ஞாயிறு, 25 அக்டோபர், 2015

சுமங்கலி பூஜை

என் அன்பு தோழிகளுக்கு என் அன்பார்ந்த வணக்கங்கள் .நவராத்திரி சீரும் சிறப்புமாக கொண்டாடிட்டோம் .நவராத்திரி நாட்களில் நமக்கு தெரிந்தவர்கள் ,நண்பர்கள் அனைவரையும் அழைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது .

support அண்ட் subcribe tamilnattu samayal  in my  you  tube channel


அடுத்த நவராத்திரிக்கு இன்னும் ஒரு வருடம் காத்து இருக்க வேண்டும் .இந்த 10 நாட்களும் எப்படி நேரம் போனது ?என்றே எனக்கு தெரியவில்லை .பூஜை ,சுலோகம்,பாடல்கள் என போய் கொண்டு இருந்தது .


அம்பிகைகளின் அருளுடன் மீண்டும் பதிவை எழுதுகிறேன் .என் தோழிகள் ,குடும்பம் இதை எழுத உதவியாக இருப்பது நான் செய்த பாக்கியம் என்றே சொல்லலாம் .

இன்னிக்கு சுமங்கலி பூஜையைப் பற்றி எழுதலாம் அது பயனுள்ளதாக இருக்கும் என எண்ணுகிறேன் .







அம்பிகையின் திவ்விய நாமங்களை சொல்லி வழிபடும் ஸ்ரீ லலிதா சகஸ்ர நாமம் 967 வது திருபெயராக சுவாஷினி என்ற பெயர் அம்மனுக்கு கொடுத்து சிறப்பிக்கிறது .

சுவாஷினி என்றால் மங்களம் நிறைந்தவள் என்று பொருள் .சுவாஷினி தான் சுமங்கலி என்று காலப்போக்கில் மாறியது .

கணவனோடு கூடி இல்லறத்தை நல்லறமாக நடக்கின்ற பெண்களே சுமங்கலி  என அழைக்கப்படுவாள் .


நல்ல இல்லம் நடத்துகின்ற பெண்ணை இந்து மதம் பராசக்தியின் வடிவமாகவே பார்க்கிறது .அந்த பெண்களை வழிபடுவது பராசக்தியையே வழிபடுவதாகும் .

சுமங்கலி பூஜை நவராத்திரி தினத்தில் நடைபெறுவது சிறப்பானது .ஒரு வீட்டில் நெடு நாட்களாக திருமணம் ஆகாமல் கன்னி பெண் இருந்தால் அந்த பெண்ணின் தோஷத்தை நீக்க பூஜை நடத்தலாம் .

சுமங்கலி பூஜை எல்லா தோஷங்களையும்  நிவர்த்தி செய்யும் என்பது  நம்பிக்கை .

சுமங்கலி பூஜை எப்படி செய்வது?


இல்லத்தை தூய்மைப்படுத்தி ,மாக்கோலமிட்டு ,மாவிலை தோரணம் கட்டி அழகுபடுத்த வேண்டும்.
சுவாமி படங்களுக்கு பூ,தூபம்  போட்டு விளக்கேற்ற வேண்டும்.

சுமங்கலி பூஜைக்கு 1,3,5,7,9 என்ற எண்ணிக்கையில் அவரவர் வசதிக்கு ஏற்றவகையில் பெண்களை அழைக்கலாம் .

நம் வீட்டிற்கு வரும் பெண்களை நல்ல முறையில் அழைக்க வேண்டும் .தேவியின் வடிவங்கள் அவர்கள் என எண்ணி ,வரவேற்க வேண்டும். தாம்பாள தட்டில் நிற்க வைத்து இல்லத்தலைவி பாத பூஜை செய்யவேண்டும் .சந்தனம் ,குங்குமம்,மலர்கள் கொடுத்து பெண்களை மனையில் மரியாதையுடன் அமர செய்ய வேண்டும்.ஒவ்வொரு பெண்ணையும் பராசக்தியாக கருதி ,தீபாராதனை செய்து வழிபட வேண்டும்.

தனித்தனியாக பஞ்சாங்க நமஸ்காரம் செய்து ,அவர்களுக்கு புடவை ,ரவிக்கை ,மஞ்சள் ,குங்கும சிமிழ் ,கண்ணாடி ,வெற்றிலை ,பாக்கு ,பூ ,பழம் ,தட்சனை கொடுக்க வேண்டும் .இதில் எவை உங்களால் முடியுமோ அதை வாங்கி கொடுக்கலாம் .ஆனால்  தாம்பூலம் அவசியம் கொடுக்க வேண்டும் .

பூஜைக்கு வரும் பெண்களுக்கு உணவு கொடுக்க வேண்டும்.வந்த பெண்கள் சாப்பிட்ட பிறகே ,இல்லத்தலைவி சாப்பிட வேண்டும் .மீண்டும் ஒரு முறை வந்த பெண்களை வணங்கி விட்டு வழியனுப்ப வேண்டும்.

இந்த பூஜை செய்ய உகந்த நாட்கள் திங்கள் ,புதன்,வெள்ளி .


இந்த தினங்களில் ராகு காலம் இல்லாத எந்த நேரமும் நல்ல நேரமே .இந்த பூஜை செய்யப்படும் வீட்டில் வறுமை ,நோய் ,துன்பம்,தோஷம் நீங்கி வளமோடு வாழ்வார்கள் என்பது ஐதீகம் .இந்த ஐதீகத்தில் பக்தியும் இருக்கிறது .அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் நல்ல உறவு வைத்துக் கொள்ள வழிவகுக்கிறது .


அம்மனின் அருள் என்றென்றும் நிலைத்து ,இன்புற்று இருக்க  வேண்டுவோம் .

என் பதிவைப் படிக்கும் தோழிகள் உங்கள் கருத்தை பகிர்ந்து கொண்டால் ,எனக்கு ஊக்குவிக்கும் விதமாக இருக்கும் .

நன்றி வணக்கம் .

உங்கள் அன்பு தோழி
ஈஸ்வரி






























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக