முருகனுக்கு பிடித்த சாக்லேட் நைவேத்தியம்!
பொதுவாக இந்துமத தெய்வங்களுக்கு அவல், கடலை, மோதகம் என்பவற்றையே நைவேத்தியமாக படைப்பதுண்டு. ஆனால் கேரளாவில் உள்ள இந்த பாலமுருகனுக்கு பிடித்த நைவேத்தியம் என்னவென்று பாருங்களேன்.
குழந்தையும் தெய்வமும் ஒன்றென கூறுவார்கள். அதற்கேற்ப, குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சாக்லேட்தான் இந்த பாலமுருகனுக்கும் பிடித்த நைவேத்தியமாம்.
சாக்லேட் கடவுளுக்கு நைவேத்தியமாக படைக்கும் இந்த ஆலயம் இந்தியாவின், கேரளா மாநிலத்தின் ஆலப்புழா நகரில் அமைந்துள்ளது. சுமார் 300 ஆண்டுகள் பழமையான பாலமுருகன் ஆலயத்திலேயே இந்த விநோத சம்பவம் இடம்பெற்று வருகிறது.
கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்லாமிய குடும்பத்தினர் குறித்த ஆலயத்திற்கு சென்றுள்ளனர். அதன்போது, அந்த குடும்பத்தை சேர்ந்த குழந்தை கோயில் மணியை அடித்துள்ளார்.
குழந்தையின் செயலை கண்டித்து பெற்றோர் அவரை அழைத்துச் சென்றுள்ளனர். வீட்டிற்கு சென்ற குழந்தைக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டதுடன், முருகனின் நாமத்தை உச்சரிக்க தொடங்கியுள்ளார்.
தெய்வ குற்றத்தினாலேயே இப்படி நேர்ந்ததாக எண்ணிய பெற்றோர், பரிகாரம் செய்வதற்காக கோயிலுக்கு சென்றுள்ளனர். இதன்போது, கோயிலின் கருவறைக்குள் சென்ற குழந்தை தனது கையிலிருந்து சாக்லேட்டை கடவுளுக்கு படைத்துள்ளார்.
இதனையடுத்து, குழந்தை உடனடியாக நலமடைந்துள்ளார். இதனால், பாலமுருகனுக்கு பிடித்த பிரசாதம் சாக்கலேட்தான் என்பது செவிவழியாக பரவ, தற்போது பக்தர்கள் முருகனுக்கு
சாக்லேட்டை நேர்த்திக்கடனாக செலுத்த தொடங்கியுள்ளனர்.
சாக்லேட்டை நேர்த்திக்கடனாக செலுத்த தொடங்கியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக