ஹாய் பிரண்ட்ஸ் எப்பிடி இருக்கிறீர்கள் ? எல்லோரும் நவராத்திரி கொண்டாடிக்கிட்டு இருப்பீர்கள்? .சந்தோஷாமாக கொண்டாடுங்கள் .
இன்னிக்கு நவராத்திரி 8ம் நாள் .சரஸ்வதிக்குரிய நாள் .நாளை சரஸ்வதி பூஜை இருப்பதால் அதைப் பற்றி எனக்கு தெரிந்ததை பகிர்ந்து கொள்ளலாம் என இதை எழுதுகிறேன் .
சரஸ்வதி பூஜை எல்லோருக்கும் பொதுவான பூஜை ஆகும் .கொலு வைத்து இருப்பவர்கள் ,வைக்காமல் இருப்பவர்கள் அனைவருமே செய்யும் பூஜை ஆகும் .நவராத்திரியை மூப்பெரும் தெய்வங்களான துர்க்கா ,லக்ஷ்மி ,சரஸ்வதியை வணங்குவதற்காகவே உள்ள நாட்கள் .
முதல் மூன்று நாட்கள் துர்க்கைக்கும் ,அடுத்த மூன்று நாட்கள் லக்ஷ்மிக்கும் ,அடுத்த மூன்று நாட்கள் சரஸ்வதிக்கும் உரியவை .10ம் நாள் மூன்று தேவியரும் சேர்ந்து பராசக்தியாக தோன்றி ,மகிஷ்சாசுர அரக்கனை வதம் செய்து வெற்றி வாகை சூடுகிறாள் .அதையே விஜய தசமியாக கொண்டாடுகிறோம் .
சரஸ்வதியை கலைமகள் என்று அழைப்பர்.சரஸ்வதியை ஒவ்வொரு வீட்டிலும் படம் வைத்தோ ,விக்கிரகம் வைத்தோ வணங்கலாம் .அன்று ஆயுத பூஜை என்பதால் அலுவலகங்களிலும் பயன் படுத்தி வரும் இயந்திரங்களை வைத்து வணங்குவர்.
கல்வி, ஞானம் ,கலைகளில் வளர்ச்சி தருபவள் சரஸ்வதி .சரஸ்வதிக்கு வெள்ளை தாமரை ,முல்லை ,மல்லிகை,நந்தியா வட்டி ,சம்பங்கி ,தும்பைப் பூ ,வெள்ளரளி அணிவிக்கலாம் .
உயிர் உள்ளவற்றிலும் ,உயிர் அற்ற பொருட்களிலும் நீக்கமற இருப்பவள் .அதனாலேயே ,ஆயுத பூஜையும் சரஸ்வதி பூஜையுடன் கொண்டாடுகிறோம் .
கல்வியுடன் கலைகளுக்கும் உரியவள் சரஸ்வதி .அவல் ,பொரி ,பொட்டுக்கடலை ,சர்க்கரை சேர்த்து கலந்து நிவேதினம் செய்யலாம்.
அவரவருக்கு ஏற்ற காலை அல்லது இரவு நேரத்தில் பூஜை செய்யலாம். கடலை சுண்டல் ,தேங்காய் சாதம் ,பால் சாதம் ,இனிப்பு வகைகள் வைத்து சரஸ்வதியை வணங்கலாம் .
புத்தகம் ,எழுது பொருள் ,கல்வி உபகரணங்கள் ,வாகனங்கள் ,கணினிகள் போன்றவைகளுக்கு சந்தனம் ,குங்குமம் வைத்து வணங்க வேண்டும் .
நன்றி வணக்கம் .

கொலு வைப்பவர்கள் தான் தாம்பூலம் கொடுக்க வேண்டும் என்பது இல்லை .இந்த நாட்களில் கொலு வைக்காதவர்கள் கூட அக்கம் பக்கத்தில் உள்ள பெண்களை அழைத்து தாம்பூலம் கொடுக்கலாம் .இவ்வாறு செய்தால் அன்னையின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்பது உறுதி .
என் வீட்டில் அம்மன் மூவரும் அழகாக வீற்றிருப்பது என் மனத்தை கொள்ளை கொள்ள செய்கிறது .தினமும் பாடல்கள் ,பூஜைகள் செய்வது மனதிற்கு சந்தோஷம் கிடைக்கிறது . இதே சந்தோஷ த்துடன் ,நீங்களும் என்றென்றும் சந்தோசமாக இருக்க மூன்று தேவியரையும் பிராத்திக்கிறேன் .சந்தோஷமாக சரஸ்வதி பூஜையை கொண்டாடுங்கள் .
நன்றி வணக்கம் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக