1.அட்ட வீரட்டானத் தலங்கள் எவை? அங்கே சிவபெருமான் செய்த லீலைகள் என்ன?
திருக்கண்டீயுர் – பிரமன் சிரம்/தலை கொய்தது
திருக்கோவலூர்- அந்தகாசுரனை சம்ஹரித்தது
திரு அதிகை – திரிபுரத்தை எரித்தது
திருப்பறியலூர்- தக்கன் சிரம் கொய்தது
திருவிற்குடி- சலந்தாசுரனை சம்ஹரித்தது
வழுவூர்- யானையைத் தோலுரித்தது
திருக்குறுக்கை- காமனை எரித்தது
திருக்கடவூர்- யமனை உதைத்து விரட்டியது
2.சப்தவிடங்கத் தலங்கள் எவை?அங்குள்ள விடங்கரின் பெயர் என்ன?அங்கு இறைவன் என்ன நடனம் ஆடினார்?
திருவாரூர் -வீதி விடங்கர்- அசபா நடனம்
திருநள்ளாறு- நகர விடங்கர்- உன்மத்த நடனம்
திருநாகைக்காரோணம்- சுந்தரவிடங்கர்- வீசி நடனம்
திருக்காறாயில்- ஆதி விடங்கர்– குக்குட நடனம்
திருக்கோளிலி- அவனிவிடங்கர்- பிருங்க நடனம்
திருவாய்மூர்- நீல விடங்கர் – கமல நடனம்
திருமறைக்காடு- புவனி விடங்கர் – ஹம்சபாத நடனம்
3.பஞ்ச பூதத் தலங்கள் எவை?
1.திருவாரூர், காஞ்சீபுரம் – பிருதிவி (பூமி)
2.திருவானைக்கா – அப்பு (நீர்)
3.திருவண்ணாமலை- தேயு (தீ)
4.திருக்காலத்தி -வாயு (காற்று)
5.சிதம்பரம் – ஆகாசம் (வெற்றிடம்)
5.சிதம்பரம் – ஆகாசம் (வெற்றிடம்)
4.தாண்டவ சிறப்புத் தலங்கள் எவை?
அசபா தாண்டவம்- திருவாரூர்,
ஆனந்த தாண்டவம் – தில்லைச் சித்திர கூடம், பேரூர்,
ஞான சுந்தர தாண்டவம் – மதுரை,
ஊர்த்துவ தாண்டவம் – திருப்புக் கொளியூர்
பிரம தாண்டவம்- திருமுருகன்பூண்டி
5.கீழ்கண்ட ஆலயங்களைச் சொல்லவும்:
சபாபதி ஆலயம்- சிதம்பரம்;
தியாகேசர் ஆலயம்- திருவாரூர்;
ஐங்கரனாலயம்-திருவலஞ்சுழி;
குமரனாலயம்-திருவேரகம்;
சண்டேசுரனாலயம்-சேய்ஞ்ஞலூர்;
விடையினாலயம்-திருவாவடுதுறை;
வடுகனாலயம்-சீர்காழி.
6.சப்த(7)ஸ்தான க்ஷேத்ரங்கள் எவை?- .
திருவையாறு, திருப்பழனம், திருச் சோற்றுத்துறை , திருவேதிகுடி,
திருக்கண்டியூர்,திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம்.
7.பன்னிரு திருமுறை ஆசிரியர்கள் யார்?
1,2,3 திருமுறை- திருஞான சம்பந்தர்
4,5,6 – திருநாவுக்கரசர்/ அப்பர்
7- சுந்தரர்
8- மாணிக்கவாசகர்
9-திருமாளிகைத்தேவர், சேந்தனார், பூந்துருத்தி நம்பி காடநம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலியமுதனார், புருடோத்தநம்பி,, சேதிராயர்
10-திருமூலர்
11- காரைக்கால் அம்மையார், ஐயடிகள் காடவர்கோன், சேரமான் பெருமாள் நாயனார், நக்கீரதேவர், கல்லாடர், கபிலர், பரணர், இளம் பெருமானடிகள், அதிராவடிகள், பட்டினத்தார், நம்பியாண்டார் நம்பி.
12- சேக்கிழார்
8.நால்வர் யார்?
அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்க வாசகர்
அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்க வாசகர்
9.கீழ்க்கண்ட 10 ஊர்களின் மறுபெயர் என்ன?
திருவாலவாய், கொடுங்குன்றம், திருக்கானப்பேர், கோயில், புள்ளிருக்குவேலூர், குடமூக்கு, நாகைக்காரோணம், திருமறைக்காடு, கச்சி, திருமுதுகுன்றம்
திருவாலவாய்- மதுரை
கொடுங்குன்றம்- பிரான்மலை
திருக்கானப்பேர்- காளையார்கோயில்
கோயில்- சிதம்பரம், தில்லை
புள்ளிருக்குவேலூர்- வைதீஸ்வரன் கோயில்
குடமூக்கு- கும்பகோணம்
நாகைக்காரோணம்– நாகப்பட்டிணம்
திருமறைக்காடு–வேதாரண்யம்
கச்சி– காஞ்சீபுரம்
திருமுதுகுன்றம்- விருத்தாசலம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக