லக்ஷ்மி கடாட்சம் பெருக
என் அன்பு தோழிகளுக்கு இனிய காலை வணக்கம் .
எனக்கு தெரிந்த ,அறிந்த தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.இந்த பதிவை பகிர்ந்து கொள்வதே பகவான் எனக்கு அருளிய பாக்கியமாக கருதுகிறேன் .இன்னிக்கு வெள்ளிக் கிழமை .எல்லா நாளையும் விட வெள்ளிக்கிழமை என்றால் அது தனிச் சிறப்புதான் போங்கள் !
இன்னிக்கு செய்கின்ற குபேர லக்ஷ்மி பூஜைக்கு பலன் உண்டு என நான் நம்புவதால் ,தொடர்ந்து பூஜை பண்ணுகிறேன் .
லக்ஷ்மி அருள் நமக்கு கிடக்க என்ன செய்யலாம்?
- அதிகாலை 5 மணிக்கு பின்புற வாசலைத் திறந்து வைத்து அதன் பின்னரே முன்வாசலைத் திறக்க வேண்டும் .
- காலையில் விழித்தவுடன் பசுவையாவது ,தன் முகத்தை கண்ணாடி கொண்டு பார்த்தோ ,தன் வலது உள்ளங்கையையாவது முதலில் பார்க்க வேண்டும் .
- செவ்வாய் ,வெள்ளிக்கு 5 முகம் கொண்ட குத்து விளக்கு ஏற்றி திருமகளான லக்ஷ்மியை வழிபட வேண்டும் .
- வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமமும் ,தண்ணீரும் கொடுக்க வேண்டும் .அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பொருளும் ,சந்தோஷமும் கிடைக்கும் .
- ஒவ்வொரு பெளர்ணமி அன்றும் மாலை குளித்து ,சத்திய நாராயணரை துளசி ,செண்பக மலர் கொண்டு அர்ச்சித்து ,பால் ,பாயாசம் ,கல்கண்டு ,பழ வகைகள் வைத்து வணங்கிய பின்னரே இரவு உணவு உண்ண வேண்டும் .
அன்பு தோழி ஈஸ்வரி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக