உங்கள் முன் வைக்கிறேன் .நானும் இந்த பூஜையை செய்வதால்தான் , அதன் பலனறிந்து சொல்கிறேன் .
துளசி தன்னிகர் இல்லாத பெண்.ஸ்ரீ மகா லக்ஷ்மியின் அவதாரமாக துளசி விளங்குவதுடன் ,பாம்பை மெத்தையாக கொண்டு துயிலும் எம் பெருமானின் மார்பில் மாலையாக என்றென்றும் தவழ்ந்து வலம் வருகிறாள்.
எம் பெருமானுக்கு இரண்டு பொருட்களில் தீராத காதல் உண்டு.ஒன்று கள்ளம் கபடு இல்லாத வெள்ளை உள்ளம் கொண்ட பக்தர்கள் மீது .ஒரு பூவை எடுத்து சமர்ப்பித்தாலும் நம்மை தேடி ஓடி வருபவர் எம் பெருமான் .லக்ஷ்மியை சொல்லவே வேண்டாம் .கருணையின் பிறப்பிடமே நம் தாய்.
மற்றொன்று நம் வீட்டு முற்றத்தில் வளர்ந்து தெய்வீக மனம் பரப்பும் துளசி மீது .
துளசி,சங்கு, சாளக் கிராமம் மூன்றும் ஒன்றாக வைத்து பூஜிப்பவர்களுக்கு முக்காலமும் உணரும் மகா ஞானியாகும் பாக்கியம் கிடைக்கும்.
முதலில் எந்த கடவுளை வணங்குவதாக இருந்தாலும் ,பூஜை தடங்கல் இன்றி நடக்க ,முழு முதல் கடவுளான விநாயகப் பெருமானை வணங்க வேண்டும் .வெற்றிலை மீது மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து "ஓம் விக்னேஸ்வரா நமஹ "என்று 3முறை சொல்லி ,மலர் போட்டு வணங்கவும்.அருகம் புல் போட்டு விநாயகரை வணங்கினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
துளசி மாடம் இல்லாதவர்கள் 12 அல்லது 16 செங்கற்களால் துளசி பீடம் அமைத்து ,அதன் முன்பு பெரிய அகல் தீபம் ஏற்றி வைக்க வேண்டும்.அடுத்து பீடத்தின் நடுவில் துளசி செடி வைத்து ,சுற்றிலும் 12 என்ற எண்ணிக்கையில் சந்தானம் குங்குமம் பொட்டு வைக்க வேண்டும்.
துளசி செடியில் துளசி தேவியையும், ஒரு நெல்லிக்காய் அல்லது நெல்லிக்குச்சியையும் வைத்து அதில் ,மகா விஷ்ணுவையும் ஆவாஹனம் செய்து பூஜை செய்வது விசேஷம் .நெல்லிக்குச்சி இல்லை என்றால் கிருஷ்ணன் படத்தையோ அல்லது சிலையையோ வைத்து பூஜை செய்யலாம்.
பொட்டு ஒவ்வொன்றின் மீதும் மலர்கள் வைத்து
பொட்டு ஒவ்வொன்றின் மீதும் மலர்கள் வைத்து
1]கேசவா
2]நாராயணா
3]மாதவா
4]கோவிந்தா
5]விஷ்ணு
6]மதுசூதனா
7]த்ரிவிக்ரமா
8]வாமனா
9]ஸ்ரீதரா
10]ஸ்ருஷிகேசா
11]பத்மநாபா
12]தாமோதரா என்று சொல்லி மனதார வணங்கி ,அத்துடன் ஸ்வாகதம் என்று 3 முறை கூறவும்.
நமக்கு என்ன வரம் வேண்டும் என்பதை சங்கல்பமாக கடவுளிடம் முறையிட வேண்டும்.கணவன் ,மனைவி இருவரும் சேர்ந்து துளசி பீடத்தின் முன்பாக கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து 16 நாமாவளிகளை கூறி ,குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
1]ஓம் ஸ்ரீம் பிருந்தா தேவ்யை நம
2]ஓம் விஸ்வ பூஜிதாயை நம
3]ஓம் விஷ்ணுப்ரியாயை நம
4]ஓம் தேவ மூலிகாயை நம
5]ஓம் கிருஷ்ண ப்ரியாயை நம
6]ஓம் செளபாக்ய நிலாயை நம
7]ஓம் புஷ்பசாராயை நம
8]ஓம் நந்தவன நாயகாயை நம
9]ஓம் விஸ்வ பாவணாயை
10]ஓம் யாக பூஜிதாயை நம
11]ஓம் விஷ்ணு கேசின்யை நம
12]ஓம் தான ப்ரதாயின்யை நம
13]ஓம் மகாலக்ஷ்மி வாசாயை நம
14]ஓம் சகல மாட கலாலங்கார்யை நம
15]ஓம் ஸ்ரீராம ப்ரியாயை நம
16]ஓம் ஸ்ரீ துளசீ தேவ்யை நம
துளசி பூஜை செய்வதால் மன மகிழ்ச்சி ,ஒற்றுமை,குடும்ப அமைதி ,லக்ஷ்மி கடாட்ஷம் ,வம்சம் தலைக்கும்.உடல் வலிமை ,மனோ தைரியம் உண்டாகும்.நீண்ட ஆயுள் ஆரோக்கியம் கிட்டும். துளசி இருக்கும் இடத்தில் துஷ்ட சக்திகளோ ,துர்மரணங்கள் கிட்ட நெருங்காது.
துளசிக்கு வைக்கும் நெய்வேதியத்தை தாம்பூலத்துடம் கொடுக்கும் போது துளசியுடன் கொடுத்தால் பூஜையின் பலன் அதிகமாகும் .
பிருந்தையான துளசி மகா விஷ்ணுவை மணந்து கொண்ட நாள் ஐப்பசி மாத சுக்ல பக்ஷ த்வாதசி திதி .
கார்த்திகை மாதம் துளசி பூஜையுடன் பகவானை துளசியால் அர்ச்சனை செய்தால் அவர்கள் நினைத்தது நிறைவேறும்.அவர்களின் எல்லா கோரிக்கைகளும் நிறைவேற பெறுவார்கள் என்று புராணம் கூறுகிறது .விஷ்ணுவே துளசி பூஜை செய்வதாக ஹரி வம்சம் சொல்கிறது .
துளசி பூஜை செய்து அனைவரும் பயன் பெறுங்கள்.எல்லா நலமும் பெற்று, என்றென்றும் அனைவரும் சந்தோசமாக வாழ நானும் துளசி தேவியையும்,பகவானையும் வேண்டுகிறேன் .
.இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள் .
அடுத்த அன்மீக தேடலில் உங்களை சந்திக்கிறேன்
நன்றி வணக்கம்.
துளசியம்மனின் தோற்றம் முதல் அம்பாளின் சரித்திரம் அறிய விரும்புகின்றேன் 9629567294
பதிலளிநீக்குஎன் வாட்ஸ் அப் ற்கு தாருங்கள் அம்மா