புதன், 7 அக்டோபர், 2015

அன்னபூரணி

ஆன்மீக நண்பர்களுக்கு என் இனிய வணக்கங்கள் . ஆன்மீகக் கருத்துகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்சசி  அடைகிறேன் .


அன்னபூரணி என்றாலே நமக்கு எல்லாம் நினைவில் வருவது காசி மாநகரம் தான் . அங்கே தான் பார்வதி தேவியார் அன்னபூரணியாக இருந்து உணவு அளிக்கிறாள் .காசி நகரின் தலைமை கடவுள் அன்னபூரணி .


அன்னபூரணி கையில் தங்கக் கரண்டியும் ,உணவு பாத்திரத்தில் பால்  சோறும் கொண்டிருக்கிறாள் .தன்னை நாடி வருபவருக்கு வயிற்று பசியை போக்குவது மட்டுமில்லாமல் ஆன்ம பசியையும் தீர்த்து வைக்கிறாள்.


சிவபெருமானுக்கு அன்னம் அளித்து தோஷத்தை நீக்கியவள் .




ஒரு சமயம் சிவபெருமான்  பார்வதியிடம் ,உலகம்  மாயை .உணவு உட்பட எல்லாம் மாயை என்று கூறினார்,அதைக்கேட்ட பார்வதி அனைத்து பொருட்களிலும் இருப்பவளான பார்வதி கோபம் அடைந்தாள் .இவ்வுலக பொருட்களுக்குள் ஆற்றல் (சக்தி ) உண்டென்று நிரூபிக்க மறைந்தார் .தேவியின் மறைவு உலகத்தையே பதித்தது .எங்குமே உணவின்று எல்லோரும் பசியால் வாடினார்கள்.சிவனும் தன்  தட்டை எடுத்து பார்வதியிடம் ,உலக பொருட்கள் மாயையல்ல என புரிந்து கொண்டேன்.இதைக் கேட்டு தாய் உள்ளம் கொண்ட நம் அன்னை சிவபெருமானுக்கு உணவு அளித்தாள் .இது நம் புராணங்களில் சொல்லப்பட்டது.


சிவபெருமான் பிச்சை எடுத்ததற்கு மற்றொரு காரணமும் உண்டு .







ஒரு சமயம் படைக்கும் கடவுளான பிரம்மா ,தனக்கும் 5 தலை .சிவனுக்கும் 5 தலை .தானே !பெரியவன் என்ற ஆணவத்துடன் இருந்தார்  .சிவன் அவரது ஆணவத்தை அடக்க ,பிரம்மாவின் ஒரு தலையை கிள்ளி  ஏறிய முயன்ற போது ,அந்த கபாலம் கையில் ஓட்டி  கொண்டது. அந்த தோஷத்தை விலக்கவே ,அம்பாளிடம் சிவன் திருவோடு ஏந்தி அன்னம் யாசித்தார் .


உலக மக்களுக்கு மிகவும் இன்றியாமையாதது உணவு .அதை கொடுப்பதற்கு தயாராக இருக்கிறாள் நம் அன்னை ,தங்கு தடையில்லாமல் உணவு நமக்கு கிடைக்க ,அன்னையை நாள்தோறும் வணங்குவோம் .

நன்றி 
மீண்டும் சந்திப்போம்.

உங்கள் அன்பு தோழி 
ஈஸ்வரி 









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக