அன்பார்ந்த ஆன்மீக நண்பர்களுக்கு என் இனிய வணக்கங்கள்.என்னுடைய blog யை நிறைய பேர் பார்த்து உங்கள் கருத்தையும் சொல்லுவது மிகவும் சந்தோசமான விஷயம்.அதே போல் என்னுடைய you tube சேனல் tamilnattu சமையல் channal லையும் பார்த்து உங்கள் கருத்தை தெரிவியுங்கள்.அதில் ஆன்மீக விஷயங்களையும் போட்டுள்ளேன்.LIKE கொடுத்து subcribe பண்ணி, தொடர்ந்து பார்த்து உங்கள் கருத்தை தெரிவிக்கவும்.
Published on Jul 11, 2018
ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை கட்டும் முறையும்,வழிபாடும் Tamilnattu Samayal
இந்த பதிவை ஒரு தோழி கேட்டதால் உங்களிடம் SHARE பண்ணுகிறேன் .படித்து பயன் பெறுங்கள்.
குலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்துக்கொண்டு வருகிறார்களோ அவர்களை எந்த கிரகமும் ஒன்று செய்துவிடமுடியாது.
குலதெய்வத்திற்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் தெய்வங்கள் மாறலாம் ஆனால் அதன் சக்தி ஒரே அளவில் இருக்கும்.குலதெய்வத்தின் அருள் இல்லை என்றால் அந்த வீட்டில் நீங்கள் எப்பேர்பட்ட மகானை வைத்து பூஜை செய்தாலும் ஒரு புண்ணியமும் கிடைக்காது.பிற தெய்வத்தை வணங்குங்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை. நீங்கள் பிறதெய்வத்தை வணங்கினாலும் உங்களின் குலதெய்வத்தை வணங்கிய பிறகு நீங்கள் பிற தெய்வங்களின் கோவிலுக்கு சென்றால் மட்டும் அந்த தெய்வத்தின் புண்ணியம் கிடைக்கும். உங்களது குலதெய்வம் கோவிலுக்கு மாதம் ஒருமுறை கண்டிப்பாக நேரில் சென்று பூஜை செய்துகொள்ளவேண்டும்.மற்ற கோவில்களுக்குச் சென்று பூஜை செய்வதற்கும்,குல தெய்வத்தை வணங்குவதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு.மற்ற கோவில்களுக்குச் செல்லும்போது தேங்காய்,பழம் வாங்கி அர்ச்சனை செய்து திரும்புவீர்கள்.ஆனால் குலதெய்வத்தை வழிபடச்செல்லும்போது கூடுதலாக ஒரு கடமையும் இருக்கின்றது.உங்களது குலதெய்வம் கோவிலுக்குச் சென்றதும் பொங்கல்வைத்து படையல் போட்டு வணங்கியப்பின்னரே,அர்ச்சனை செய்து திரும்ப வேண்டும்.இதை செய்வதே முறையான குலதெய்வ வழிபாடு ஆகும்.புதிதாக அகல் விளக்கு வாங்கி அதில் நெய் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.
குலதெய்வம் படத்தை வாங்கிவந்து உங்கள் வீட்டு பூஜையறையில் வைத்துக்கொள்ள வேண்டும்.உங்களது மணிப்பர்ஸில் எப்போதும் வைத்திருக்க வேண்டும்.
பூஜை அறையில் குலதெய்வத்திற்கு என அகல் விளக்கு ஒன்றில் தீபம் ஏற்ற வேண்டும்.குலதெய்வ கோவிலுக்கு செல்ல இயலவில்லை எனில் நம் வீட்டில் சர்க்கரை பொங்கல் செய்து அவரை நினைத்து வழிபாடு செய்யலாம்.வீடு கட்டுவதற்கும்,திருமணம் செய்வதற்கும் முன்பு குலதெய்வத்தை வழிபட்டப்பின்னரே செயலில் இறங்கிட வேண்டும்.குலதெய்வ வழிபாட்டை முக்கியம் என்று சொல்லுவதற்கு காரணம் ஒவ்வொருவரின் குலதெய்வம் மட்டுமே அவர்களுக்கு நன்மை செய்யும். வேறு தெய்வங்களை நீங்கள் வணங்கினாலும் குலதெய்வம் வழியாக மட்டுமே அனைத்தும் கிடைக்கும் என்பதை பல ஆன்மீகவழிகளில் முயற்சி செய்து பார்த்து சொல்லும் மகான்களின் உண்மை.
இன்னும் புதிய ஆன்மீக விஷயங்களை ஷேர் பண்ணுகிறேன்.
நன்றி வணக்கம்.உங்கள் தோழி
ஈஸ்வரிசரவணன்
ஈஸ்வரி சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக