செவ்வாய், 13 அக்டோபர், 2015

நலம் தரும் நவராத்திரி

நலம் தரும் நவராத்திரி 


என்  அன்பார்ந்த நண்பர்களுக்கு என்  இனிய காலை வணக்கங்கள் . முதலில் ,எல்லோருக்கும் நவராத்திரி வாழ்த்துக்களை சொல்லி கொள்கிறேன்.


நாம் எல்லோரும் வாழ்க்கை என்னும் சக்கரத்தில் ஓடிக் கொண்டே இருக்கிறோம் .ஒரே பரப்பரப்பு .
இந்த மாதிரி சூழ்நிலையில் இருக்கும் போது இந்த சக்தியை கொடுக்குறது யாரு ?என்பதை எண்ணி பார்க்க வேண்டும் .நமக்கு பின்னால் ஏதோ ஒரு சக்தி நம்மை இயக்குகிட்டே இருக்கு .அந்த சக்தி உங்க இஷ்ட தெய்வம் ,குல தெய்வம் யாராகக்  கூட இருக்கலாம் . கடவுளுக்காக ஒரு நிமிடம் ஒதுக்கினாலே, நம்மை தேடி, நம் தேவைகளை நிறைவேற்ற ஓடி வருவார்கள் .
நவரத்திரியில் என்ன சிறப்பு? என்றால் மூன்று  தேவியரையும் வணங்குகிறது தான். நமக்கு ஒன்று வேண்டும்  என்றால் நாம்  முதலில் யாருகிட்ட கேட்போம் ?சந்தேகமே இல்லை .அம்மாக்கிட்டே தான் .நமக்கு என்ன வேண்டும் என்பதை  ,அகிலத்தை ஆளும் ஜெகன் மாதா பார்த்து பார்த்து கொடுக்கககூடியவள் .எல்லா உயிர்களையும் காத்து ரட்சிப்பவள் ஆதி பராசக்தி.



நவம் என்றால் ஒன்பது. நவராத்திரி  என்றால் ஒன்பது நாள்  தேவியை இரவில் வழிபடுவது .இது பெண்களுக்கே உரிய திருநாள் ஆகும் .  முதல் நாள் துர்கைக்கும் ,அடுத்த 3 நாட்கள் லக்ஷ்மிக்கும் ,அடுத்த 3 நாட்கள் சரஸ்வதிக்கும் வணங்கக்கூடிய நாட்கள் ஆகும் .வீரம் ,செல்வம் ,ஞானம் 3 தேவியரை வணங்குவதால் நமக்கு  கிடைக்கும் .

நவராத்தியில்  பகல்  நேரம் சிவனையும்,இரவில் சக்திதேவியை பூஜிக்க வேண்டும்.தேவியை இரவில் தேவர்கள் வழிபாடு செய்வதால் தேவியை இரவில் வழிபடுதல் வேண்டும்.

புராணங்களில் நவராத்திரி :

வால்மீகி இராமாயணத்தில் புரட்டாசியில் வரும் தசமி (விஜய தசமி) அன்று இராமன், இராவணனுடன் போர் செய்ய உகந்த நாள் என்று அன்று போருக்கு புறப்பட்டதாக இருக்கிறது.

பாண்டவர்கள் அஞ்ஞானவாசம் முடிந்து அர்ச்சுனன்தான் ஒரு ஆண்டு காலமாக கட்டி வைத்திருந்த ஆயுதங்களை எல்லாம் விஜய தசமி அன்று மீண்டும் எடுத்து உயிர்ப்பித்துகொண்டான்.

நவராத்திரி உருவான கதை
ரம்பன் என்பவனுக்கும் எருமை உருவம் கொண்ட அரக்கிக்கும் பிறந்தவன்தான் மகிஷன். அதனால்தான் மனிதஉடலும் எருமை தலையுடன் தோன்றினான். மகிஷன், பிரம்மனை நினைத்து மேருமலையில் பதினாயிரம் ஆண்டுகள் தவம் செய்து, “தனக்கு யாராலும் மரணம் நேரக்கூடாது, அப்படியே நேர்ந்தால் அது பெண்ணால்தான் இருக்கவேண்டும்” என்ற வரத்தை பெற்றான். பெண்கள் பூ போல் இருப்பதால் அவர்களால் இரும்பை விட வலிமையான தன்னை கொன்று விட முடியாது என்று மகிஷன் நினைத்ததால் இப்படி ஒரு வரத்தை பெற்றான்.

