ஹாய் ப்ரண்ட்ஸ்
அனைவருக்கும் வணக்கம் . இன்னிக்கு துர்க்கை அம்மனை பற்றி எனக்கு தெரிந்ததை பகிர்ந்து
கொள்ளலாம்னு இருக்கிறேன் .
துர்க்கை பார்வதி தேவியின் அவதாரம் எனலாம்.துர்க்கை என்றால் "துன்பத்தை போக்குபவள் "
துன்பத்தை போக்கி இன்பத்தை தருபவள் நம் துர்க்கா .பத்து கைகளில் ஆயுதம் ஏந்தி ,
சிங்கத்தின் மீது சவாரி செய்யும் காட்சியைப் பார்க்க நமக்கு இரண்டு கண்கள் போதாது.
இப்ப துர்க்கை எப்படி அவதாரம் எடுத்தாங்கனு பாப்போமா ?
ஒரு சமயம் உலதத்தையே தன் கைக்குள் கொண்டு வர அசுரபலம் கொண்ட அசுரன் சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்தான்.சிவனோ தன்னை வணங்குபவர்கள் யாராக இருந்தாலும் கொடுக்கும் கருணைக் கடல் ஆயிற்றே !உடனே அசுரனுக்கு வரத்தை கொடுத்தார்.
அசுரன் அவன் வேலையை காட்டி விட்டான்.அது என்ன தெரியுமா?.நம் கருணா மூர்த்தி சிவனையே
கொல்ல முற்பட்டான்.கணவனுக்கு ஒரு பிரச்சனை என்றால் நம் மானிடப் பிறவி மனைவியர் சும்மா இருப்பார்களா ? நம் தாய் பார்வதி தேவியர் உலகத்தையே ஆள்பவர் ஆயிற்றே ! சும்மாவா இருப்பார்?
உடனே,துர்கையாக மாறி அவனை அழித்தாள் .இந்த நிகழ்ச்சியை கருவாக கொண்டு 10 நாட்கள்
சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. கீழே விழும் அசுரனின் தலையை துர்க்கை அம்மன் சிம்மவாகனத்துடன் தன கையில் ஏந்துகிறாள்.
அசுரனின் ரத்தம் பூமியில் பட்டவுடன், இரத்தத்தின் வழியாக மீண்டும் அசுரனாக உருவெடுக்காகக்
கூடாது என்று எண்ணிய துர்க்கை ,சண்டி அம்மனை அசுரனின் இரத்தத்தை உறிஞ்சி கட்டளையிட்டாள் .
துர்கா பூஜைக்கு எலுமிச்சை விளக்குகள் பயன்படுத்தபடுகிறது.
எலுமிச்சை தீய சக்தியை அண்ட விடாது .கண் திருஷ்டியை போக்கி ,கெட்ட ஆவிகளை விலக்க
செய்யும் .நம்மிடம் உள்ள கோபம் ,காமம்,பேராசை,மாயை போன்றவற்றை கடவுளுக்கு முன் எரிய விட வேண்டும் .
எலுமிச்சை பழத்தை நறுக்கும் போது ஐம் என்ற மந்திரத்தையும்,மூடியை திறக்கும் போது க்ரீம்
என்ற மந்திரத்தையும் சொல்லி பஞ்சு திரி போட வேண்டும் .எண்ணெய் ஊற்றும் போது க்லீம் என்று சொல்லி ஊற்ற வேண்டும்.விளக்கை துர்க்கை முன் வைத்து சாமுண்டாய விச்சே என்று சொல்லி வைக்க வேண்டும்.
ஐம் --சரஸ்வதி
க்ரீம் --லக்ஷ்மி
க்லீம் ---காளி யை குறிக்கும்.
வெள்ளிக் கிழமையை ராகு கால நேரத்தில் 10.30 லிருந்து 12 மணி வரை விளக்கு ஏற்றினால் நம்
பிரச்சனை நீங்கி ,செழிப்போடும் ,சந்தோசமாகவும் வாழலாம் .
கோவிலில் துர்க்கையை பார்த்து தீபம் ஏற்றக்கூடாது .நம்மை பார்த்து ஏற்ற வேண்டும்.
ஞாயிற்று கிழமை ராகு கால வேளை மதியம் 4.30 முதல் 6 மணியாக இருப்பதால் அந்த நேரத்தில் விளக்கு போட்டால் நோய்கள் குணமாகும் .இரு விளக்கு போடலாம் .9விளக்குகள் போடலாம் .
செவ்வாய் கிழமை விளக்கு ஏற்ற குடும்பம் மற்றும் தனிப்பட்ட வேண்டுதல்கள் நிறைவேறும்.
சரி நண்பர்களே ! எனக்கு தெரிந்த விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைந்து , என் பதிவினை முடிக்கிறேன் .
நன்றி மீண்டும் அடுத்த பதிவில்
இந்த பதிவை பார்த்து உங்கள் கருத்துக்களை எழுதினால் , எனக்கு மேலும் மேலும் எழுதுவதற்கு ஒரு தூண்டு கோலாக அமையும் .
உங்கள் அன்பு தோழி
ஈஸ்வரி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக