ஞாயிறு, 15 மே, 2016

27 நட்சத்திரங்களுக்கு உரிய தெய்வங்கள்

Image result for 27 நட்சத்திரங்களுக்கு உரிய தெய்வங்கள்அன்பார்ந்த நண்பர்களுக்கு , என்  அன்பு வணக்கங்கள் .

support அண்ட் subcribe tamilnattu samayal  in my  you  tube channel

ஜோதிடத்தில் 12 ராசிகள், 27 நட்சத்திரங்கள்இருக்கின்றன என நம் எல்லோருக்கும் தெரியும் .நாம் பிறக்கும் போது எந்த நட்சத்திரம் ஆதிக்கத்தில் உள்ளதோ அதுவே ஜென்ம நட்சத்திரம் ஆகும்.அந்த நட்சத்திரங்களுக்கு உரிய தெய்வங்களை அறிந்து வணங்கினால் பன்மடங்கு பலனைப்  பெறலாம்.

இப்பொழுது அவை என்ன ?என்பதைப் பற்றி பார்ப்போம்.

27 நட்சத்திரங்களுக்கு உரிய தெய்வங்கள்     

      1.    அஷ்வினி -----ஸ்ரீ சரஸ்வதி தேவி           2.      பரணி ---------ஸ்ரீ துர்கா தேவி [அஸ்ட புஜம் ]        3.  கார்த்திகை ---ஸ்ரீ சரஹணபவன் [முருக பெருமான் ]         4.   ரோகினி ------ஸ்ரீ கிருஷ்ணன் [விஷ்ணு பெருமான்          5.மிருகசீரிடம் --ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் [சிவ பெருமான்]             6.திருவாதிரை --ஸ்ரீ சிவ பெருமான்    7.புனர்பூசம் -----ஸ்ரீ ராமர் [விஷ்ணு பெருமான்]      8.பூசம் ----------ஸ்ரீ தட்சிணா மூர்த்தி [சிவ பெருமான்]      9.ஆயில்யம் ----ஸ்ரீ ஆதிசேஷன் [நாகம்மாள்]    10.மகம் ----------ஸ்ரீ சூர்ய  பகவான் [சூர்ய நாராயணர்]     11.பூரம் -----------ஸ்ரீ தட்சிணா  மூர்த்தி [சிவ பெருமான்]     12.உத்திரம்-------ஸ்ரீ மகா லக்ஷ்மி தேவி       13.ஹஸ்தம் ------ஸ்ரீ காயத்திரி தேவி       14.சித்திரை ------ஸ்ரீ சக்கரத்தாழ்வார்       15.சுவாதி ---------ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி       16.விசாகம்--------ஸ்ரீ முருக பெருமான்        17.அனுஷம் ------ஸ்ரீ லக்ஷ்மி நாராயணர்        18.கேட்டை -----ஸ்ரீ வராக பெருமான் [ஸ்ரீ ஹயக்கீரிவர்]       19.மூலம் ----------ஸ்ரீ ஆஞ்சநேயர்        20.பூராடம்--------ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் [சிவ  பெருமான் ]        21.உத்திராடம் --ஸ்ரீ விநாயக பெருமான்          22.திருகோணம் --ஸ்ரீ ஹயக்கீரிவர் [விஷ்ணு பெருமான்]         23.அவிட்டம் ------ஸ்ரீ அனந்த சயனப் பெருமான் [விஷ்ணு பெருமான்]        24.சதயம் ----------ஸ்ரீ மிருத்யுஞ்ஜேச்வரர் [சிவ பெருமான்]        25.பூரட்டாதி ------ஸ்ரீ ஏகபாதர் [சிவ பெருமான் ]        26.உத்திராட்டாதி ---ஸ்ரீ மகா ஈஸ்வரர் [சிவ  பெருமான்]        27.ரேவதி ----------ஸ்ரீ அரங்கநாதன் 



நன்றி வணக்கம்  
உங்கள் ஈஸ்வரி சரவணன்  






வெள்ளி, 13 மே, 2016

பிரதோஷ பூஜையின் போது அபிஷேகப் பொருட்களும் ,அதன் பலன்களும்



அன்பு தோழிகளே !
போன பதிவில் பிரதொஷத்தைப் பற்றி எழுதி இருந்தேன்.அதன் தொடர்ச்சியே இந்த பதிவில் இடம் பெறுகிறது.அனைத்து  உயிர்களையும் காத்து ரட்சிக்கும் நம் ஒப்பற்ற தந்தையின் வரலாறுகளை சொல்லிக் கொண்டே போகலாம் .அதற்கு அளவே கிடையாது. 



ஆன்மிகம் ஒரு பெறும் கடல் .அதைப் படிக்க படிக்க வந்துக் கொண்டே இருக்கும்.நாம் இவ்வுலகிற்கு வந்ததே நம் அம்மை ,அப்பன் அருளாலே தான்  .எனவே ,அம்மை ,அப்பன் நந்தியின் மீது அமர்ந்து இருக்கும் கோலத்தை கண்குளிர பார்த்து ,அவர்கள் அருள் என்றென்றும் நமக்கு கிடைக்க வேண்டுவோம்.



தோஷம் என்றால் குற்றம்.பிரதோஷம் என்றால் குற்றமற்றது.

பிரதோஷம் என பெயர் எப்படி வந்தது ?

சூரியனுக்கு இரு மனைவிகள் .அவர்கள் உஷா தேவி,பிரத்யுஷா .   


இரவும்,பகலும் சந்திக்கும் நேரம் உஷத் காலம் என்று பெயர் .இந்த வேளையின் அதி தேவதை உஷா தேவி .அதேபோல் ,பகலும் ,இரவும் சந்திக்கும் நேரம்  பிரத்யுஷத் காலம்.இதன் அதிதேவதை பிரத்யுஷா .அவள் பெயரால் இது "பிரத்யுஷத் காலம் "எனப்பட்டது .பேச்சுவழக்கில் 'பிரதோஷக்  காலம் 'என சொல்லப்படுகிறது,



பிரதோஷ பூஜையின் போது  அபிஷேகப் பொருட்களும் ,அதன் பலன்களும் 

பால் -----நோய் தீரும் ,நீண்ட ஆயுள் 

தயிர் ----பல வளங்கள் கிடைக்கும் 

தேன் ---இனிய சாரீரம் 

பழங்கள் ----விளைச்சல் பெருகும் 

பஞ்சாமிர்தம் ----செல்வம் சேரும் 

நெய்  ---முக்தி பெறு 

இளநீர் ---நல்ல மக்கட்பேறு கிடைக்கும் 


சர்க்கரை ----எதிர்ப்புகள் மறையும் 

எண்ணெய் ----சுகவாழ்வு 

சந்தனம் ----சிறப்பான சக்திகள் 

மலர்கள் ----தெய்வதரிசனம் 

பிரதோஷம் வரும் கிழமையும்,பலன்களும்  

ஞாயிறு ----அனைத்து  நலன்களும் கிடைக்கும்


திங்கள்----சிவசக்தி அருளை பெறலாம் 


செவ்வாய் ----பசி,வறுமை ,நோய் அகலும் 


புதன்   ----நன்மக்கட் பேறு  அளிக்கும் 


வியாழன்---திருமணத் தடை நீங்கும் 


வெள்ளி ---எதிரிகளை அழிக்கும் 


சனி ----அனைத்து பாவங்கள் போகும் 



கார்த்திகை மாத சனிக்கிழமை பிரதோஷம் மிகவும் சிறப்பானது.முதல்முதலில் பிரதோஷம் வந்த நாள் சனிக்கிழமை .அன்று தேவர்களும்,மூம் மூர்த்திகளும் உண்ணா நிலையை கடைபிடித்து சிவனருள் பெற்றார்கள்.தொடர்ந்து 12 பிரதோஷங்கள் கடைப்பிடித்தால் இறைவனருள் கிட்டும்.நம் பாவங்கள் தொலையும்.நந்தி தேவர் ,நம் கோரிக்கைகளை இறைவனிடம் கொண்டு போய் சேர்ப்பார் என்பது  திண்ணம் .

பிரதோஷம் 5 வகைப்படும்.


நித்திய  பிரதோஷம் -----தினமும் பிரதோஷக் காலத்தில் வழிபடுவது 


பட்ச பிரதோஷம்  ----சுக்லபட்ச சதுர்த்தியின் மாலை நேரம் 

மாத பிரதோஷம்  -----கிருஷ்ணபட்ச திரியோதசி தினத்தில் வருவது 

பிரளய பிரதோஷம் ----பிரளய காலத்தில் ,எல்லாம் சிவனிடம் ஒடுங்குவது 

மகாப் பிரதோஷம்  -----சனிக்கிழமை தினம் கிருஷ்ண பக்ஷ  திரயோதசி 

சனிக் கிழமையில் வரும் பிரதோஷம் சிறப்பானது.அன்று  சிவன் ஆலத்திற்கு சென்று பிரதோஷ வழிபாடு செய்தால் 5 வருடம் ஆலயம் சென்ற பலன் கிட்டும்.

எனக்கு தெரிந்தவற்றை பகிர்ந்து கொண்ட மகிழ்ச்சியில் என் பதிவை முடிக்கிறேன்.

நன்றி வணக்கம் 

அடுத்த பதிவில் சந்திப்போம் .
ஈஸ்வரி 










புதன், 11 மே, 2016

பிரதோஷ வழிபாடு

அன்பார்ந்த நண்பர்களுக்கும் ,தோழிகளுக்கும் என் அன்பு வணக்கங்கள்.

இன்று நான் , நம் அனைவருக்கும் தந்தையாக இருக்கும் சிவபெருமானின் பெருமைகளை உணர்த்தும் பிரதோஷத்தின் வழிபாடு ,கதை ,பயன்களை  உங்கள் முன் வைக்கிறேன் .
இந்த பதிவானது ,ஆன்மீக தேடலில் மூழ்கி இருக்கும் என் அன்பு தோழிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

பிரதோஷ வழிபாடு 

மாதம் தோறும் பிரதோஷம் இரண்டு முறை வரும்.பிரதான தோஷங்களை நீக்குவதே பிரதோஷ த்தின் முக்கிய சிறப்பாகும்.பிரதோஷ காலம் என்பது மதியம் 4.30 மணி முதல் மாலை 6 மணி வரை ஆகும்.





யாருடைய ஜாதகமாக இருந்தாலும் அதில் குறைந்தது 4 தோஷமாவது  இருக்கும்.எத்தனை தோஷங்கள் இருந்தாலும் பிரதோஷ தினத்தில் சிவனை வழிபட நல்ல பலன் கிடைக்கும்.


பிரதோஷ தினத்தில் சிவனை மனிதர்கள் மட்டுமில்லாமல் முப்பத்து முக்கோடி தேவர்களும்,பிரம்மா ,விஷ்ணு ஆகியோர்கள் வழிபடுகிறார்கள்.அந்த நேரத்தில் சிவனும் உலக நலத்திற்காக வழிபாட்டில் ஈடுபடுவார் என்பது ஐதீகம் .எனவே ,அனைவரும் வழிபாடும் நேரத்தில் நாமும் வழிபாடு செய்தால் ஈசன் மனம் குளிர்ந்து ,நமக்கு எல்லா நலன்களையும் வழங்குவார் என்று ஜோதிட நூல் கூறுகிறது.


வாகனத்திற்கு முதல் மரியாதை தருவது இந்த பிரதோஷ வழிபாடு.சிவனின்  வாகனமான நந்தி பகவான் 4 வேதங்களையும்,64 கலைகளையும் படித்து முடித்தவர்.சிவனின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கக்கூடியவர். .நந்தீஸ்வரர் அனைத்தையும் கற்றிருந்தாலும் மிகவும் அடக்கமானவர் .சிவன் கோவிலில் அவர் அமர்ந்திருக்கும் தன்மையே  இதனை உணர்த்தும்.





பிரதோஷம் பிறந்த கதை 


தேவர்களும் அசுரர்களும் அடிக்கடி சண்டையிட்டு கொண்டிருந்தனர்.இதில் இரு தரப்புகளில் பலர்
இறந்தனர். ஆனால் அசுரர் தரப்பில் இறந்தவர்கள் மீண்டும் உயிர் பெற்று வந்தனர்.இதற்கு காரணம் அசுரர்களது குருவான சுக்கிராச்சாரியார் இவர்களுக்கு உபதேசம் செய்த மந்திரத்தால் தான் .


இதே போல் மரணமில்லா வாழ்வு பெற விரும்பிய தேவர்கள் ,பிரம்மாவிடம் சென்று முறையிட்டனர்.அவர் அவர்களை திருமாலிடம் அழைத்து சென்றார்.திருமால்,அவர்களிடம் "திருப்பாற்கடலை கடைந்து அதில் கிடைக்கும் அமிர்தத்தை உண்டால் மரணமின்றி  என்றும் இளமையாக வாழலாம் என்றார்.மேலும் தேவர்களாகிய நீங்கள் மிகவும் பலவீனமாக இருக்கிறீர்கள்?.எனவே,அசுரர்களுக்கு  அமிர்தத்தில் பங்கு தருவதாகக்  கூறி அழைத்து ,அவர்களைப்   பிறகு ஏமாற்றி விடலாம் என்றும் கூறினார்.


அசுரர்களிடம் தேவர்கள் உதவி கேட்க ,அசுரர்களும் அமிர்தம் கிடைத்தவுடன் ,தாங்களே எடுத்து கொள்ள வேண்டும் என நினைத்து ஒப்புக் கொண்டனர்.


ஒரு  தசமி திதியில் மந்திர மலையை மத்தாகவும்,வாசுகி என்ற பாம்பை கயிறாகவும் கொண்டு பாற்கடலை தேவர்களும் ,அசுரர்களும் கடைய தொடங்கினர்.
அசுரர்கள் தங்கள் அதிகப்பலம் கொண்டவர்கள் என்ற ஆணவத்தால் தேவர்கள் சொன்ன வால்பகுதியை பிடிக்காமல் பாம்பின் தலைப்பகுதியைப்  பிடித்தனர் .


அசுரர்கள் பாம்பின் தலைப்பகுதியையும் ,தேவர்கள் வால் பகுதியையும் பிடித்து கொள்ள பாற்கடலை கடைய ஆரம்பித்தனர்.தக்க பிடிமானம் இல்லாததால் "மந்திர கிரி"நிலை குலைந்து,பாற்கடலின் ஆடியில் மலை மூழ்க ஆரம்பித்தது.உடனே,திருமால் ஆமை வடிவம் எடுத்து [கூர்ம அவதாரம்]எடுத்து மலையின் கீழே சென்று அதனை தன் முதுகில் தாங்கி கொண்டார்.தசமி திதியில் பாற்கடலை கடைந்தால் ஒரு வேளை மட்டுமே உணவருந்தினர்.மறுநாள் ஏகாதசி  விரத தினம் என்பதால் எல்லோரும் சாப்பிடாமல் உபவாசம் இருந்து கடைந்தனர்.

நேரம் ஆக ஆக எல்லோரும் பசியோடும் ,களைப்போடும் இருந்தனர்.வாசு பாம்பானது வலி பொறுக்க முடியாமல் ,பெரும்மூச்சு விட,அந்த மூச்சின் விஷத்தன்மையினை தாங்க முடியாமல் அசுரர்கள் தவித்தனர்.கடல் கொந்தளித்தது.வெண்மையான கடல் கருப்பாக நிறம் மாறியது.தீடீரென்று கடலின் நடுவே புகையை கக்கியபடி பந்து போல் எழுந்தது.பாம்பும் விஷத்தை கக்கியது.கடலில் தோன்றிய ஆலமும் ,வாசுகி  பாம்பு கக்கிய காலமும் ஒன்று சேர்ந்து ஆலாலம் விஷமானது.


இதன் வெப்பத்தால் உலகமே பதிக்கப்பட்டது.விஷ்ணு நீல நிறமாக ஆனார்.தேவர்களும் ,அசுரர்களும் என்ன செய்வது? என்று தெரியாமல் கைலாயத்திலுள்ள சிவனை நாடினர்.அவர்களை  எந்த பக்கமும் போக விடாமல் விஷம் துரத்தியது.  நந்தி தேவரை சரணடைந்து ஈசன் தரிசனம் பெற உதவ வேண்டும் என்று வேண்டினர் .நந்தி தேவரின் உதவியால் சிவனை தரிசித்தனர்.அதனால் தான் பிரதோஷ  காலத்தில் சிவன் கோவில்களில்   நந்திக்கு பூஜை முதலில் செய்கிறார்கள் .பிறகுதான் சிவபெருமானுக்கு பூஜைகள் நடைபெறும்.



சிவபெருமான் சுந்தரரை அழைத்து ,அந்த விஷத்தை இந்த இடத்திற்கு  கொண்டு வரும்படி கட்டளை இட்டார்.நாவல்பழம் போல்  விஷத்தைத் திரட்டி தந்தார் சுந்தரர்.சிவபெருமாள் தேவர்களைக் காக்கும் பொருட்டு ,விஷத்தை  அமுதம் போல் உண்டருளினார்.

இதைப் பார்த்து கொண்டிருந்த உலகத்துக்கே தாயான  ஈஸ்வரி  விஷம் உள்ளே செல்லாதவாறு ஈசனின் கழுத்தைப் பிடித்து ,உள்ளிருக்கும் உயிர்கள் அழிந்து விடாமலும்,வெளியில் உமிழ்தால் வெளியில் உள்ள உயிர்கள் அழியாமலும் காத்தாள் .ஈசனின் தொண்டையில் சென்ற விஷமானது அமுதமாக மாறியது.அதனால்தான் ஈஸ்வரனுக்கு நீலக்கண்டன் என்ற பெயர் வந்தது.

பிறகு பாற்கடலை கடைய சிவன் உத்தரவிட்டார்.பாற்கடலை கடந்தனர்.முதலில் லக்ஷ்மி தேவி தோன்றினாள் .சங்கும் தோன்றியது.இரண்டையும் விஷ்ணு தன் இடப்புறத்தில் சேர்த்து கொண்டார்.




காமதேனுவை தேவர்களின் தலைவனான இந்திரன் பெற்று கொண்டான்.அதன்பின் தோன்றிய ஐராவதம்,கற்பக விருட்சம் ,சிந்தாமணி ,சூடாமணி ,உச்சை  சரவம் என்ற குதிரை வெளிவந்தன.இவற்றையெல்லாம் தேவர்கள் ஏற்று கொண்டனர்.

ஏகாதசி அன்று  இரவு தூங்காமல் பாற்கடலை கடைவதில் அனைவரும் முனைந்தனர்.மறுநாள் காலை ,துவாதசியன்று அதிகாலை அமிர்தம் தோன்றியது.அமிர்தத்தை அசுரர்களுக்கு கொடுக்கக் கூடாது என திருமால் சில தந்திரங்களை செய்து ,தேவர்களுக்கு மட்டும அமிர்தம் கிடைக்குமாறு செய்தார் .

அமிர்தத்தை உண்ட தேவர்கள் புதிய வலிமையும்,பொலிவும் பெற்றனர்.அவர்களை எதிர்க்க முடியாத அசுரர்கள் ஓடி ஒளிந்து கொண்டனர்.அமிர்தம் உண்ட மகிழ்ச்சி ,அசுரர்களை வென்ற களிப்பு தேவர்களுக்கு போதை ஏற்றியது .எனவே,அவர்கள் அமிர்தத்தை பெற காரணமாக இருந்த பரமேஸ்வரனை அன்று முழுவதும் மறந்திருந்தனர்.

மறுநாள் "திரியோதசி "அன்று அவர்கள் செய்த தவறை உணர்ந்து வெட்கம் கொண்டு உடனடியாக தங்கள் செய்கைக்கு வருத்தம் தெரிவித்து ஈஸ்வரனிடம் மன்னிப்பு கேட்டனர்.கருணைக் கடலான ஈசன் அவர்களை மன்னித்தார்.அவர்களுடைய மகிழ்ச்சியை பொருட்டு ,நந்தி தேவர் இரண்டு கொம்புகளுக்கு நடுவே ஆனந்த தாண்டவம் ஆடினார்.



பிரதோஷ தினத்தன்று இதன் காரணமாகத்தான் ,நந்தி தேவன் இரண்டு கொம்புகளுக்கு இடையே இறைவனைப் பார்க்க வேண்டும் என்பது  ஐதீகம்.நந்தி தேவனை குனிந்து வணங்குவதையே மக்கள் தவறாக எண்ணி அவர் காதில் போய் தங்கள் கோரிக்கைகளை சொல்கிறார்கள்.இது தவறானது.


பிரதோஷ வேளையில் நந்தி பகவானின் இரண்டு கொம்புகளின் நடு பகுதியை "சிவாய நம "என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை கூறி வணங்கிட நமது வறுமை ,கடன்,நோய் ,மரணபயம் நீங்கி அனைத்து செல்வமும் கிட்டும்.

சிவபெருமானை தரிசிக்க செல்பவர்கள் முதலில் நந்தி பகவானை வணங்கிவிட்டு தான் செல்ல வேண்டும்.நந்தி பகவானின் அனுமதி பெற்று சிவனை அவருடைய கொம்புகளுக்கு இடையே உள்ள வழியாக பார்த்து விட்டுதான் செல்ல வேண்டும்.

பிரதோஷ காலத்தில் எப்படி வலம்  வர வேண்டும்?


சாதாரணமாக ,சுவாமியை  வலம் வருவதை போல் பிரதோஷ த்தினத்தன்று  வலம்  வரக்கூடாது.மாறாக,சோம சூட்ச பிரதட்சண  முறையில் தான் வலம்  வரவேண்டும்.



அதாவது,நந்தி பெருமானிடமிருந்து புறப்பட்டு இடப்பக்கம் சென்று சண்டிகேஸ்வரை வணங்கி,வந்த வழியாக திரும்பி ,நந்தி தேவரை வணங்கி ,வலப்புறமாக கோமுகி வரை சென்று மீண்டும் வந்த வழியாக திரும்பி நந்தி தேவரின் இரு கொம்புகளுக்கு இடையே சிவபெருமானை வணங்க வேண்டும்.இம்முறைக்கு சோம சூட்ச பிரதட்சணம் என்று பெயர் .



பாற்கடலிலிருந்து வந்த விஷமானது அசுரர்களையும் ,தேவர்களையும் விரட்டிய போது அவர்கள் பயந்து ஓடியது  சோம சூட்ச பிரதட்சணம் முறையில்தான் .அதை வைத்தே இம்முறையில் சுவாமியை வலம் வர வேண்டும்.

முதல் முதலில் சிவன்  விஷத்தை உண்ட நாள் சனிக்கிழமை .அதனால் ,சனிக்கிழமை வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பு மிக்கது.

 பிரதோஷத்  தினத்தன்று மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை கோவிலுக்கு சென்று வழிபடுவது சிறந்த பலனை தரும்.

விரதம் இருப்பவர்கள் இந்நேரத்தில் ஆலயத்திற்கு சென்று பிரதோஷக்  கால பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்.நந்தி பகவான் சுலோகம் ,சிவன் பாடல்கள் பாடி வணங்குதல் வேண்டும்.பிறகு விரதத்தை முடித்து கொள்ள வேண்டும்.

பிரதோஷ வழிபாட்டின் பயன்கள் 

பிரதோஷ பூஜை செய்வதால் எடுத்த காரியங்கள் வெற்றி பெறும் .அறிவு வளரும்,நினைவாற்றல் பெருகும்.பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து பசுவின் கறந்த பாலை கொண்டு ஈசனுக்கும் , நந்திக்கும் அபிஷேகம் செய்து வில்வ இலை, சங்கு பூ வைத்து வழிபட பூர்வ ஜென்ம வினைகள்,பெண்களால் வந்த சாபம் நீங்கும் என விரதமாலை நூல் கூறுகிறது.


இந்த பதிவை உங்களுடன் பகிர்ந்து கொண்ட சந்தோஷத்துடன்  முடிக்கிறேன் .

என் பதிவைப் பற்றி உங்கள் கருத்துக்களை தெரிவித்தால் எனக்கு இன்னும் பல தலைப்புகளை எழுத ,ஒரு தூண்டுகோலாக அமையும்.

நன்றி வணக்கம் 


உங்கள் அன்பு தோழி 
ஈஸ்வரி 






















வியாழன், 5 மே, 2016

செல்வவளம் தரும் அட்சய திருதியை

அன்புள்ள தோழிகளுக்கும்,நண்பர்களுக்கும் என்  இனிய  வணக்கங்கள் .



வரவிருக்கும் அட்சய திருதியை கொண்டாடும் பொருட்டு அதைப் பற்றி எழுதினால் மிகவும் சிறப்பாக இருக்கும் என எழுதுகிறேன்
 சித்திரை மாதத்தில்  அமாவாசைக்கு பிறகு வரும் 3வது  திதி நாளே அட்சயதிருதியை எனப்படுகிறது .இந்நாள் திருமகளான லக்ஷ்மிக்கு உரிய நாளாகும் .


அட்சயம் என்றால் தேயாது ,குறையாது,வளர்தல் என்று பொருள் .இந்நாளில் வாங்கும்  எந்த பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிலைத்து இருக்கும் என்பது  நம்பிக்கை .எனவே, மக்கள் இந்நாளில் தங்கம் வாங்க விரும்புகிறார்கள் .வசதி இல்லாதவர்கள் அரிசி ,உப்பு,சர்க்கரை  வாங்கலாம் .



ஏழை,எளியவர்களுக்கு அன்னதானம் செய்வது,பிறருக்கு  செய்யும் எந்த  உதவியும் தர்ம தேவதையின் அருளை பெற்று, புண்ணியத்தை தரும்.


நாம் கொடுக்கும் தானம் அளவற்ற புண்ணியத்தை தரும்.ஏழைகளுக்கு உணவு ,உடை ,போர்வை கொடுத்து உதவுவது நல்லது .

எந்த தானம் செய்தால் என்ன பயன் ?

ஏழை மாணவர்கள் கல்விக்கு உதவுவதால் நம் வீட்டு குழந்தைகளின் கல்வி மேம்படும்.
ஆடைகள் தானம் செய்தால் நோய் நீங்கும்.
பழங்கள் தானம் செய்தால் உயர் பதவி கிடைக்கும்.
மோர்,பானகம் அளித்தால் கல்வி நன்கு வளரும்.
தானியங்கள் தானம் செய்தால் அகால மரணம் ஏற்படாது.
தயிர் சாதம் தானம் அளித்தால் பாவ விமோசனங்கள் ஏற்படும்.

முன்னோர்களுக்கு தர்பணம் செய்தால் வறுமை நீங்கும்.


ஸ்ரீ மகாலக்ஷ்மி விஷ்ணு  மார்பில் இடம் பிடித்ததும் இந்நாளில்தான்.ஸ்ரீ லக்ஷ்மியானவள் வைகுண்டத்தில் மகாலக்ஷ்மியாகவும்,பாற்கடலில் ஸ்ரீ லக்ஷ்மியாகவும்,இந்திரனிடம் சுவர்க்க லக்ஷ்மியாகவும்,அரசர்களிடம் ராஜ லக்ஷ்மியாகவும்,வீரர்களிடம் தைரியலக்ஷ்மியாகவும் ,குடும்பத்தில் கிரகலக்ஷ்மியாகவும் ,பசுக்களில் கோமாதாவாகவும்,யாகங்களில் தட்சிணையாகயும் ,தாமரையில் கமலையாகவும் ,அவிர்பாகம் அளிக்கும்போது ஸ்வாகா தேவியாகவும் விளங்குகிறாள் .இப்படி சகல யோகங்களுக்கும் ஆதாரமாக விளங்குகிறவள் லக்ஷ்மிதான்.

அன்னபூரணி காசியில் அட்சயபாத்திரம் பெற்று ,சிவபெருமானுக்கு உணவு அளித்ததும் அட்சய திருதியை அன்று தான்.எனவே இந்நாளில் சிவபெருமானின் மந்திரமான ''ஓம் நமச்சிவாய "என சொல்லி சிவனின் அருளை பெற வேண்டும்.



குசேலனின் வறுமை நீங்கி கண்ணப்பிரானின் அருளைப் பெற்றதும் ,ஆதி சங்கரர் ஏழை குடும்ப பெண்மணிக்கு ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் பாடி அந்த  குடும்பத்தின் தரித்திரத்தை நீக்கி ,வாழ்க்கை தரத்தை உயர்த்தியதும் அட்சயதிருதியை நாளில்தான்.

குபேரன் இந்நாளில் மகாலக்ஷ்மியை மனம் உருகி வணங்கி செல்வத்தை பெருக்குவதாக ஐதீகம் .ஆகையால் ,குபேர லக்ஷ்மி பூஜை செய்து செல்வத்தை அடையலாம் . 





மகாபாரத்தில் பாண்டவர்கள் தங்கள் உடைமைகளையும் ,செல்வங்களையும் இழந்து காட்டில் வாசம் செய்த போது ,உணவு வேண்டும் என தங்களை நாடி வரும் முனிவர்களுக்கு இல்லை என்று சொல்லக் கூடாது என சூரிய பகவானை வணங்கி ,திரோபதி அட்சய பாத்திரத்தை பெற்றாள் .அந்த நாளும் அட்சயதிருதியைதான் .

அவள் செய்த புண்ணியத்தால் பாண்டவர்களுக்கும்,கெளரவர்களுக்கும் நடந்த பாரத போரில் துரோபதி செய்த தர்மம் பாண்டவர்களின் தலையை காத்தது.இழந்த ராஜ்யத்தை திரும்ப பெற்றார்கள்.

மேற்கு வங்காளத்தில் ,அட்சய திருதியை நாள் அன்று விநாயகர் ,லக்ஷ்மியை வணங்கி புது கணக்கு தொடங்குகிறார்கள் .

வீட்டில் பூஜை அறையில் மாக்கோலமிட்டு ,அதன் மேல் மனைபலகை ஒன்றை வைக்க வேண்டும்.அதன்மீது வாழைஇலை இட்டு ,இலையின் நடுவில் கொஞ்சம் பச்சரிசியைப் பரப்பி வைக்க வேண்டும்.அதன்மேல் ஒரு செம்பில் நீர் நிரப்பி அதனுள் காசு,ஏலக்காய் ,துளசி போட்டு மாவிலை ,மஞ்சள் தடவிய தேங்காய் வைத்து  கலசமாக்க வேண்டும்.அதையே அம்பாளாக நினைத்து பூஜை செய்ய வேண்டும் .


சில வீடுகளில் கலசம் வைக்கும் பழக்கம் இல்லாமல் இருக்கும்.அவர்கள்  குத்துவிளக்கில் லக்ஷ்மியை ஆவாஹனம்  செய்து , பூ போட்டு  பூஜிக்கலாம்.

லக்ஷ்மி நாராயணன் படத்திற்கு பூ,பொட்டு வைத்து குத்து விளக்கை ஏற்றி ,மஞ்சள் பிள்ளையார் பிடித்து வாழைஇலையில் வைக்க வேண்டும்.

விஷ்ணு லக்ஷ்மி,சிவன் பார்வதி,குபேரன் துதியை சொல்லலாம்.குசேலன் கதையை படிப்பதும்,கேட்பதும் சிறந்தது.கனகதார ஸ்தோத்திரம் பாடுவது நல்லது.வறுமை வராமல் என்றென்றும் நம் இல்லத்தில் செல்வம் நிலைத்து நிற்கும்.

பூஜையில் பாயாசம் அல்லது சர்க்கரை  கலந்த பாலை நிவேதியமாக வைக்க வேண்டும்.

கலசத்திற்கு தூப தீபம் காட்டி வழிபடவேண்டும்.பூஜையின் நிறைவாக கலசத்தை வடக்கு பக்கமாக நகர்த்தி பூஜையை முடிக்க வேண்டும்.

கலச தேங்காய் ,பூஜையில் வைத்த அரிசி,மற்ற பொருட்களையும் வீட்டிற்கு  உபயோகித்து கொள்ளலாம்.

எனக்கு தேர்ந்த சுலபமான ஸ்லோகத்தை சொல்லி என்  பதிவை முடிக்கிறேன்.


 மகாலட்சுமி மந்திரம் 

ஓம் ஸ்ரீம் ,ஹ்ரீம் ,க்லீம் ,மகாலட்சுமி ,மகாலட்சுமி யேகி ,யேகி ,சர்வ செளபாகியமே தேகி ஸ்வாஹா 

இந்த மந்திரத்தை 108 முறை படித்தால் வறுமை நீங்கி ,செல்வம்  பெருகும்.தினமும் இதை சொல்லி வழிபட்டால் நம் இல்லம் தேடி லக்ஷ்மி வருவாள் .


அனைவருக்கும்  மகாலட்சுமி அருள் கிடைக்க  நான் அஷ்டலக்ஷ்மிகளையும் பிராத்திக்கிறேன் .

நன்றி வணக்கம் 

















செவ்வாய், 3 மே, 2016

கடவுளும்,தீபங்களும்

என்  அன்பு தோழிகள் அனைவருக்கும் என்  அன்பார்ந்த வணக்கங்கள் .



போன பதிவில் தீபத்தைப் பற்றி எழுதி இருந்தேன் .இந்த பதிவில் அதன் தொடர்ச்சியை எழுதுகிறேன்.என் பதிவைப் பார்த்து ,பயன் பெறுகிறார்கள் என்றால் அதுவே நான் கடவுளுக்கு செய்யும் சேவையாக நினைக்கிறேன்.





அகல் விளக்கு 

அகல் ,எண்ணெய் ,திரி ,சுடர் இவையெல்லாம் சேர்ந்ததே விளக்கு.நெய் விளக்கு ஏற்றும் இடத்தில் மகா லக்ஷ்மி குடியிருப்பாள்.

எந்த கடவுளுக்கு தீபம் ஏற்றினாலும் அகல் விளக்கில் தீபம் ஏற்றுவது சிறந்தது.அதற்கு காரணமும் உண்டு.அதாவது அகல் விளக்கு ஒரு ஏழை ஒருவனால் ஐம் பூதங்களைக் [மண்,நீர்,நெருப்பு,காற்று ,ஆகாயம்] கொண்டு செய்யப்படுகிறது.அவன் களிமண்ணில் நீரை ஊற்றி ,சூரிய ஒளியில் காய வைத்து ,காற்றின் உதவி கொண்டு நெருப்பில் இட்டு ஒரு அழகான அகல் விளக்கை செய்கிறான்.அகல் விளக்கில் தீபம் ஏற்றுவதையே அம்பாள் விரும்புகிறாள்.

இன்னுமொரு காரணம்,அகல் விளக்கை வாங்குவதால் அந்த ஏழைக் குடும்பமும் பிழைக்கிறது .நம்மை அறியாமல் ஒரு நல்ல செயல்களை செய்கிறோம்.இதுவும் புண்ணியக் கணக்கில் போய்  சேரும்.



எந்த கடவுளுக்கு எந்த எண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும்? 
  • கணபதி ----தேங்காய் எண்ணெய் 
  • முருகன்-----நெய் தீபம் 
  • நாராயணன் ----நல்லெண்ணெய் 
  • மகா லக்ஷ்மி ----நெய் 
  • அம்மன் ----5 கூட்டு எண்ணெய் 
  • குல தெய்வம் ---இலுப்பை எண்ணெய் 
5 கூட்டு எண்ணெய் எது ?என போன பதிவில் எழுதியுள்ளேன்.




அடுத்து ,எத்தனை தீபங்கள் ஆலயத்தில் ஏற்றுவது,எங்கே ஏற்றுவது ?என்பதைப் பற்றி பார்ப்போம்.

கணபதி---1 தீபம் [எலி முன்பாக தீபம் ஏற்ற வேண்டும்]
முருகன்---6தீபம் [மயில் முன்]
பெருமாள் ---5    [கருடாழ்வார் முன்]
மகா லக்ஷ்மி ---8 அகல் விளக்கு 
அம்மன் ---2 [வாசலில் ]
சிவன்--3 அல்லது 9 [நந்தி முன்பாக தீபம் ஏற்ற வேண்டும்]
பராசக்தி ---5வகை எண்ணெய்  
நாக அம்மன் ---4


ஆலயத்தில் ஏற்றும் அகல் விளக்கு புதியதாக இருக்க வேண்டும் .விளக்கு ஒளியை தருவதுடன் ,நம் உள்ளத்தில் இருக்கும் தீய எண்ணங்களை அகற்றி ,நல்ல நேர்மறை எண்ணங்களை தக்க வைக்கிறது .



நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஆலயங்களுக்கு சென்று ,விளக்கு ஏற்றுங்கள்.முடியாத நேரத்தில் வீட்டில் விளக்கு ஏற்றி வழிபடுங்கள் .

எங்கு ஏற்றினாலும் இந்த மந்திரத்தை சொல்லி ஏற்றுங்கள் .

சுபம் பவது கல்யாணீ ஆரோக்கியம் புத்ர சம்பதாம் 
மம துக்க வினாசாயை தீபலக்ஷ்மீர் நமோஸ்துதே!



இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்குமெனில் ,உங்கள் கருத்தை தெரிவித்தால் அது எனக்கு மேலும் எழுத தூண்டுகோளாக அமையும்.

வாழ்க வளமுடன் 
நன்றி வணக்கம் 

உங்கள் அன்பு தோழி
ஈஸ்வரி 























வளமான வாழ்வை தரும் தீபம்

வளமான வாழ்வை தரும் தீபம் 

அன்பார்ந்த தோழிகளுக்கு என்  இனிய வணக்கங்கள்.என் பதிவை படிக்கும் அன்பர்கள் அனைவருக்கும் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் .


நம் இந்து சமயத்தில் ,எல்லோர் வீட்டு பூஜையறைகளிலும் தீபம் ஏற்றும் வழக்கம் உள்ளது .தீபம் எப்படி இருளை விரட்டி ஒளியை நமக்கு தருகிறதோ அதுபோலத்தான் நம் மனதிலுள்ள தீய எண்ணங்களை விரட்டி நல்ல எண்ணங்களை தருகிறது .



நாம் ஒளியின்  மூலமாக இறைவனை காண்கிறோம் .அந்த ஒளிச்சுடர் தீபம் ஏற்றுவதால் கிடைக்கிறது.ஊருக்கு முன் விளக்கு ஏற்றின் உயர்ந்த குடியாகும் என்பது  பழமொழி .அதாவது விடியற்காலை சூரியன் உதயமாகும் முன் பெண்கள் எழுந்து குளித்து ,வாசல் தெளித்து கோலம் போட்டு ,பிரம்ம  முர்த்த வேளையான 4.30 முதல் 6 மணி வரை நம் பூஜையறையில் தீபம் ஏற்ற வேண்டும்.அந்த அதிகாலையில் தீபம் ஏற்றுவதால்  நாம் செய்யும் அனைத்து காரியங்களும்   நன்றாக அமையும் .ஆதலால் தான் குழந்தைகளை அந்த நேரத்தில் எழுந்து, படிக்க  சொல்கிறோம் .

இந்த அவசர உலகத்தில் அதுக்கு எல்லாம் நேரம் எங்கே  இருக்கிறது? என இதைப் படிக்கும் தோழிகளுக்கு எண்ணங்கள்  ஓடிக் கொண்டிருக்கும் .அதற்கும் ஒரு வழி  இருக்கிறது .மாலையில் நீங்கள் அலுவலகத்தில் இருந்து வந்தவுடன்,கை ,கால்களை கழுவி விட்டு ,பூஜையறைக்கு சென்று  உங்கள் கையால் தீபம் ஏற்றி உங்கள் இஷ்ட தெய்வங்களை மனதார வழிபட்டால் நமக்கு கடவுளின் அனுக்கிரகம் கிடைக்கும் .நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு செயல்களும் வெற்றியை தேடி தரும்.



மாலை சூரியன் மறைவதற்கு முன் 4.30 முதல் 6 வரை அல்லது கருங்கல் நேரமான 6.30 மணிக்கு தீபம் ஏற்றுவது நல்லது .4.30 --6.00 மணி பிரதோஷ காலமாகும்.சிவனுக்கு உகந்த காலமாக சொல்லப்படுகிறது.அக்னியின் வாயிலாக பகவானுக்கு அவிர்பாகம் அளிக்க செய்யும் யாகத்திற்கு இணையான பலனை தரக்கூடியது. பூஜையறையில்  இரு தீபங்களை ஏற்றி வழிபட வேண்டும்.



தீபம் ஏற்றும் எண்ணெய் 

தீபம் ஏற்றுவதற்கு ஏற்ற எண்ணெயை தேர்ந்தெடுப்பது முக்கியம் .

எந்த எண்ணெயில் விளக்கு ஏற்றினால் என்ன பயன்?

நெய் தீபம்  ஏற்றினால் சுகமும் ,சந்தோஷம் வரும்.

நல்லெண்ணெயில் தீபம் ஏற்றினால் , எல்லா பீடைகளும் தொலைந்து போகும்.

விளக்கெண்ணெய்  தீபம் ஏற்றினால் ,புகழ் கிடைக்கும்.

வேப்பெண்ணெய் ,நெய்,இலுப்பை எண்ணெய் இவை முன்றும் கலந்த எண்ணெய் கொண்டு தீபம் ஏற்றினால் செல்வம் சேரும் .

நெய் ,விளக்கெண்ணெய் ,வேப்பெண்ணெய் ,இலுப்பை எண்ணெய் ,தேங்காயெண்ணெய் போன்ற 5 வகை எண்ணெயில் தீபம் ஏற்றி,அம்மனை வழிபட்டால் தேவியின்  அருள் கிடைக்கும்.


கடலை எண்ணெய் ,பாமாயில் போன்ற எண்ணெய்களைப் பயன்படுத்தக் கூடாது .



எந்த திசையில் தீபம் ஏற்ற வேண்டும்?

கிழக்கு திசை   ----- துன்பம்  அகலும்,கிரகங்களின்  சோதனைகள் விலகும் .

மேற்கு திசை  -------கடன் தொல்லை ,சனி ,பீடை ,கிரக தோஷம்,பங்காளி பகை நீங்கும்.

வடக்கு திசை-----செல்வம் சேரும்,திருமணத் தடை ,கல்வி தடை நீங்கி சர்வ மங்களம் உண்டாகும்.

தெற்கு திசை -----ஒரு போதும் இந்த திசையில் தீபம் ஏற்றக் கூடாது .அபச குணம் உண்டாகும்.



தீபங்களை ஏற்ற எந்த திரியை பண்படுத்த வேண்டும்?

தாமரை தண்டு திரி -----முன் வினை கர்ம பாவங்கள் நீங்கும்.

பஞ்சு திரி -----தெய்வ குற்றம் ,பிதுர்களால் ஏற்பட்ட சாபம்,வம்சாவளிப் பிரச்சினை போகும் .

நல்ல பலனை பஞ்சுத்திரி கொடுக்கும் .

சிவப்பு வர்ண துணி  திரி ----திருமண தடை நீங்கும்.குழந்தை பிறக்கும் பேறு உண்டாகும்.

மஞ்சள் வர்ண துணி திரி ------வெற்றி கிடைக்கும் .தேவியின் பூரண அருள் கிடைக்கும் .தம்பதியர் ஒற்றுமை ஏற்படும் .காற்று சேட்டைகள் நீங்கி நலம் பெறவும் ,செய்வினை நீங்கவும் இந்த திரியால் விளக்கு ஏற்ற வேண்டும்.

வாழைத்தண்டு திரி ----குடும்ப அமைதி ,குழந்தை பேறு உண்டாகும் .முன்னோர்களால் ஏற்பட்ட சாபம் நீங்கும் .

வெள்ளெருக்கு திரி ----துர் ஆவிகளால் பாதிக்கப்பட்டவர்களை அத்துன்பத்திலிருந்து காப்பாற்றும்.

தினம்தோறும் தீபம் ஏற்றி வழிபட்டால்,நமக்கு எல்லா வளங்களும் கிடைக்கும் .அதுவும் முக்கியமாக அதிகாலையில் அம்பாளை வழிபடும் பக்தர்களுக்கு அம்பாள் குறைவில்லாத செல்வத்தையும்,அருளையும் கொடுப்பாள் .

நம் குழந்தைகள் கல்வியில் சிறந்தவராக திகழ்வர்.

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் நீங்கள் உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள் .

நாளை இன்னும் சில ஆன்மீகத்தகவலுடன் உங்களை சந்திக்கிறேன் .
நன்றி வணக்கம் 












வியாழன், 28 ஏப்ரல், 2016

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 


என்  ஆன்மீக தோழிகளுக்கு என்  இனிய வணக்கங்கள்.

அம்பிகையானவள்  பார்வதி,காமாட்ஷி ,மூகாம்பிகை ,காளிகாம்பாள் போன்ற பல உருவங்களில் இருந்து நமக்கு அருள்பாவிக்கிறாள்.அவள் எடுத்த வடிவங்களில் ராஜராஜேஸ்வரி எனப்படும் லலிதா  அவதாரமும் ஒன்று.அந்த வடிவத்திற்குரிய சுலோகம் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்.1000 மந்திரங்கள் கொண்ட தொகுப்பே லலிதா சஹஸ்ரநாமம் .இந்த 1000 மந்திரங்களும் லலிதாம்பிகைக்கு பிரியமானவை.



அம்பிகையின் புகழை சொல்லிக்கிட்டே போகலாம்.அம்பாளின் துதிகள் நிறைய உள்ளது.அந்த துதிகளில் முதலிடம் வகிப்பது ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் .இதை உபதேசித்தவர் ஹயக்ரீவர் .உபதேசம் பெற்றவர் அகஸ்திய முனிவர்.


நிறைய பேர்களுக்கு ஹயக்ரீவர் யார்? என்பது தெரியாமல் இருக்கும்.இவரைப் பற்றி நான் முன்பே  என் பதிவில் எழுதியிருக்கேன்.இருந்தாலும் அவரைப் பற்றி சுருக்கமாக சொல்கிறேன்


ஹயக்ரீவர் 

ஒரு சமயம் பிரம்ம தேவரிடம் ,அசுரன் ஒருவன் வேதங்களை கவர்ந்து  கொண்டு போன போது ,மகா விஷ்ணு ஹயக்ரீவராக குதிரை முகம் கொண்டவராக வந்து, அசுரனை கொன்று ,வேதங்களை பிரம்ம தேவர்க்கு மீட்டு கொடுத்தார்.






ஞானத்தின் வடிவான ஹயக்ரீவர் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தை உபதேசிக்க ,உபதேசம் பெற்ற அகஸ்தியரின் பெருமையை சொல்லி அளவிட முடியாது .



அகஸ்தியர் 

சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் திருமணம் நடந்த போது  இந்திரன்,பிரம்மன் முதலான தேவர்கள் அனைவரும் அங்கு கூடியதால் வடகோடி தாழ்ந்து தென்கோடி உயர்ந்தது .

அப்போது சிவன் அகஸ்தியரை தென்திசைக்கு அனுப்ப ,பூமி சமநிலை அடைந்தது.அந்த பக்கம் இருந்த அத்தனை பேருக்கும் சமமானவர் அகஸ்தியர் எனபது தானே அர்த்தம்!



பண்டாசுரன் என்னும் அசுரனை வதைப்பதற்கு அம்பிகை தோன்றி லலிதாவாக வருகிறாள்.அவளுடைய வெற்றிவிழாயின்  போது தன்னுடைய கணவர் காமேஸ்வருடன் வீற்றிருக்கிறாள்.அவளுடைய விருப்பத்தின்பேரில் அப்போது 'வசினி "என்னும் தேவதையின் தலைமையில் வாக்தேவிகள் அவளுடைய புகழை மந்திரங்களின் வாயிலாக பாடுகின்றனர்.அவ்வாறு பாடப்பட்டது லலிதா சஹஸ்ரநாமம்.


அம்பிகையின் பேரருளுக்கு  பாத்திரமாக யாரெல்லாம்  விரும்புகிறார்களோ அவர்களெல்லாம் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தை படிப்பது மூலம் மிக எளிதாக பெறலாம்.சக்தியின் ஆலயங்களில் இதை சொல்வது சிறந்த பலன் தரும்.


எந்த அம்பிகை கோவில்களிலும் இதை சொல்லலாம்.ஸ்ரீ சக்ரம் அல்லது அம்பிகை உருவப் படம்,ஸ்ரீ சக்ர மஹா மேரு ஆகியவற்றின் முன்னிலையில்  லலிதா சஹஸ்ரநாமம் சொல்லலாம்.


செவ்வாய்,வெள்ளி ,நவமி ,சதுர்த்தசி,பெளர்ணமி போன்ற நாட்களில் கூறுவது சிறப்பானது.

இந்த சஹஸ்ரநாமத்தை  ஸ்ரீ விநாயகரை தியானித்து ஸ்ரீ குருவை வேண்டி சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும்.





சங்கல்பம் என்பது நமது வேண்டுதலை நிறைவேற்றி தருமாறு அம்மனை வேண்டுதல் .

அர்ச்சனை செய்வதாக இருந்தால் ,அம்மன் படம் முன்பு ஒரு தாம்பாளத்தில் சிறு கிண்ணம் வைத்து


அதில் கட்டை விரல்,மோதிர விரலால் குங்குமம் எடுத்து நம:என்று முடியும் போது  அம்மனின் பாதங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.இறுதியாக,பாராயணம் அல்லது அர்ச்சனை செய்து முடித்தவுடன்,நாம் செய்த பூஜையில் பிழை  இருந்தால் மன்னித்தருளும்படி ,வேண்டி முடிக்க வேண்டும்.

அம்மனுக்கு இனிப்பு என்றால் பிரியம்.ஆதலால் சர்க்கரை பொங்கல்,பாயாசம்,சர்க்கரை கலந்த பால் நிவேதனம் செய்ய வேண்டும்.ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும்  இதை பாராயணம்  செய்து வந்தால்  நம்முடைய  முன்னேற்றம் நமக்கே தெரியும். 


அம்பிகையை பக்தியுடன் மனதார வழிபட்டால், நம் வாழ்வில் என்றென்றும் சந்தோஷம் நிலைத்து நிற்கும். 


  ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் தோன்றிய இடமான திருவாரூர் மாவட்ட  பேரளம்  அருகே உள்ள திருமீயச்சூர் லலிதாம்பிகை ஆலயத்திற்கு ஒரு முறை  சென்று தரிசனம் செய்வது சிறப்பு ஆகும்.

அங்கே எல்லாம் உங்களால் செல்ல இயலாது என நீங்கள் எண்ணினால் ,இந்த  லலிதாம்பிகை அம்பாள் படத்தை பார்த்து பிராத்தனை செய்யுங்கள்.நம் அன்பு குரலுக்கு ஓடோடி வருபவள் நம் அன்னை.

என்னை எழுத வைக்கும் என் அன்பு தாயான ஸ்ரீ லலிதாம்பிகையை வேண்டிக் கொண்டு ,இந்த பதிவை முடிக்கிறேன் .

அடுத்த பதிவில் சந்திப்போம்.


உங்கள் அன்பு தோழி ஈஸ்வரி