நினைப்புதான் பிழப்பை கெடுக்கும் என்ற சொல்வார்களே அது, மகிஷனுக்கு பொருத்தமாகிவிட்டது. தேவலோகத்தையே கைப்பற்ற நினைத்தான். இதனால் தேவர்கள் பயந்து மகாவிஷ்ணுவிடம் உதவி கேட்டார்கள்.

மகாவிஷ்ணு தேவர்களுக்காக உதவி செய்ய மகிஷனிடம் போருக்கு சென்றார். ஆனால் மகிஷனை விஷ்ணுபகவானால் வீழ்த்த முடியவில்லை. எதனால் மகிஷனை அழிக்கமுடியவில்லை என்று அறிந்தபோது, பெண்ணால்தான் தமக்கு மரணம் வரவேண்டும் என்ற வரத்தை பிரம்மனிடம் பெற்றால்தான் தன்னால் மகிஷனை அழிக்கமுடியவில்லை என்பதை உணர்ந்து, விஷ்ணுபகவான் சிவனிடம் முறையிட, சிவன் தன் சக்தியால் “சந்தியாதேவி” என்ற சக்தியை உருவாக்கினார்.அந்த சக்தியின் கண்கள் கறுப்பு. சிகப்பு, வெண்மை என்ற நிறத்தில் இருந்தது 

“போருக்கு வா” என்று மகிஷனை அழைத்தால் நிச்சயம் அவன் வரமாட்டான். உஷாராகிவிடுவான். அதனால் மகிஷனே தன்னிடம் போர் செய்ய வர வேண்டும் என்ற எண்ணத்தில் சந்தியாதேவி மகிஷனின் பார்வையில் விழும்படி நடந்து சென்றாள். சக்தியின் அழகில் மயங்கிய மகிஷன், சக்தியை திருமணம் செய்ய தூது விட்டான். இதை கேட்ட சந்தியாதேவி, “தன்னை யார் போர் செய்து வீழ்த்துகிறார்களோ அவரைதான் நான் திருமணம் செய்வேன்” என்று மகிஷனின் தூதுவனிடம் சொல்லி அனுப்பினாள்.

இதனால் மகிஷன் தன் வீரர்களை தேவியிடம் போருக்கு அனுப்பினார். ஆனால் தேவியிடம் போர் செய்தவர்கள் உயிருடன் திரும்பாததை கண்ட மகிஷன், கடைசியாக அவனே தேவியிடம் யுத்தத்திற்கு வந்தான்.
தேவி, மகிஷனை பலமாக போராடி அவனுடைய எருமை தலையை தன் சக்கரத்தால் வெட்டி வீழ்த்தினாள். மகிஷன் மாண்டான். இதை கண்ட தேவர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தார்கள். மகிஷனிடம் போராடி போர் செய்து தேவலோகத்தையும், பூலோகத்தையும் காப்பாற்றியதால் “மகிஷாசுரமர்த்தினி” என்று சக்திதேவியை போற்றினார்கள். ஒன்பது நாள் போர் செய்து பத்தாவது நாள் தேவி வெற்றி பெற்றதால் விஜயதசமி உருவானது.



கொலுவில்  பொம்மைகள் வைக்கும் வழக்கம் உருவான சம்பவம்.



தான் உண்டு தன் நாடு உண்டு என்று இருந்த சுரதா என்ற அரசரிடம் எதிரிகள் போர் செய்ய வந்தார்கள். அவர்களிடம் போர் புரிந்து ஜெயிப்பது என்பது ஆகாத காரியம். அத்தனை வலிமை தன்னிடமும், தன் நாட்டிடமும் இல்லை என்பதை உணர்ந்த அரசர், தன் குருவான சுமதாவிடம் ஆலோசனை கேட்டார்.

“நீ காளியை வணங்கினால் எதிரிகள் காலியாகி விடுவார்கள்.” என்றார் குருதேவர்.தண்ணீரையும், மணலையும் லிங்கமாக செய்து அம்பிகை வழிப்பட்டது போல் தானும் காளிதேவியை மண்ணால் சிலைசெய்து வழிப்படவேண்டும் என்ற விருப்பத்தில் மணலால் அன்னையின் உருவத்தை செய்துவழிப்பட்டார் மன்னர் சுரதா.

காளிதேவி, அரசரின் தவத்தை ஏற்று, மன்னருக்கு எதிரிகளை வெல்லும் சக்தியை அருளினாள். அத்துடன் “பஞ்சபூதங்களில் ஒன்றான மணலால் என்னை பூஜித்ததால், உனக்கு சகல நலங்களும், வளங்களும் கிடைக்கும்.” என்ற ஆசி வழங்கினாள் அன்னை. இதன் பிறகுதான் கொலுவில் மண்ணால் உருவாகும் பொம்மைகள் இடம் பெற்றது.



மகிஷாசுரனை சம்ஹாரம் செய்ய அம்மன் 9 நாள் கொலுவிருந்து 10ம் நாள் மகிஷாசுரனை சம்ஹாரம் செய்து மகிஷாசுரமர்த்தனியானாள் என்றும் கூறப்படுகிறது. 9 நாட்கள் அம்மன் ஊசி மேல் தவம் நின்று தவம் புரிந்தாள். இதனால் நவராத்திரி தினமான 9 நாட்களும் ஊசியால் துணிகளை தைப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

விஜயதசமியையொட்டி வீடுகள் மாவிலை தோரணங்கள் கட்டி அலங்கரிக்கப்படும்.
சரஸ்வதி பூஜை தினத்தோடு நவராத்திரி விழா நிறைவடைந்து விடுவதான காரணத்தால் விஜயதசமி தினத்தன்று அம்மனுக்கு சுண்டல் நிவேதனம் கிடையாது.
காலையிலேயே வடை, பாயாசம், பலகாரங்களுடன் அம்மனுக்கு நிவேதனம் செய்யப்படும்.
இரவு கொலுவில் வைக்கப்பட்டிருந்த பொம்மைகள் யை படுக்கவைக்கப்பட்டு மறுநாள் கொலு பொம்மைகள் எடுத்து வைக்கப்படும்.

நவராத்திரி சமயத்தில் சுமங்கலிகளை வீட்டிற்கு அழைக்க வேண்டும், அவர்களை அன்போடு அழைத்து, வஸ்திரம் (புடவை அல்லது சட்டை பிட்), குங்குமம், சீப்பு, சிமிழ், கண்ணாடி, மஞ்சள் கிழங்கு, வெற்றிலை பாக்கு, தக்ஷணை ஆகியவற்றோடு வடை, பாயஸம் அளித்து, மகிழ்வித்தால் மிகப் பெரும் பாக்கியம் கிட்டும்.நவராத்திரி சமயத்தில் ஸ்ரீ சண்டி யாகம் செய்வது மிகப் பெரும் பேறு அளிக்கக் கூடியது. மார்க்கண்டேய புராணம் என்னும் புராணத்தின் மையப்பகுதியாக அமைந்திருக்கக் கூடிய துர்கா சப்த சதீ என்னும் 700 ஸ்லோகங்கள் முழுக்க முழுக்க அம்பிகையின் லீலைகளைச் சொல்லக் கூடியவை. 


  • அம்பிகைக்குரிய காலமாகிய நவராத்திரியில் அம்பிகைக்குகந்த ஸ்ரீ சண்டி ஹோமம் செய்வதால் கிடைக்கும் பலன்கள் :
  • 1. ஏழ்மை வராது
  • 2. அன்பு கிடைக்கும்
  • 3. எதிரிகள், இயற்கையால் ஆபத்து உண்டாகாது
  • 4. ஸுவாஸினி, பசு, ரிஷி, குரு, தேவதைகளால் உண்டான சாபம் நீங்கும்
  • 5. விவசாயத்தில் நற்பலன் கிட்டும்
  • 6. கல்வி ஞானம் பெருகும்
  • 7. உத்யோக உயர்வு
  • 8. திருமணமாகாதவர்களும் நல்ல இல்லறம் அமையும்.
  • 9. மன அமைதி கிடைக்கும்.
  • 10. தேக ஆரோக்கியம் தேவி வழிபாடும் ,தேவி மகாத்மியம் படிப்பது அளவற்ற நன்மை தரும் .700 மந்திரம் கொண்ட ஸ்ரீ சப்தசதி பாராயணம் நன்மைகளை தரும் .மறுமையில் மோட்சத்திற்கு வழிகாட்டும் .
  • தேவியின் துதிகளை ,9 நாட்கள் சொல்லி ,நிவேத்தியம் செய்து அவளின் திருவடியை வணங்க வேண்டும் .
  • நவராத்திரி நாட்களில் தாம்பூலம் கொடுப்பதும் ,வாங்குவதும் நல்லது .வெற்றிலை ,பாக்கு ,மஞ்சள் ,குங்குமம் ,வஸ்திரம் கொடுப்பது பல மடங்கு பலனைத்  தரும் .அம்மா 9 நாட்கள் மகிசாசுரனிடம் போர் புரிந்து ,10வது நாள் வெற்றியுடன் வருவதைத் தான் விஜய தசமி நாளாக கொண்டாடுகிறோம் .அன்று செய்யும் நல்ல காரியங்கள் வெற்றியைத்  தரும்.
  • நன்றி வணக்கம்

















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக