புதன், 30 செப்டம்பர், 2015

இறைவனுக்கு அர்ப்பணிக்கும் பொருட்களும் ,பலன்களும்

ஹாய் பிரண்ட்ஸ் ,

வணக்கம் .நாம் எல்லோரும் சாமி கும்பிட கோவிலுக்கு போவோம் .அப்படி போகும் போது  வெறும்
கையுடன் போகக்கூடாது .பொதுவாக, நம் உறவினர்கள் வீட்டிற்கு போனால், அங்கே , சின்ன
குழந்தைகள் ,பெரியவர்கள் இருப்பாங்க .அதனால ,அவங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி கொண்டு போக வேண்டும் .

சாதாரண மனிதர்களுக்கே இப்படினா ?நம்மை எல்லாம் படைத்த அம்மாவையும் ,அப்பாவையும் பார்க்கப்  போகும் போது வெறும் கையோட போனால் நல்லவா இருக்கும் ? அவங்ககிட்ட இல்லாதது இல்லை . ஆனாலும் நம் சக்திக்கு முடிந்த பூ ,பழம்  .கற்பூரம் கொண்டு செல்வதில் தவறு ஒன்றும் இல்லையே?.நம்ம கையால் ஒரு தீபத்தை ஏற்றி வழிபட்டால், அதில் கிடைக்கும் சந்தோஷமே தனிதான் போங்கள் .

இன்னிக்கு அதைப்பற்றிதான் இந்த பதிவில் எழுதுகிறேன் .

சுவாமியையும் ,அம்பாளையும்  அபிஷேகம் பண்ணும் பொருட்களும்,பலன்களும் 


பழங்கள் ---ஜன வசீகரம்

பஞ்சாமிர்தம் ----வெற்றி ,தீர்க்க ஆயுள்
பால் ---ஆயுள் விருத்திதயிர் ----திடகாத்திரம்தேன் ----சங்கீத வன்மைநெய் ---சுகவாழ்வு ,மோட்சம்கரும்பு சர்க்கரை ----பகைவரை ஒழிக்கும்  இளநீர் ---நன்மக்கட் பேறு ,போகம்விபூதி ----ஞானம்சந்தனம் ----சுவர்க்க போகம்பன்னீர் ---புகழ்வஸ்திரம் -----வெகுமதிபுஸ்பம் ----  சந்தோஷம்கற்பூரம் ---- அத்வைத முக்திகுங்குமம் ----  மங்களம்மாப் பொடி -----  கடனை நீக்கும்

செவ்வாய் ,வெள்ளிக் கிழமைகளில் அபிஷேகம்  செய்வது நல்ல பலனைக் கொடுக்கும் .

வாழ்க!வளமுடன்!

நன்றி .மீண்டும் அடுத்த பதிவில்

என்றும் உங்கள் தோழி ஈஸ்வரி  



















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக