திருமாலின் கையில் இருக்கும் சக்கரம் இருப்பதைப் பார்த்திருப்போம் .ஆனால் அந்த சக்கரம் யாரு?என்று நிறைய பேருக்கு தெரிந்திருக்காது .அந்த சக்கரம் யாரு ?அதன் மகிமை என்ன ?என்பதைப் பற்றி இந்த பதிவில் நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் .
பக்தியில் பல வகை உண்டு .நமக்கு தெரிந்த ஆன்மீகக் கருத்துக்களை நாலு பேர் தெரிந்து கொள்ளுவது ஒரு வகையான பக்தி என்று சொல்லலாம் .நானும் அந்த வகைதான் .என் பதிவின் மூலமாக பயன்பெறுகிறார்கள் என்பது நான் சுவாமிக்கு செய்யும் பணியாக எண்ணி இந்த பதிவை எழுதுகிறேன் .
சக்கரம் என்பது சக்கரத்தாழ்வாரை குறிப்பதாகும் .பகைவர்களை அழிக்கும் ஆயுதமாக சக்கரத்தாழ்வார் விளங்குகிறார் .
சக்கரத்தாழ்வாருக்கு ஸ்ரீ சுதர்சனர் ,ஸ்ரீ சக்கரம் ,திகிரி ,ஸ்ரீ சக்கரம் ,திருவாழியாழ்வான் எனும்
திருநாமங்கள் உண்டு .ஸ்ரீ சுதர்சனர் என்பதற்கு நல்வழி காட்டுபவர் என்று பொருள் .சுதர்சனம் மங்களமானது .
ஸ்ரீ சுதர்சனர்
ஸ்ரீ சக்கரத்தாழ்வார் முன் புறத்திலும் ,யோக நரசிம்மர் பின் புறத்திலும் இருப்பார்கள் .16 கைகள் ,
அவற்றில் சக்கரம் ,ஈட்டி ,கத்தி ,கோடரி ,அக்னி ,மாவட்டி ,தண்டம்,சக்தி எனும் 8 ஆயுதங்கள்
வலது புறம் இருக்கும் .
இடது புறம் சங்கு,வில் ,கண்ணி ,கலப்பை ,உலக்கை,கதை ,வஜ்ரம் ,சூலம் போன்ற 8 ஆயுதங்களை
கையில் ஏந்தியிருப்பார் .
யோக நரசிம்மர்
நான்கு கரங்களுடன் யோக நரசிம்மர் உள்ளார் .
அந்த 4 கரங்களும் அறம்,பொருள் ,இன்பம் ,வீடு ஆகியவற்றை தன்னை நாடி வரும் அடியவருக்கு வழங்குவதாக ஐதீகம்.
மதுரையில் உள்ள மேலூரில் திருமோகூர் ஆலயத்தில் சக்கரத்தாழ்வார் மிகச் சிறப்பு உடையவர் .
இவரை வணங்கினால் மன அமைதியின்மை ,நிலையற்ற தன்மை ,கெட்ட கனவு ,எதிர்மறை எண்ணங்கள் ,பில்லி ,சூனியம் ,ஏவல் ,சித்தபிரமை ,
புத்தி சுவாதீனம் இல்லாமை போன்ற கெடுகளிலிருந்து விடுபடலாம்.
சக்கரத்தாழ்வார் சந்நிதியில் நெய்தீபம் ஏற்றி ,
"ஓம் நமோ பகவதே மகா சுதர்சனாய நம " என்று சொன்னால் கிரக தோஷம் விரைவில் நீங்கி விடும் .
இவருக்கு உகந்த நாள் ----வியாழன் ,சனி .
சனிக்கிழமை தரிசிக்க வாழ்வு வளம் பெரும்.
சிவப்பு மலர்களால் மாலை சூட்டி ,சக்கரத்தாழ்வாரை வழிப்பட்டால் நினைத்த காரியம் ஈடேறி , வெற்றி கிட்டும்.
அவரை நோக்கி ஓரடி எடுத்துவைத்தால், அவர்
உடனே இரண்டடி முன் வைத்து நம் பிரச்சனைகளையும் ,துன்பங்களையும் தீர்த்து
வைப்பார் .
கொடிய முதலையிடம் மாட்டிக் கொண்டு போரிட முடியாமல் ஆதிமூலமே !என்று அலறிய
கஜேந்திரன் என்னும் யானையை காப்பாற்ற முன் வந்ததும் இந்த சக்கரமே .
சிசுபாலன் என்ற அசுரனின் தாய்க்கு அவன் செய்யும் 100 பிழைகளை பொறுத்து கொள்வதாக வாக்களித்தார் கிருஷ்ணன்.சிசுபாலன் 101 வது பிழையை செய்ததால் ,கிருஷ்ணனின் ஆணைப்படி ,சீறி எழுந்து அழித்ததும் இந்த சக்கரம் தான் .
தீயவர்களை அழிக்கவே ,விஷ்ணு கையில் இருக்கும் சக்கரத்தாழ்வார் எனும் ஸ்ரீ சக்கரம்
செயல்படுகிறது .
என்ன பிரண்ட்ஸ்! இப்பொழுது ஸ்ரீ சக்கரத்தைப் பற்றி தெரிந்திருப்பீர்கள்! என்ற சந்தோசத்தில், இன்னிக்கு வெள்ளிக்கிழமை என்பதால் குபேரலக்ஷ்மி பூஜை செய்ய கிளம்புகிறேன் என்று கூறி ,என் பதிவை முடிக்கிறேன் .
இன்னும் பல ஆன்மீகத் தகவலுடன்.
எங்கள் அன்பு தோழி ,
ஈஸ்வரி
support அண்ட் subcribe tamilnattu samayal in my you tube channel
மகாவிஷ்ணுவின் கைகளில் பல்வேறு ஆயுதங்கள் இருக்கின்றன .அவர் வலது கையில் இருக்கும் ஆயுதமான ஸ்ரீ சக்கரம் மிகவும் முக்கியமானது .சக்கரம் என்பது சக்கரத்தாழ்வாரை குறிப்பதாகும் .பகைவர்களை அழிக்கும் ஆயுதமாக சக்கரத்தாழ்வார் விளங்குகிறார் .
சக்கரத்தாழ்வாருக்கு ஸ்ரீ சுதர்சனர் ,ஸ்ரீ சக்கரம் ,திகிரி ,ஸ்ரீ சக்கரம் ,திருவாழியாழ்வான் எனும்
திருநாமங்கள் உண்டு .ஸ்ரீ சுதர்சனர் என்பதற்கு நல்வழி காட்டுபவர் என்று பொருள் .சுதர்சனம் மங்களமானது .
ஸ்ரீ சுதர்சனர்
ஸ்ரீ சக்கரத்தாழ்வார் முன் புறத்திலும் ,யோக நரசிம்மர் பின் புறத்திலும் இருப்பார்கள் .16 கைகள் ,
அவற்றில் சக்கரம் ,ஈட்டி ,கத்தி ,கோடரி ,அக்னி ,மாவட்டி ,தண்டம்,சக்தி எனும் 8 ஆயுதங்கள்
வலது புறம் இருக்கும் .
இடது புறம் சங்கு,வில் ,கண்ணி ,கலப்பை ,உலக்கை,கதை ,வஜ்ரம் ,சூலம் போன்ற 8 ஆயுதங்களை
கையில் ஏந்தியிருப்பார் .
யோக நரசிம்மர்
நான்கு கரங்களுடன் யோக நரசிம்மர் உள்ளார் .
அந்த 4 கரங்களும் அறம்,பொருள் ,இன்பம் ,வீடு ஆகியவற்றை தன்னை நாடி வரும் அடியவருக்கு வழங்குவதாக ஐதீகம்.
மதுரையில் உள்ள மேலூரில் திருமோகூர் ஆலயத்தில் சக்கரத்தாழ்வார் மிகச் சிறப்பு உடையவர் .
இவரை வணங்கினால் மன அமைதியின்மை ,நிலையற்ற தன்மை ,கெட்ட கனவு ,எதிர்மறை எண்ணங்கள் ,பில்லி ,சூனியம் ,ஏவல் ,சித்தபிரமை ,
புத்தி சுவாதீனம் இல்லாமை போன்ற கெடுகளிலிருந்து விடுபடலாம்.
சக்கரத்தாழ்வார் சந்நிதியில் நெய்தீபம் ஏற்றி ,
"ஓம் நமோ பகவதே மகா சுதர்சனாய நம " என்று சொன்னால் கிரக தோஷம் விரைவில் நீங்கி விடும் .
இவருக்கு உகந்த நாள் ----வியாழன் ,சனி .
சனிக்கிழமை தரிசிக்க வாழ்வு வளம் பெரும்.
சிவப்பு மலர்களால் மாலை சூட்டி ,சக்கரத்தாழ்வாரை வழிப்பட்டால் நினைத்த காரியம் ஈடேறி , வெற்றி கிட்டும்.
அவரை நோக்கி ஓரடி எடுத்துவைத்தால், அவர்
உடனே இரண்டடி முன் வைத்து நம் பிரச்சனைகளையும் ,துன்பங்களையும் தீர்த்து
வைப்பார் .
கொடிய முதலையிடம் மாட்டிக் கொண்டு போரிட முடியாமல் ஆதிமூலமே !என்று அலறிய
கஜேந்திரன் என்னும் யானையை காப்பாற்ற முன் வந்ததும் இந்த சக்கரமே .
சிசுபாலன் என்ற அசுரனின் தாய்க்கு அவன் செய்யும் 100 பிழைகளை பொறுத்து கொள்வதாக வாக்களித்தார் கிருஷ்ணன்.சிசுபாலன் 101 வது பிழையை செய்ததால் ,கிருஷ்ணனின் ஆணைப்படி ,சீறி எழுந்து அழித்ததும் இந்த சக்கரம் தான் .
தீயவர்களை அழிக்கவே ,விஷ்ணு கையில் இருக்கும் சக்கரத்தாழ்வார் எனும் ஸ்ரீ சக்கரம்
செயல்படுகிறது .
என்ன பிரண்ட்ஸ்! இப்பொழுது ஸ்ரீ சக்கரத்தைப் பற்றி தெரிந்திருப்பீர்கள்! என்ற சந்தோசத்தில், இன்னிக்கு வெள்ளிக்கிழமை என்பதால் குபேரலக்ஷ்மி பூஜை செய்ய கிளம்புகிறேன் என்று கூறி ,என் பதிவை முடிக்கிறேன் .
இன்னும் பல ஆன்மீகத் தகவலுடன்.
எங்கள் அன்பு தோழி ,
ஈஸ்வரி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக