ஞாயிறு, 15 ஜூலை, 2018

ஆடி மாதம்… ஆனந்தம் அருளும் மாதம்!

friends subcribe my you tube  channal 
Tamilnattu samayal .support,like    and share your  friends  

காமாட்சி அம்மன் விளக்குக்கு பொட்டு வைப்பது எப்படி?


ஆடி மாதம் முதல் நால் பூஜை எப்படி செஇவது க்கான பட முடிவு

காமாட்சி அம்மன் விளக்குக்கு பொட்டு வைப்பது எப்காமாட்சி அம்மன் விளக்குக்கு பொட்டு வைப்பது எப்படி?படி?

ஆடி மாதம்… ஆனந்தம் அருளும் மாதம்! 

டி மாதம்… அம்மனை வணங்கி ஆராதனை செய்யும் மாதம்.
இந்த  மாத அம்மன் வழிபாடு என்பது நமது கலாசாரத்தில்  இணைந்த ஒன்று.  வருடம் முழுதும் கோவிலுக்கு சென்று அம்மனை  வழிபடலாம்.  என்றாலும் என்றாலும் சாஸ்திர உருவாக்கப்படி  12 மாதங்களை  இரு அயனங்களாகப் பிரித்துள்ளனர். தை முதல் ஆனி வரை உத்தராயணம் என்றும், ஆடி முதல் மார்கழி  வரை தட்சிணாயனம் என்றும் அழைக்கப்பெறும். சூரியன், ஆடி மாதத் தொடக்கத்தில், தனது பாதையை தெற்கு நோக்கித் திருப்பிச் (தக்ஷ்ணம் அல்லது தட்சிணம்) செல்லும் (அயனம்) காலம். ஆகவே, இது ‘தட்சிணாயன புண்ணியகாலம்’  என்றழைக்கப்படுகின்றது. (தை மாதம் சூரியன் வடக்கு (உத்தரம்) நோக்கிச் செல்வதால் ‘உத்தராயண புண்ணிய காலம்’ ஆகும்). உத்தராயணம் தேவர்களின் பகல் காலமாகவும். தட்சிணாயனம் இரவுக் காலமாகவும் அமைகின்றது. அதாவது, பூலோகத்தில் ஒரு வருட காலம் என்பது தேவலோகத்தில் ஒரு நாளாகும். ஆடி மாதம் தேவர்களின் மாலை நேர ஆரம்பமாகும்.
suriya god க்கான பட முடிவு
தட்சிணாயனம் தொடங்கும் ஆடி மாதத்தில் சூரியனில் இருந்து சூட்சும சக்திகள் வெளிப்படுகின்றன. வேத பாராயணங்கள், மந்திரங்கள், ஜெபங்கள், மாந்திரீகம் ஆகியவற்றுக்கு ஆடி மாதம் சிறந்ததாகக் கருதப்படுகிறது.  பிராண வாயு அதிகமாகக் கிடைப்பதும் ஆடி மாதத்தில்தான். இது ஜீவ ஆதார சக்தி அதிகம் உள்ள மாதமாகவும் கருதப்படுகிறது.
ஆனால், பெரும்பாலான நம் மக்களின் மனநிலை என்ன தெரியுமா ? ‘ஆடிமாதம்… எந்த நல்ல காரியத்துக்கும் சரிப்பட்டு வராத மாதம்’ என்கிற நம்பிக்கை, இங்கே பல காலமாக ஊறிக் கிடக்கிறது. திருமணம், காதணி விழா, மஞ்சள் நீராட்டு விழா என்று எல்லாவிதமான சுப நிகழ்ச்சிகளையும் இந்த மாதத்தில் புறக்கணிப்பது இங்கே தொடர்கிறது. அதே நேரத்தில், கோயில், தெய்வம் சார்ந்த அனைத்து விசேஷங்களுக்கும் ஆடி மாதம்தான் கொண்டாட்ட மாதமாக இருக்கிறது. குறிப்பாக, அம்மன் கோயில்களில் தீக்குழி இறங்குவது, செடல் உற்சவம், பூச்சொரிவது, காவடி எடுப்பது, கூழ் ஊற்றுவது, கஞ்சி ஊற்றுவது என்று ஆடி வெள்ளிகளில் தெருவுக்குத் தெரு திருவிழாதான். ஆனால், ‘ஏன் ஆடியில் மட்டும் அம்மனுக்குச் சிறப்பு? ஏன் இத்தனை திருவிழாக்கள்..?’ என்று ஆராயப் போனால், தமிழ் மண்ணின் கலாசாரப் பெருமையும், மனிதநேயமும், மருத்துவ விளக்கமும் நமக்குப் புரிய வரும்.
karumariamman
பொதுவாக அம்மன் வழிபாடு என்பது கிராமப்புற மக்கள், விவசாயம் செய்யும் மக்கள், அறியாமையில் வாழ்ந்த மக்களின் வழிபாடாகத்தான் தொடங்கியது. அந்தக் காலத்தில் அம்மை, காலரா போன்ற நோய்கள் வந்து, கொத்துக் கொத்தாக மனித உயிர்களைப் பலி வாங்கும். அது எப்படி வருகிறது, எப்படிப் பரவுகிறது என்று அறியாமலேயே  அப்பாவித்தனமாக உயிர்களை இழந்தார்கள் அன்றைய மக்கள். அதிலிருந்து தப்பியவர்கள் மூலமாகத் தோன்றியதுதான் அம்மன் வழிபாடு. ‘அம்மை நோயிலிருந்து தங்களைக் காப்பாற்றுவது மாரியம்மன்தான்’ என்றும், ‘காலரா நோயிலிருந்து காப்பாற்றுவது காளியம்மன்தான்’ என்றும் முடிவு செய்து, அதற்கான உருவை அமைத்து, வழிபாடு செய்து வேண்டிக் கொண்டார்கள். அதில் அர்த்தமும் இருந்தது.
அம்மை நோய் என்பது கடும் வெயில் காலமான சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய மாதங்கள் முடிந்து அடுத்த பருவ காலம் தொடங்குகிற ஆடியில்தான் அதிகமாகக் காணப்படும். அதற்குக் காரணம் அதீத வெப்பம் மற்றும் வறட்சியான காற்று. வெப்பம் மற்றும் வறட்சியால் ஏற்படுகிற அந்த நோய், மழை பெய்து மண் குளிர்ந்தால்தான் குறையும். அதனால் மாரி எனும் மழையை அவர்கள் தெய்வமாக உருக்கொண்டார்கள்.
கொற்றவை வழிபாடு நம் தொன்மைக் காலத்தில் இருந்தே இருக்கிறது. எதிரியை அழிக்கப் புறப்படும் போது கொற்றவையை வழிபட்டுவிட்டுத்தான் கிளம்பினார்கள் பழந்தமிழர்கள். கொற்றவைதான் பிற்காலத்தில் காளியாகவும் துர்க்கையாகவும் மாறினாள்.
ஆடி வெள்ளியன்று குலதெய்வக் கோயிலுக்குச் சென்று பொங்கல் வைக்க வேண்டும்.குலதெய்வத்தின் அருளும் நமக்கு கிடைக்கும்.எந்த தெய்வத்தை கும்பிடுவதற்கு முன்னும் குலதெய்வத்தை முதலில் கும்பிட்ட் பிறகு தான் மற்ற தெய்வங்களை கும்பிட வேண்டும்.தொடர்புடைய படம்
ஆடி மாதத்தின் சிறப்புகள்… 
ஆடியை ‘கற்கடக மாதம்’ என்றும் அழைக்கலாம்.
‘ஆடி செவ்வாய் தேடிக் குளி’ என்பது பழமொழி. செவ்வாய்க்கிழமை எண்ணெய் தேய்த்து, தலை குளித்து, அம்மனை வழிபட்டு வந்தால் பெண்களின் மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை.
amavasai
ஆடி அமாவாசையில் முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் வழக்கமும் உண்டு. தொடர்புடைய படம்ஆடி 18ம் தேதி ஆடிப்பெருக்கு விழாவாகக் கொண்டாடப்படுகிறது.  இந் நாட்களில் நதிகளில் நீர்ப்பெருக்கு அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. அன்று தாலி மாற்றி புதுத்தாலி அணிவார்கள். இம்மாதம் விவசாயிகளுக்கும் உகந்த மாதமாகும்.  ‘ஆடிப்பட்டம் தேடிவிதை’ என்று நம் முன்னோர் காரணமில்லாமல் சொல்லவில்லை. அடுத்த போகத்துக்குத் தேவையான தானியங்களை விதைப்பதும் ஆடிமாதத்தில்தான்.
ஆடி வெள்ளியின்  சிறப்புகள், பூஜை முறைகள்…
 ஆடி வெள்ளி அன்று வாசலில் கோலமிட்டு, பூஜையறையில் குத்துவிளக்கேற்றி, நிவேதனமாக பால் பாயசம் அல்லது சர்க்கரைப் பொங்கல் வைத்து, அம்மன் பாடல்களைப் பாடி, பூஜை செய்தால் நல்ல பலன் கிட்டும். அன்று சிறு பெண் குழந்தைக்கு ரவிக்கை, தாம்பூலம், சீப்பு, சிமிழ், கண்ணாடி வளையல் தந்து சிறப்பிக்க வேண்டும். அவர்களை அம்மனாகப் பாவித்து அமுதளிக்க வேண்டும்.
thulasi poojai க்கான பட முடிவு
ஆடி வளர்பிறை துவாதசியில் துளசி பூஜை செய்வதால் பல நற்பலன்களைப் பெறலாம். துளசி மாடத்துக்கு முன் கோலமிட்டு, மாடத்துக்குப் பொட்டிட்டு, துளசிக்கு மாலையிட்டு பூஜிக்க வேண்டும்.  குளித்த பின்தான் துளசிக்கு நீரூற்ற வேண்டும்.
ஆடி வெள்ளியில்  மாலை நேரத்தில் மகாலட்சுமி வழிபாடு, அம்பிகை, ஆதிபராசக்தி, அகிலாண்டேஸ்வரி, தெய்வங்களை வழிபடுவது சிறப்பு. அப்போது சுமங்கலிப் பெண்களுக்கு தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம் ஆகியவற்றோடு ரவிக்கைத் துணியும் வைத்துத் தருவது நலம் தரும்.
தொடர்புடைய படம்ஆடி வெள்ளியன்று மகாலட்சுமியை வழிபட்டால் நிறைந்த செல்வம் இல்லம் தேடி வரும் என்பது நம்பிக்கை. ஆடி கடைசி வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த வரலட்சுமி விரதம் மேற்கொள்ளப்படுகிறது.
சிவனின் சக்தியைவிட அம்மனின்  சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார் என்பது வழமை . இம்மாதத்தில் வரும் ஆடி செவ்வாய், ஆடி வெள்ளிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அன்றைய தினங்களில், இல்லத்தின் வாசலில் கோலமிட்டு, பூஜையறையில் குத்துவிளக்கேற்றி, ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம் மற்றும் பல அம்மன் பாடல்களைப் பாடலாம் . பால் பாயசம், சர்க்கரைப் பொங்கல் போன்றவற்றை நிவேதனம் செய்து அம்மனை வழிபட வேண்டும்.
‘அருளோடு வரும் பொருள் தான் சிறப்பு‘ என்பது ஐதீகம். அந்தப் பொருள் வளம் தரும்  லட்சுமியை, ‘திருமகள்‘ என்றும் சொல்கிறோம். எட்டுவகை லட்சுமியின அருள் இருந்தால் நம் வாழ்க்கை சிறப்பாக அமையும் என்பது உண்மை. அந்த  வரம் தரும்  லட்சுமியை ‘வரலட்சுமி‘ என்றழைத்து விரதம் இருந்து வழிபட ஏற்ற நாள் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையாகும்.
ஆடி மாதம் முதல் நால் பூஜை எப்படி செஇவது க்கான பட முடிவுஆடி செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில்  அம்மன் கோயில்களில் அம்மனுக்கு வளைகாப்பு வைபவம் நடைபெறும். ஆயிரக்கணக்கான கண்ணாடி வளையல்களைக் கோர்த்து அம்மனுக்கு அலங்காரம் செய்வர். 3 நாட்கள் கழித்து கண்ணாடி வளையல்களை சுமங்கலிகளுக்குப் பிரசாதமாக வழங்குவர். சுமங்கலிகள் குடும்பத்தில் நீடூழி சுகமாக வாழ்வர். வளையல்களைப் பிரசாதமாகப் பெறும் கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். குழந்தை வரம் கிடைக்கும். ஆடி வளர்பிறை துவாதசியில் மகாவிஷ்ணுவை எண்ணி விரதமிருந்தால் செல்வ வளம் பெருகும்.
ஆடி வளர்பிறை தசமியில் திக்வேதா விரதம் ஏற்க வேண்டும் . திக்தேவதைகளை அந்தத்தத் திசைகளில் வணங்கி வழிபட்டால் நினைத்த காரியம் தடையின்றி நடைபெறும்.ஆடி வளர்பிறை ஏகாதசி அன்று அன்னதானம் செய்தால், பசித்த வேளைக்கு உணவு தேடிவரும். பசுவுக்கு அகத்திக்கீரை வழங்கினால் தீவினைகள் நீங்கும் என்பர்.
ஆடி அற்புதங்கள் நிறைந்த மாதம் மட்டும் அல்ல;
அம்மனை வழிபடும் பக்தர்களுக்கு நினைத்த அற்புதங்களை
அள்ளித்தரும் மாதமும் கூட!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக